தேர்தலின்போது, மிகக் கடுமையாகவும் அநாகரிகமாகவும் தங்களுக்குள்[பரஸ்பரம்] சாடிக்கொண்ட எதிரணி அரசியவாதிகளைத் தேடிச் சென்று, புதிய முதல்வர் விஜய் வாழ்த்துப் பெறுவதும் வாழ்த்துச் சொல்வதுமான புதிய[?] நாகரிகத்தை இங்கு[அயல்நாடுகளில் இயல்பானதாக இருக்கலாம்] அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆனால், தவறிழைக்கையில் எதிரணியினர் தெரிவிக்கும் கண்டனத்தின் கடுமையை மட்டுப்படுத்துவதற்காக இவர்[முதல்வர் விஜய்] கையாளும் தந்திரமோ இது என்று சந்தேகப்படத் தோன்றுகிறது.
காரணம், பரப்புரையின்போது இவர்[மற்றவர்களும்தான்] குறைந்தபட்ச நாகரிகத்தைக்கூடக் கடைபிடிக்காததுதான்.
போதுமான அளவுக்கு அதைக் கற்றுக்கொள்ளும்வரை, ஆளும் அணியினரும் எதிரணியினரும் உண்மையான எதிரிகளாகவே செயல்படுவது மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையும்.
முதல்வர் அவர்களே,
“சினிமாவில் நடித்தது போல, தமிழ்நாடு அரசியல் துறையிலும் நடிக்க வேண்டாம்: மிகை நடிப்பு வேண்டவே வேண்டாம்.”