கோவை, வடவள்ளிப் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர் ஒரு வழக்குத் தொடர, அது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர், மாவட்ட சமூக நலத்துறையினர், குழந்தைகள் நலத்துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக ஈஷா மையத்தில் நேற்று விசாரணை மேற்கொண்டனர்; இன்றும்[02.10.2024] அது தொடர்கிறது[முழு விவரம் கீழே உள்ள முகவரியில்*].
கடவுள்களின் குரு[சத்>பரம்பொருள்>கடவுள்; குரு> கடவுளுக்குக் குரு]என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட ஜக்கி வாசுதேவன், இந்தியாவின் முன்னாள்/இந்நாள் பிரதமரான மோடிக்கும் குருவாக இருப்பவர்[படம்].
ஆன்மிக நெறி பரப்புவதாகச் சொல்லி[குறிப்பாக ‘யோகா’], வாசுதேவனால் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உருவாக்கப்பட்டதுதான் ‘ஈஷா யோகா மையம்’.
கஞ்சா விற்றது, தன் மனைவி உயிரோடு ‘மகாசமாதி’ ஆனதாகப் பொய் பரப்பியது, இளம் பெண்களைக் கவர்ந்திழுத்துத் துறவிகள் ஆக்குவது[தப்பான காரியங்களுக்கும் பயன்படுத்தலாம்] மூளைச்சலவை செய்து அப்பாவிகளைத் தன் அடிமைகள் ஆக்குவது, நன்கொடைகள் என்னும் பெயரில் கணக்குவழக்கில்லாமல் கோடி கோடியாய்ப் பணம் வசூலித்தது, மரங்கள் வளர்ப்பதாகவும், ஆறுகள் காப்பதாகவும் புளுகி மானாவாரியாய் நிதி திரட்டியது என்று ஏராளக் குற்றச்சாட்டுகள் இந்த நபர் மீது சுமத்தப்பட்டன[தேடுபொறியில், ‘போலிச் சாமியார் ஜக்கி’ என்பது போல் தட்டச்சிட்டுத் தேடுக]; வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
அவற்றால் எல்லாம் இந்த ஆளின் சுட்டு விரலைக்கூட அசைக்க முடியவில்லை.
இவருக்குப் பேராதரவு வழங்கிய மிகப் பெரிய மனிதர்கள் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதாலோ[குருவின் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் விளைவு?] என்னவோ இன்று அந்நிலை மாறியிருக்கிறது.
நீதிமன்ற ஆணைக்கிணங்க இந்தப் போலிக் கோடீஸ்வரச் சாமியாரின் சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழைந்து விசாரணை நடத்தியது/ நடத்துகிறது அரசு இயந்திரம்.
இந்த ஆடம்பரச் சாமியார் செய்த அத்தனை அட்டூழியங்களும் அம்பலத்துக்கு வந்து, இவன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பது நம் மக்கள் விருப்பம்.
அது நிறைவேற வேண்டும் என்றால், வரவேற்கத்தக்க ஆணையை[ஈஷாவில் விசாரணை]ப் பிறப்பித்த உயர் நீதிமன்றம், இனியும் எவரொருவரின் தலையீட்டையும் பொருட்படுத்தாமல் செயல்படுவது மிகவும் அவசியம்.
நீதி வெல்லும் என்று மனப்பூர்வமாய் நம்புவோம்.
* * * * *
* * * * *
***** திருப்பதி ‘கொழுப்பு லட்டு’ வழக்கில் நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசியல் சாசனப் பதவி வகிப்பவர்கள், கடவுள்களை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.....” என்று அறிவுரை வழங்கியமை பெரிதும் மகிழ்ந்து பாராட்டத்தக்கது. https://www.hindutamil.in/news/india/1319361-keep-gods-away-from-politics-supreme-court-on-tirupati-laddu-row-2.html