அதோ ஒரு பூ.
ஒரு முறை அதைக் கடந்து போனேன்;
மீண்டுவந்து
பறித்து முகர்ந்தேன்;
சிறு சிறு துகள்களாக்
கிள்ளிக் கிள்ளித் தரையில் உதிர்த்தேன்;
காலால் மிதித்தேன்;
பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;
கசக்கினேன்.
என்ன செய்தும்.....
அதை முகர்ந்தபோது
கமகமத்து மணம் பரப்பியது.
பெற்ற தாயின் நினைப்பு வந்தது!
* * * * *
*** இது சுட்ட கவிதை. முகவரியைச் சேமிக்காததால் உள்மனம் சுடுகிறது!

