எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 4 ஜனவரி, 2025

சங்கிகளின்[பாஜக] சில்லுண்டித்தனம்!!!

என் நடுநிலையான, ஆனால் அதிரடியான விமர்சனங்களை எதிர்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ திராணி இல்லாத சங்கிகள்[பாஜக] முகநூல்[facebook] நிர்வாகத்திற்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள்.

நான் செய்த நியாயமான முறையீடுகளை நிர்வாகம் ஏற்க மறுத்ததால், இப்போதெல்லாம் முகநூல் என் இடுகைகளை நிராகரிக்கிறது.

‘பார்வை’களின் எண்ணிக்கை சற்றே குறைகிறது எனினும் அது குறித்து நான் வருந்தவில்லை, சங்கிகளிடத்தில் என் பதிவுகள் மிக அதிக அளவில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதால்.

முகநூல் அறிவிப்பு:

Your message couldn't be sent because it includes content that other people on Facebook have reported as abusive.

மாடமாளிகை அல்ல, தனக்கென்று சிறு குடில்கூட இல்லாத தியாகி மோடி!!!

ம் பிரதமர் மோடிஜிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும்[டில்லி முதல்வர் > 14 பெப்ரவரி 2015 – 17 செப்டம்பர் 2024] இடையேயான அவர்களின் சொத்து குறித்த விவாதத்தில்,  எனக்கென ஒரு வீடுகூடக் கட்டிக்கொள்ளாமல், நாடு முழுவதும் ஏழை மக்களுக்காக 4 கோடி வீடுகளைக் கட்டியுள்ளேன்” என்று மோடிஜி சொன்னார்.

அதற்குப் பதிலடியாக.....

தனக்கென ரூ.2,700 கோடியில் வீடு கட்டி, ரூ.10 லட்சம் மதிப்புள்ள உடை அணிந்து[பயன்படுத்தும் பேனா ஒரு லட்சம் ரூபாய் என்கிறார்], ரூ.8,400 கோடி மதிப்புள்ள விமானத்தில் பயணிப்பவர் இதைப் பேசுவதில் நியாயமில்லை” என்று அதிர்ச்சிச் செய்தி வெளியிட்டிருக்கிறார் கெஜ்ரிவால்.

நம் கேள்வி:

இருவரில் எவர் சொல்வது உண்மை?

கெஜ்ரிவால் நம்மைப் போல் ஒரு சாதாரண மனிதர். அவர் பொய்யுரைப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளது.

மோடிஜியோ கடவுளால் அனுப்பப்பட்டவர். அவர் சொல்வதில் அணுவளவும் பொய் கலக்க வாய்ப்பே இல்லை.

ஆகவே மக்களே, கோடி கோடிகளில் சொத்துச் சேர்க்கிற ஊழல் அரசியல்வாதிகளுக்கிடையே, தனக்கென ஒரு வீடுகூடக் கட்டிக்கொள்ளாத, அப்பழுக்கற்ற தியாகியான மோடி அவர்கள் தாமாக ஓய்வு பெறுவாரேயானால்[அவரின் கடைசி மூச்சுவரை தேர்தலில் தோல்வியுறச் செய்ய எந்தக் கொம்பனாலும் முடியாது] அவர் வசிப்பதற்காகக் குறைந்தபட்சம் ஒரு சிறு குடிலேனும் கட்டித்தருவது[அரண்மனை போன்ற பங்களாவும் கட்டலாம்] நம் அனைவருடைய கடமையும் ஆகும்.

மறவாதீர், அவர் ஓய்வு பெறும் அந்த நாளுக்காகக் காத்திருப்போம்.

வாழ்க மோடிஜி! தொடர்க அவரின் மக்கள் பணி!!

* * * * *

https://www.dinakaran.com/prime-minister-modi-reply-arvind-kejriwal/