பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
வியாழன், 8 மே, 2025
‘இந். - பாக்.’ போர்> அனைத்துக் கட்சிக் கூட்டம்... அத்தனைப் பேர் மூளையும் சொத்தையா!?
'பாக்.’கைது செய்த ‘பி.கே.சிங்’கைக் காப்பாற்றுபவர் கடவுளா, மோடியா?!
பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர்களும், பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகளைப் படுகொலை செய்தவர்களுமான தீவிரவாதிகள் அதிரடித் தாக்குதல்[Operation Sindoor] மூலம் துவம்சம் செய்யப்பட்டார்கள்[பதிலடி கொடுத்திருப்பதாகப் பாகிஸ்தான் சொல்லிக்கொள்கிறது] என்பது யாவரும் அறிந்ததே.
இந்த வெற்றிக்கு மூலகாரணமான நம் பிரதமர் மோடியைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
இந்தக் கொண்டாட்டச் சுகத்தைச் சீர்குலைக்கும் விதமாக.....
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரராக 17 ஆண்டுகள் பணியாற்றிய பி.கே.சிங் அவர்கள் பாகிஸ்தானியரால் கைது செய்யப்பட்ட அவல நிகழ்வு நினைவுக்கு வந்துதொலைக்கிறது.
நம் பிரதமர் இரவு பகலாய்ப் பாகிஸ்தானுடனான போர் குறித்த சிந்தனையிலேயே மூழ்கியிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இனியேனும் நேரம் ஒதுக்கி, பாகிஸ்தான் மீது இன்னொரு அதிரடித் தாக்குதல் நடத்தி, ‘பி.கே.சிங்’ அவர்களை அவர்களிடமிருந்து பாதுகாப்பாகப் பிரதமர் மீட்பார் என்பது உறுதி.
நம் பிரதமர் அவர்களை இங்கு அனுப்பிவைத்த[இதைச் சொன்ன நம் தலைவர் இது குறித்துப் பின்னர் மறுப்புத் தெரிவித்ததற்குத் தன்னடக்கம் காரணமாகும்] முழுமுதல் கடவுளையும் பிரார்த்திப்போம்.
***** இது ஒரு ‘நினைவூட்டல்’ பதிவு
