அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
“வரும் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை மூவர்ணக்கொடியை நீங்கள் உங்கள் வீடுகளில் ஏற்றி, மூவர்ணக்கொடியுடன் செல்ஃபி எடுங்க”ன்னு உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லியிருக்கார்.
நாம்: “எடுத்துடுவோம்.”
அவர் அதோடு முடிக்கல. “அதனை https://hargartiranga.com என்ற இணைய தளத்தில் பதிவேற்றுங்கள்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாம்: பதிவேற்றிடலாம். ஆனால்.....
அவரிடம் நாம் முன்வைக்கும் விண்ணப்பம்.
“அமித்ஷா அவர்களே, HarGharTirangaன்னு உங்க ஆட்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி ஏதோ சொல்லுறீங்க. முதலில் இதைத் தூக்கிக் கடாசிட்டு, என்ன சொல்ல நினைக்கிறீங்களோ[நீங்களும் உங்கள் முன்னோடி மோடியும்] அதை இந்தியாவிலுள்ள பெரும்பான்மைக் குடிமக்களுக்குப் புரிகிற மொழியில்[ஆங்கிலம் அல்லது மாநில மொழி] சொல்லுங்க.
எல்லோருக்கும் புரிஞ்சா ஒரு வாரம்[9ஆம் தேதி >15ஆம் தேதி] என்ன, நிரந்தரமாகவே வீடுகளில் தேசியக் கொடியை ஏத்திடுவோம்.
எம்மைப் போன்றோரின் இந்தக் கோரிக்கையை ஏற்பீர்களா அமித்ஷாஜி?”
வயநாட்டில் இயற்கைச் சீற்றத்தால் 350க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகியுள்ளன. இடிபாடுகளுக்கிடையே சிக்கி உருக்குலைந்து மரணத்தைத் தழுவியோர் தேடிக் கண்டறியப்பட்டால் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகக்கூடும்.
கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஹெலிகாப்டர் மூலம் பேய் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டிருக்கிறார். ராகுல் தன் சகோதரியுடன் அங்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னதோடு, வீடிழந்தோருக்குக் காங்கிரஸ் கட்சி மூலம் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
நடிகர்கள் பலரும் நிதியுதவி செய்துவரும் நிலையில், ஒரு நடிகர்[மோகன்லால்]கூட சீரழிவுக்கு உள்ளான இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்திருக்கிறார்.
மோடி?
இந்தியாவின் பிரதமரான இவர், இந்த நாட்டை ஆளுவதற்கான ஏராள அதிகாரங்களைப் பெற்றவர். மதம், இனம், மொழி என்று பாரபட்சம் காட்டாமல் அனைவரின் நலம் பேணுவதில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்.
வயநாட்டில் இயற்கை கோரத் தாண்டவம் ஆடி நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும், இவர் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடாமல்[‘நடுவணரசு உதவும்’ என்ற அறிவிப்பு மட்டும் வெளியாகியுள்ளது] புறக்கணித்திருப்பது, கடந்த தேர்தலில் தன் கட்சிக்கு வாக்களிக்காத மாநில மக்களைப் பழிவாங்குகிறார் என்னும் குற்றச்சாட்டுக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பே வெளியான காணொலிகளில்[கீழே இடம்பெற்றுள்ளன] ‘மோடி ஒரு சில நாட்களில் வயநாடு செல்லவுள்ளார்’ என்று தகவல் வெளியாகியுள்ளது.
அந்தச் ‘சில நாட்கள்’ கழிந்தும்கூட, வயநாடு பயணம் மேற்கொள்ளாமல் மோடி அமைதி காக்கிறாரே, ஏன்? [இதைவிடவும் வேறு மிக மிக முக்கியக் கடமைகள் உள்ளனவோ?!]
அயோத்தியில் கோடி கோடியாய்ச் செலவு செய்து கட்டிய ‘பால ராமர் கோயில்’ கூரை, மழை பெய்தால் ஒழுகுவது பற்றியக் கவலையில் மூழ்கிக் கிடக்கிறாரோ?!