எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 7 ஜனவரி, 2023

அத்துமீறும் ஆளுநருக்குச் சில சத்தான ஆலோசனைகள்!!!

“இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும்போது அதற்குள் இருக்கும் ‘தமிழ்நாடு’ ஒரு நாடாக இருக்க முடியாது. தமிழகம் என்று சொல்வதே சரி. அப்படிச் சொன்னால்தான் தமிழகம் பாரதத்தின் அடையாளத்தைப் பெறும்” என்று சொல்லியிருக்கிறார் நம் மதிப்பிற்கும் மிகு மரியாதைக்கும் உரிய ஆளுநர் ரவி அவர்கள். இப்படிச் சொன்னதன் மூலம், தமிழ்நாட்டை ஆள்பவன்[ஆளுநர்] நானே என்பதையும் உறைக்கும் வகையில் சொல்லி உறங்கும் தமிழனுக்கு விழிப்பூட்ட முயன்றிருக்கிறார்[https://www.bhoomitoday.com/not-tamil-nadu-tamilagam-is-correct-word-says-govenrnor-rn-ravi/].

உத்தரப்பிர‘தேசம்’, மத்தியப்பிர‘தேசம்’, மஹா’ராஷ்ட்ரா’[பெரிய தேசம்], ஆந்திரப்பிரதேசம் எல்லாம் இருக்கும்போது தமிழ்த்‘தேசம்’[நாடு] இருக்கக்கூடாதா என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆளுநரை மூச்சுத் திணறச் செய்துகொண்டிருக்கிறார்கள் தமிழினப் பற்றாளர் பலரும்.

‘தமிழகம்’ என்பதே சரி என்கிறார் இந்தப் பத்தரைமாற்று ‘இந்தி’யர்.

திருவாய் மலர்வதற்கு முன் ’தமிழகம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரிந்துகொண்டாரா இவர்?[இங்குள்ள அண்ணாமலையார், வானதி அம்மையார், பொன்னார், எச்சி ராஜார் போன்ற ‘பரிசுத்த’ இந்தியர்களைக் கேட்டிருக்கலாம். அவர்களுக்கும் தெரியாது என்பது வேறு விசயம்].

'அகம்’ என்னும் சொல், மனம், மனை[வீடு], இடம் என்று பல பொருள்களை[அர்த்தம்] உள்ளடக்கியது[https://ta.wiktionary.org/s/guo].

’தமிழ்+அகம்’... தமிழ் மொழி வழங்கும் இடம் என்றும், தமிழர் வாழும் இடம் என்றும், தமிழர் ஆளும் இடம் என்றும் கொள்ளுதல் வேண்டும்.

தமிழர் வாழும்/ஆளும் இடம்தான் தமிழகம், அதாவது நீங்கள் வெறுக்கும் ‘தமிழ்நாடு’.

ஆளுநப் பெருந்தகை அவர்களே,

தமிழ்நாடு என்னும் மாநிலத்தைத் தமிழகம் என்று சொல்லலாம் என்று நீங்கள் பேசியிருப்பது தவறு என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். எனவே.....

“தமிழ்நாடு என்று மட்டுமல்ல, தமிழகம் என்றும் சொல்லக்கூடாது” என்று உடனடியாக அறிவித்துவிடுங்கள்.

அறிவிப்பதோடு இந்த மாநிலத்திற்கு, தமிழ் என்னும் சொல்லோ, தமிழர் என்னும் சொல்லோ இடம் பெறாத வகையில் வேறு ஒரு சொல்லைக் கண்டுபிடித்து, இந்த மாநிலத்தின்[தமிழ்நாடு] பெயரையே மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

இந்த மாநிலத்தை ஆளுபவர்[ஆளுநர்] என்ற வகையில் உங்களின் இந்த முடிவை நடுவணரசிடம் எடுத்தோதி, அவசர ஆணை[அவசரச் சட்டம்] பிறப்பிக்கச் செய்யுங்கள்.

இதைவிடவும், இயலுமாயின்.....

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களின் இப்போதைய பெயர்களை நீக்கிவிட்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுக்கச் சொல்லுங்கள்[‘இந்திய மாநிலம் 1’, மாநிலம் 2... 3...4...5 என்றிப்படி.

இது, அவரவர் தாய்மொழிப் பற்றையும், இனப்பற்றையும் முற்றிலுமாய் இழந்து, “நான் ’இந்தி’யன்” என்னும் ஒத்த உணர்வுடன் வாழ்ந்திட வழிவகுக்கும்.

செய்வீர்களா மேதகு, திருமிகு, சீர்மிகு ஆளுநர் அவர்களே?
=========================================================================================

இதயம் நிமிடத்திற்கு ‘30 முறை துடிப்பது’ ஆபத்தானதா?


 ‘கோரா’ கேள்வி:

”என் இதயத் துடிப்பு மிகக் குறைவாக உள்ளது. எந்த நேரத்திலும் இறந்துவிடுவேனோ என்று கவலைப்படுகிறேன். அதன் காரணமாக என் தூக்கம் ரொம்பவே பாதிக்கப்படுகிறது. சரிசெய்ய முடியுமா?”

ஓய்வு நிலையில், பெரியவர்களின் இயல்பான இதயத் துடிப்பு[பிபிஎம்] நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இருக்கும். அறுபதுக்கு[60]க் குறைவாக இருந்தால், அது ‘பிராடிகார்டியா’[bradycardia] என்று அழைக்கப்படுகிறது.


விளையாட்டு வீரர்களுக்கும், தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் எல்லா நேரத்திலும் ‘பிராடிகார்டியா’ உள்ளது. அவர்களின் இதயத் துடிப்பு சராசரி நபரைவிடவும் மிகவும் குறைவாக இருக்கும். அதாவது, நிமிடத்திற்கு 40 முதல் 50 வரை துடிக்கும்.


ரத்தத்தை வெளியேற்றுவதில்[‘பம்ப்’ செய்தல்] அவர்களின் இதயம் மிகவும் திறம்படச் செயல்படுவதே இதற்குக் காரணமாகும்.


உங்கள் இதயத் துடிப்பு மிகவும் குறைவாக இருந்தாலும், தலைசுற்றல், மார்பு வலி, மூச்சுத் திணறல், சோர்வு, பலவீனம் என்று எந்தவித அறிகுறியும் இல்லாமலிருந்தால் உங்களின் இதயம் சிறந்த முறையில் மிக நன்றாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்; ஆயுளும் நீடிக்கும் என்பது உறுதி.


மேற்குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மருத்துவரை அணுகுதல் வேண்டும்,


எலியின் இதயம் நிமிடத்திற்கு 500 முறை துடிக்கிறது. அதன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், ஆமையின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 6 தடவைகள் மட்டுமே. அது 200 ஆண்டுகள்வரை வாழமுடியும்.


ஆகவே, இதயத் துடிப்பு குறைவாக உள்ள மனிதர்களாலும் 90, 100 என்று மிகப் பல ஆண்டுகள் வாழ்ந்திட முடியும் என்பதை மறவாதீர்கள்.

* * * * *

உலகச் சுகாதார அமைப்பின்[World Health Organization] அறிவிப்பின்படி, இயல்புக்குக் குறைவான இதய[bradycardia]த் துடிப்பு பற்றி, கோவை ‘காது, மூக்கு, தொண்டை’ டாக்டர் எழிலரசு[EZHIL ENT Hospital, No 10, Govindasamy nagar, Andal layout road, Iyer hospital bus stop, Singanallur-641005[Mobile: 9790555825, 8883254066] Coimbatore(Opposite Coimbatore Stock Exchange)] நமக்கு அனுப்பிய செய்தி:

54066




***முழு உடல் நலத்துடன் வாழும் ஒருவரின் உறங்கும்போதான இதயத்துடிப்பு, குறைந்தபட்சம் 30 ஆகவும் இருக்கலாம் என்பது அறியத்தக்கது.

==========================================================================================