எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

அன்று நிகழ்ந்த ‘அந்த’த் தவறுதான் இன்று சங்கிகளின் ஆதிக்கத்திற்கு வழிகோலியது!

ங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுக்கப் பாடுபட்ட தலைவர்களில் பலரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகவே இருந்தார்கள்.

காந்தி தீவிர ராமபக்தர். ராஜாஜியும் கடவுள் பக்தரே.

சர்தார் வல்லபாய்ப் படேல் பகுத்தறிவாளர் & மதச்சார்பற்றவர் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டவர்.

ஜவகர்லால் நேரு மட்டுமே வாழ்நாளெல்லாம் கடவுள் நம்பிக்கை அற்றவராக, அதாவது நாத்திகராக வாழ்ந்தவர்.

மேற்கண்டவர்களும் பிற தலைவர்களும் முழுக் கவனத்தையும் நாடு சுதந்திரம் பெறுவதில் செலுத்தினார்களே தவிர, இந்த நாட்டு மக்களை ஆட்டிப்படைத்த மூடநம்பிக்கைகளை ஒழிப்பதில் எள்ளளவும் முயற்சி மேற்கொள்ளவில்லை.

ஆகச் சிறந்த பகுத்தறிவாளரான நேரு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் மூடநம்பிக்கை ஒழிப்பில் கவனம் செலுத்தாத நிலையில், போராட்டங்களில் பங்கு பெற்ற பெரியார் மட்டுமே மூடநம்பிக்கை ஒழிப்பில் அதி தீவிரமாக ஈடுபட்டார்.

இடைக்காலத்தில் புற்றீசலாகப் பெருகிய புராணங்களாலும் இதிகாசங்களாலும், மக்கள் மனங்களில் வேரூன்றிவிட்ட மூடத்தனங்களை ஒழிப்பதில் பெரியாரால் ஓரளவுக்கு மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

‘ஈவெரா’ பெரியாரைப் போல இன்னும் சில பெரியார்களேனும் இந்த நாட்டில் உருவாகியிருந்திருந்தால், மக்களில் பெரும்பான்மையோரை மூடநம்பிக்கைகளின் அழுத்தமான பிடியிலிருந்து விடுவித்திருப்பார்கள்.

இந்தியாவிற்கான கேடுகாலமோ என்னவோ அது நிகழவில்லை.

அது நிகழாததால், புராணக் கதைகளில் இடம்பெற்றுள்ள மாந்தர்களையே கடவுள்கள் ஆக்கி, அவர்களுக்குக் கோயில்கள் எழுப்பியும் விழாக்கள் நடத்தியும், மதவெறியைத் தூண்டியும் பெரும்பான்மை மக்களைக் கவர்ந்து, சங்கிகள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்; இன்றளவும் அதைத் தக்கவைத்திருக்கிறார்கள்.

மக்கள் பகுத்தறிவாளர்களாக ஆக்கம்பெற்றால், அல்லது ஆக்கப்பட்டால் மட்டுமே சுயநலச் சங்கிகளின் பிடியிலிருந்து இந்த நாட்டை விடுவிப்பது சாத்தியமாகும். 

மோடி காட்டில் மழை! அது 2047வரை தொடர்ந்து பெய்யும்?