எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

‘மகா விஷ்ணு’[ஆன்மிக ரவுடி] எப்போது வைகுண்டம் திரும்புவார்?!?!?!

‘ரவுடி’ என்பவன் மக்களைத் தாக்கி, அவர்களுக்குச் சொந்தமான பொருட்களைப் பறிப்பவன் மட்டுமல்ல, சிறைவாசத்துக்கு அஞ்சாமல், அடிதடி, குத்துவெட்டு, கடத்தல், கொலை என்று அனைத்துக் குற்றச் செயல்களிலும் ஈடுபடுபவன்.

அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகள் எடுத்தும் இவனைக் கட்டுப்படுத்தவே முடியாத நிலையில், ‘என்கவுண்டர்’இல் போட்டுத் தள்ளுகிறது காவல்துறை.

‘மகா விஷ்ணு’ என்பவன் எதற்கும் அஞ்சாத ஓர் ஆன்மிக ரவுடி[மக்களின் சிந்திக்கும் அறிவை முற்றிலுமாய்ச் சிதைத்து ஒழிப்பவன்; மேல் மட்டப் புள்ளிகளின் ஆதரவைப் பெற்றவன்].

பாஜக சங்கிகளின் ஆதரவோடு, மக்களிடையே குறிப்பாக, மாணவர்கள் மத்தியில், அளப்பரிய மூடநம்பிக்கைகளைப் பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறான்.

அதை ஒரு பொருட்டாக மதிக்காத இவன், என்னிடம் சித்தர்கள் சொன்னதையே பேசினேன். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது”[விகடன்] என்று தன் திமிர்த்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறான்[இவனின் குறிப்பிடத்தக்கதோர் உரை கீழே* இடம்பெற்றுள்ளது].

சமுதாய ரவுடிகளைப் ‘போட்டுத்தள்ள’ ‘என்கவுண்ட்டர்’ உத்தியைப் பயன்படுத்தும் காவல்துறை, இந்த ஆன்மிக ரவுடி மகா விஷ்ணுவை இதே உத்தியைப் பயன்படுத்தி வைகுண்டம் அனுப்பினால் அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்பது நம் எண்ணம்!

                            *   *   *   *   *

*மகா விஷ்ணு, தனது ‘பரம்பொருள்’ என்னும் யூ-டியூப் சேனலில் ‘சூரியனுக்குச் சென்றுவந்த மகா விஷ்ணு, வானத்தில் பறந்த மகா விஷ்ணு, ஆண் துணையே இல்லாமல் குழந்தை பிறக்கும் அதிசயம், நெருப்பு மழை பொழிய வைக்கும் ரகசியம்...' என அறிவியலுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்களை மனம்போன போக்கில் பேசி இருக்கிறார். தற்போது மகா விஷ்ணுவின் இந்த எல்லை தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு கடந்து சென்றுள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என தற்போது ஆறு நாடுகளில் தனது பரம்பொருள் பவுண்டேஷனின் கிளையைப் பரப்பி இருக்கிறார் இந்த மகா விஷ்ணு.! https://www.vikatan.com/government-and-politics/superstitious-speech-in-schools-re-treat-camp-abroad-the-story-of-pramporul-mahavishnu

‘மகா விஷ்ணு’ என்னும் மூடனை வள்ளுவருடன் ஒப்பிட்டு மகான் ஆக்கும் சங்கிகள்!!!

#பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனன் ஆன மகா விஷ்ணு, சென்னை அசோக் நகர் பள்ளியில் மறுபிறவி, பாவம், புண்ணியம் பற்றிப் பேசியது சர்ச்சை ஆகியுள்ளது. மறுபிறவி என்பதே மூடநம்பிக்கை என்று வெவ்வேறு அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மறுபிறவி பற்றிய கருத்துக்கள், சங்க இலக்கியங்களில் நிறையக் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் போற்றிப் புகழப்படும் திருக்குறளில்கூட, இது குறித்த ஏராளமான குறட்பாக்கள் உள்ளன#

யாரோ முகவரி இல்லாத ஒரு சங்கியின் கருத்தை வெளியிட்டு, மகா விஷ்ணு என்னும் மகாப் பெரிய மூடனுக்கு[போன பிறவியில் செய்த பாவம்தான் அழகில்லாமலும் ஊனமாகவும் பிறக்கக் காரணம் என்கிறான்] வக்காலத்து வாங்கியிருக்கிறது தினமலம் இதழ்.







இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் போன்ற அறிஞர்களின் கருத்துகளில் சில காலப்போக்கில் அர்த்தமற்றதாக ஆகிவிடுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

வள்ளுவரும் மனிதர்தான்[தெய்வப் புலவரல்ல]. அவரின் கருத்துகள் காலமாறுதலுக்கு ஏற்ப மறுக்கப்படுவதில் தவறே இல்லை.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்னும் குறட்பா முற்றிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகும்.

அந்த அறிஞனின் ஆகச் சிறந்த 1330 குறள்களில் சில ஏற்கத்தக்கவை அல்ல என்பதால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் எவ்விதத்திலும் குறைந்துவிடாது.

இந்த அறிவியல் யுகத்தில், பாவம் தண்டனை என்று பேசித் திரியும் ஓர் எச்சக்கலையின்[‘முழுமுதல் கடவுள்’ என்னும் பெயரில்கூட ஊருலகை ஏமாற்றலாம்] உளறலுக்கு வள்ளுவரைத் துணைக்கு அழைப்பது அயோக்கியத்தனம் ஆகும்.

மூடநம்பிக்கைகளை வைத்தே பிழைப்பு நடத்தும் சங்கிகளின் ஆதரவோடு இவன் மாதிரியான நச்சுக் கிருமிகள் இனியும் உருவாகாமல் தடுப்பது நம் தலையாய கடமை ஆகும்.

* * * * *

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/-reincarnation-ideas-abound-thirukkural-is-a-witness-to-maha-vishnus-speech--/3725845