எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

ஞாயிறு, 7 ஜூலை, 2019

பிரபஞ்சப் பொய்யர்கள்!!!

நித்தியானந்தாவின், மேலே இடம்பெற்ற பொய்யுரையைக் கண்டித்தும் கிண்டலடித்தும் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக இச்செய்தியை வெளியிட்ட நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

நித்தியானந்தாவின் கூற்று மிகவும் கண்டிக்கத்தக்கதுதான். ஆயினும்.....

சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைந்த ஒரு மடாதிபதியை, இட்டுக்கட்டிய கதைகளின் மூலம் கடவுள் ஆக்கும் முயற்சியில் சில வார இதழ்களும் நாளிதழ்களும் ஈடுபட்டுள்ளதை நோக்கும்போது நித்தியின் பொய்யுரையை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்றே தோன்றுகிறது!