பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 7 மே, 2024

அற்ப ஆயுள்! அதிகரிக்கும் சுகபோகங்கள்!!

ன்று கட்டை வண்டிப் பயணம்; 
இன்று விமானம்.
தகவல் அனுப்ப அன்று ஆள் தேவை: 

இன்று விதம் விதமாய்க் கைபேசியும் 

பிறவும்.

இன்னும்,

கண்டு களிக்கக் காணொலிகளும்

தொ.கா.சாதனங்களும்.

மேலும்,

உண்டு மகிழச் சுவை சுவையாய்ப்

புதிய உணவு வகைகள்;

உடலுறவுச் சுகத்தை நீட்டிக்கப்

புதிய புதிய மாத்திரைகள்.

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ 

சுகபோக வசதிகள் இருந்தும்

அத்தனைச் சுகங்களையும் நோயின்றி

அனுபவிக்க 

இப்போதுள்ள ஆயுள் போதாதே!

அறிவியலாளர்கள் சிந்திப்பார்களா?

அறிவாளர்களும்தான்.

                                                 

‘யூடியூப்’ காணொலி[குறைப் பிரசவம்]: 

https://www.youtube.com/shorts/8mhyaLuDOU0?feature=share

திங்கள், 6 மே, 2024

மோடியின் 100% வெற்றிக்கு உதவுபவை பாலராமன் பாதங்களா, வாக்காளர்களின் திருவடிகளா?

டைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலில், மோடியின் ‘பாஜக’ வேட்பாளர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டு அவர் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்பாரோ அல்லவோ, அவர் மட்டுமேனும் வெற்றி பெறுவது மிக அவசியம். இல்லையேல், வெகுவாக மனம் உடைந்துபோவார் என்பது உறுதி.


பரப்புரையில் பல்வேறு உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டும்கூட மீண்டும் ஆட்சிக்கட்டிலைக் கைப்பற்றுவதில் அவர் முழு நம்பிக்கை பெறவில்லை என்பதை, தான் முன்னின்று கட்டிமுடித்த அயோத்திப் பாலராமர் கோயிலுக்குச் சென்று, வேதமந்திரங்கள் முழங்க, நெடுஞ்சாண்கிடையாகச் சிலையின் முன்னால் விழுந்து வழிபட்டதன் மூலம் அறிய இயலுகிறது.

தேர்தலில் வெற்றியைத் தழுவினால், அதற்குப் பாலராமனின் கருணை என்று சொல்லிப் பெருமிதப்படுவார்.

தோற்றுவிட்டாலோ மௌனம் சாதிப்பார்; அல்லது, பழம்பிறப்புகளில் தான் செய்த பாவங்கள் காரணம் என்று சொல்லித் தன்னைத்தானே தேற்றிக்கொள்வார்.


நேர்ந்துகொண்டு, நினைத்த காரியம் நிறைவேறினால் அது கடவுளின் கருணை என்பதும், விளைவு நேர்மாறானது என்றால் பக்தர்கள் தாமே தம் மீது பழி சுமத்திக்கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். மோடியும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல.


எனவே, பாலராமனைச் சரணடைந்ததால், அவர் வெற்றிக் கனியைப் பறிப்பார் என்று உறுதிபடச் சொல்ல இயலாது.


அது 100% சாத்தியப்படுவதற்கான ஒரே வழி.....

இனியும் பாலராமன் சிலை முன்பாகவோ, வேறு சாமிகளின் சிலைகளின் முன்பாகவோ நீட்டிப் படுத்துப் பிரார்த்தனை செய்வதைத் தவிர்த்து, தான் போட்டியிடும் தொகுதி வாக்காளர்கள் அத்தனைப் பேரின் திருவடிகளிலும்[சற்றே குறைந்தாலும் பாதகமில்லை] விழுந்து கும்பிடுவது மிகவும் பலன் தருவதாக அமையும்.


செய்வாரா மோடி? 


செய்தல் வேண்டும் என்பது நம் விருப்பம்!


                                *   *   *   *   *

https://tamil.abplive.com/elections/prime-minister-modi-swami-darshan-at-ayodhya-ram-temple-video-going-viral-on-the-internet-181799