வியாழன், 3 அக்டோபர், 2024

முதலிரவில் கோமியம்! முழு அந்தரங்கச் சுகத்திற்கும் குடிக்கலாம்!!

"மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி, நவராத்திரிப் பண்டிகையின்போது கர்பா நடனக் கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கும் முன் இந்துக்களுக்குக் குடிக்ககக் கோமியம் தர வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

பசுவைக் கோமாதா என்று கொண்டாடுவதும், புனிதமான அதன் சிறுநீரைப் பருகிச் சுகானுபோகத்தில் திளைப்பதும் இந்துக்களின் பாரம்பரியப் பழக்கமாகும்.

எனவேதான், "உண்மையான இந்துக்கள் இதை மறுக்கமாட்டார்கள். பந்தலுக்குள் நுழையும் முன் நிச்சயம் கோமியம் குடிப்பார்கள்" என்று சொல்லியிருக்கிறார் பாஜக நிர்வாகி.

ஆக, கோமியம் என்பது உண்மை இந்துக்களின் வாழ்க்கையில் பிரிக்க இயலாத அளவுக்கு இரண்டறக் கலந்துள்ளது எனலாம்.

ஆகவே, கர்பா நடனக் கொண்டாட்டத்திற்குச் செல்லும்போது  மட்டுமல்ல, காலையில் காபி, தேனீர் ஆகியவற்றிற்குப் பதிலாக ஒரு கோப்பை[பெருசு]க் கோமியம் குடிக்கலாம்.

தாகம் எடுக்கும்போதெல்லாம் அருந்தலாம்.

திருமணம் போன்ற விசேடங்களில் விருந்தினரை வழியனுப்பும்போது தாம்பூலப் பையுடன் ஒரு சிப்பம் கோமியம் சேர்த்துக் கொடுக்கலாம்.

புதுமணத் தம்பதியருக்கான முதலிரவில், பாலுக்குப் பதிலாகக் கோமியம்  நிரப்பிய செம்பைப் பெண்ணிடம் கொடுத்தனுப்புவது உத்தமம்.

கணவனும் மனைவியும்[கள்ளக் காமுகர்கள் உட்பட] உடலுறவு கொள்வதற்கு முன்பு கோமியம் குடிப்பதை வழக்கம் ஆக்கலாம்.

இதனாலெல்லாம், இந்துக்கள் பல நன்மைகள் பெறுவதோடு, அவர்கள் இந்து தர்மம் காக்கும் கடமையைச் செய்தவர்கள் ஆவார்கள்.

வாழ்க கோமாதா! வாழ்க கோமியம் குடிக்கும் இந்துக் குடிமக்கள்!!

                                     *   *   *   *   *

https://www.maalaimalar.com/news/national/bjp-leader-propose-gaumutra-sip-as-entry-pass-to-navratri-garba-pandals-740897?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMwssCgAw&utm_content=rundown