எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

ஆபாசத்தைக் காட்சிப்படுத்தும் அசிங்கத் தெரு நாய்கள்! அப்புறப்படுத்துவீர்!

தெரு நாய்களை அப்புறப்படுத்துவதற்கான நடுவணரசின்[+மாநில அரசுகள்] நடவடிக்கைகளுக்கு இரண்டு மாத அவகாசம் தந்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் அவற்றிடம் கடிபட்டு நோய்வாய்ப்படுதலும்,  உயிரிழத்தலும் நிகழ்வதைக் காரணம் காட்டியிருக்கிறது அது.

இது குறித்த வாதப்பிரதிவாதங்களும் தொடர்கின்றன.

‘ரேபிஸ்’ குணப்படுத்தவே இயலாத உயிர்கொல்லி நோய் என்பதை எதிர்மறை வாதங்களை முன்வைப்போர் மறத்தல் கூடாது.

பாவம் நாய்கள் என்று கண்டுகொள்ளாமலிருந்தால் இந்தியர்களுக்கான இந்த நாடு நாய்களுக்கானதாக ஒரு காலக்கட்டத்தில் மாறும்{ஒரு பெட்டை நாய் 4 குட்டிகள்வரை போடுகிறது. அவற்றில் இரண்டு பெ.நாய்கள் என்றால் பருவம் எய்தவுடன்[இதற்காகவே கடுவன்கள் காத்திருக்கின்றன] அவையும் தத்தம் பங்குக்கு நான்கு நான்கு என்று ஈன்றெடுத்துப் படு வேகமாக இனவிருத்தி செய்கின்றன}.

தெருக்களில், கண்ட கண்ட இடங்களில் மலம் கழிப்பது  போன்ற சில காரணங்கள் இருந்தாலும், நாய்களை அப்புறப்படுத்துவதற்கு, மிக முக்கியமான ஒரு காரணமும் உள்ளது.

அது.....

மறைவிடங்களைத் தேடிச் செல்லாமல், மக்கள் நடமாடும் இடங்களிலெல்லாம் அந்த அசிங்க’ச் சுகத்துக்காக, ஒரு பெட்டையின் பின்னே ஐந்தாறுக்குக் குறையாமல் ஆண் நாய்கள் திரிவதும், அதற்கான போட்டியில் குரைத்துக்கொண்டும் கடித்துக்கொண்டும் வெறித்தனமாக அவை செய்யும் அசிங்கங்கள் காணச் சகிக்காதவை.

போட்டியில் வெல்லும் கடுவனும் பெட்டையும் நீண்ட நேரம் விடுபட இயலாமல் அல்லாடும் காட்சி காண்போரை முகம் சுழிக்கச் செய்கின்றன.

இந்தக் கன்றாவிக் காட்சியைக் காணும் மணமாகாத இளவட்டங்களின், குறிப்பாக,  பதின்பருவப் பெண்களின் மனநிலை விவரிப்புக்கு அப்பாற்பட்டது.

ஆகவே, தெரு நாய்கள் அகற்றப்படுதல் சரியா தவறா என்னும் கேள்விக்கு இடமே இல்லை.

அவற்றை என்ன செய்வது என்பது பற்றி உரிய வகையில் குழுக்கள் அமைத்து அவற்றின் பரிந்துரைகளைச் செயல்படுத்தலாம்.