எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

பொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ‘3’ஆம் இடம்தானா மோடிஜி?

‘மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று மோடி பேசினார்’ -இது சற்று முன்னரான[காலை 07.00] ‘சன்’ தொலைக்காட்சிச் செய்தி.

ஏற்கனவே, "இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி

வேகமாக நகர்கிறது" என்று பேசியிருக்கிறார் இவர்[https://www.dinakaran.com/news/india-the-best-economy-primeminister-modi/ -06:38 PM Aug 10, 2025 IST]

பொருளாதாரமோ, ராணுவப் பலமோ, அறிவியலோ, தொழில்நுட்பமோ எதுவாயினும் இந்தியாவின் அதிவேக வளர்ச்சி மிக அவசியமானது.

வளர்ந்து வளர்ந்து இந்த நம் இந்தியா மேற்கண்ட துறைகளிலெல்லாம் முதலிடத்தைப் பெறுதல் வேண்டும் என்பதே அனைத்து இந்தியரின் அடங்காத ஆசையாகவும் லட்சியமாகவும் இருத்தல் இயல்பு.

நம் ஆயுட்காலப் பிரதமரோ, போகிற இடங்களிலெல்லாம் ‘3’ஆம் இடம் பெறுவதே தன் லட்சியம் என்பதாகப் பேசிவருகிறார், வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றும், “இந்த இலக்கை எட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்”[https://www.hindutamil.in/news/india/1342608-pm-modi-calls-on-volunteers-to-help-make-india-a-developed-country-by-2047.html] என்றும் பேசியதைப் போல.

இன்னும் ஐந்தாறு ஆண்டுகளிலோ, கொஞ்சம் கூடுதலான ஆண்டுகளிலோ இந்த இலக்கை எட்ட இயலாது என்று இவர் நினைக்கிறாரா? ஏன் இந்த அவநம்பிக்கை?

இந்தியா மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் என்று பேசுவதும் இதைப் போன்றதுதான்.

முதல் இரண்டு இடங்கள் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்குமா?