எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

புதன், 22 அக்டோபர், 2025

அடித்த பாம்பை[பாகிஸ்தான்] அடிக்கும் பராக்கிரமர்கள் மோடியும் ராஜ்நாத்தும்!!!

ண்மையில் நான்கே நான்கு நாட்கள் நடைபெற்ற ‘இந்தியா-பாகிஸ்தான் போர், பாகிஸ்தான்காரன் மோடியின் பாதக்கமலங்களைக் கண்ணீரால் கழுவியதால் அல்ல, சட்டாம்பிள்ளை டிரம்ப் மிரட்டலால்தான் நிறுத்தப்பட்டது என்பது உலகம் அறிந்த ரகசியம் என்கிறார்கள் நடுநிலை நாட்டவர்கள்.

இந்த ரகசியத்தை அறிந்திருந்தும், தான் நடத்திய ‘ஆப்ரேசன் சிந்தூர்’தான் பாகிஸ்தானியனைப் பணிய வைத்ததாக அவ்வப்போது அறிவிப்புச் செய்து ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைக்கிறார் மோடி.

அவர் அடித்த அடியில் நிலைகுலைந்து, மீண்டெழும் வகையறியாமல் தவித்துக்கிடப்பதாகச் சொல்லப்படும், நம் ‘பக்கா’ எதிரி பாகிஸ்தானியனைக் மிரட்டி[சுற்றிவளைத்து]க், குலைநடுங்கச் செய்திருக்கிறார் நம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதியைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தபோதுதான், மேற்கண்டவாறு மிரட்டினார் அவர். அது.....

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் நமது பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்புக்குள்தான் உள்ளது.” 

“ஒட்டுமொத்த உலகின்[அற்பப் பாகிஸ்தான் உள்ளடக்கம்] ஒவ்வொரு மில்லிமீட்டரும் பிரமோஸ் ஏவுகணையின் வரம்புக்குள்தான் உள்ளது” -என்றிப்படி அவர் பேசியிருந்தால், அதைக் கேட்டு ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் உடம்பும் சிலிர்த்திருக்கும்!

வாழ்க மோடி! ராஜ்நாத்தும் வாழ்க!

https://www.hindutamil.in/news/india/1380198-every-inch-of-pakistan-within-brahmos-range-rajnath-singh.html