எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 31 டிசம்பர், 2024

அவரை ஆளவிடு. இல்லே, நீ ஆண்டுக்கோ. என்னங்கடா இது அசிங்க அரசியல்?

‘யூடியூப்’இல் நுழைஞ்சா, ‘தி.மு.க.’ ஆட்சியைக் கேவலமா திட்டித் தீர்க்குற அண்ணாமலையின் காணொலிகள் வரிசைகட்டி நிற்குது. 

இவரு கையாளுற வசை மொழிகள் அநாகரித்தின் உச்சம்.

மேலிடத்துத் தூண்டுதலால்[?] இந்த மனுசன் அடிக்கிற கொட்டத்துக்கு ஓர் அளவே இல்ல.

ஆதலினால், மோடிஜியிடம் நாம் கேட்டுக்கொள்வது.....

தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்பதுதான் உங்க நோக்கம்னா, கவிழ்த்துடுங்க. 

அடுக்கடுக்கான அவமானங்களை ஸ்டாலின் தாங்குவாரோ அல்லவோ, எங்களால[நான் அவரின் ஆதரவாளன் அல்ல] சகிக்க முடியல.

மீண்டும் வேண்டிக்கிறோம்,  தி.மு.க. ஆட்சியைக் கலைச்சுடுங்க பாஸ்.

ஆட்டுக்காரர் ரொம்பத்தான் களைச்சுப்போயிருப்பார். ஒன்றிய அரசில் அமைச்சர் பதவி கொடுத்து அவரை ஓய்வெடுக்க விடுங்க தலைவரே. 

அபலைப் பெண்களுக்கு அபயக்கரம் நீட்டும் இன்னொரு கிருஷ்ணப் பரமாத்மாவா விஜய்!?!?

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமைக்கு உள்ளான அசம்பாவிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல நடிகரும், ‘த.வெ.க.’ தலைவருமான ‘விஜய்’, தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கீழ்க்காணுமாறு கடிதம் எழுதியுள்ளார் என்பது செய்தி.

#அன்புத் தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனான நான் மன அழுத்தத்திற்கும் சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகியுள்ளேன்.....

யாரிடம் உங்களுக்கான பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதனாலேயே இக்கடிதம்.....

எல்லாச் சூழல்களிலும் நிச்சயமாக உங்களுக்கு உறுதுணையாக நிற்பேன், அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம்#

நடிகரின் நல்ல உள்ளம் நம்மைப் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஆனாலும், இன்றுள்ள எதார்த்த நிலையை நடிகர் விஜய்க்கு அறியச் செய்வது நம் கடமை.

தலைவரே,

அங்கிங்கெனாதபடி அத்தனை அரசியல் கட்சிகளிலும்[த.வெ.க. உட்பட?] இரண்டறக் கலந்திருக்கிறார்கள் ரவுடிகள்[பொருத்தமான தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை].

அவர்களை அடையாளம் கண்டு[இயன்றவரை] அரசியல் களத்திருந்து அகற்றுவதோடு, உரிய தண்டனைகள் பெற்றுத்தந்து தாய்க்குலத்துக்கு முழுப் பாதுகாப்பு வழங்குவது காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு மட்டுமே சாத்தியப்படும்.

நிலைமை இதுவாக இருக்க, எந்த நம்பிக்கையில் நம் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தீர் என்பது புரியவில்லை.

உம் கட்சித் தொண்டர்களையே பாதுகாப்புப் படை வீரர்களாகப் பயன்படுத்துவீரா?[அத்தனைப் பேரும் யோக்கியர்களா?] அதன் பின்விளைவுகள் நன்மை தருவதாகவே அமையுமா?

கயவர்களால் வன்கொடுமைக்கு உள்ளாக நேரிடும் ஒரு பெண்ணோ, பெண்களோ உம்மிடம் முறையிட்டால், இன்னொரு கிருஷ்ண பரமார்த்மாவாக, தொண்டர் படையுடன் ஓடோடிப்போய் நீர் அபயக்கரம் நீட்டுவீரா?

வெற்று வாய்ச்சவடால் வேண்டாம்.

‘தில்’ இருந்தால்.....

லட்சக்கணக்கான உம்முடைய தொண்டர்களை ஏவி, எங்கெல்லாமோ ரவுடிகள் இருப்பினும், அவர்களையெல்லாம் கண்டுபிடித்து, ஒரு பட்டியல் தயார் செய்து, “வாழ்க எங்கள் தலைவர் விஜய்!” என்று முழக்கமிட்டவாறு தொண்டர்கள் புடைசூழ, ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து[ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லாததால்]ப் பட்டியலைச் சமர்ப்பித்து, பட்டியலிலுள்ள அத்தனை ரவுடிகளுக்கும் அவரவருக்குரிய தண்டனையைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை வைக்கலாம்.

இது, ஆளும் தி.மு.க. உட்பட எந்தவொரு அரசியல் கட்சியும் செய்யாத அரும்பணியாக அமையும்.

அடுத்துவரும் தேர்தலில் நம் மக்கள் உம்மை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பார்கள்.

கிஞ்சித்தும் அறநெறி பிறழாத உம்முடைய ஆட்சி கண்டு ஒட்டுமொத்த உலகமும் உம்மைப் பாராட்டும்; வாழ்த்தும்.

செய்வீரா நடிகரே, அல்ல, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவிருக்குக் தலைவரே?

https://news7tamil.live/i-will-be-your-brother-and-your-fortress-t-v-k-leader-vijays-letter-to-the-women-of-tamil-nadu.html#google_vignette -December 30, 2024