எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

தாய்மொழியைப் போற்றும் வெங்கையா நாயுடு அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்!

நடுவணரசில் மிக உயரிய தகுதியைப் பெற்றவர்கள் பெரும்பாலும், இந்தி வெறியர்களுக்கு அஞ்சி, இந்தி மொழியை ஆதரித்துப் பரப்புரை செய்வதே வழக்கமாக உள்ளது.

இதற்கு முற்றிலும் மாறுபட்டவர் இந்தியக் குடியரசின் துணைத் தலைவரான வெங்கையா நாயுடு அவர்கள்.

பொதுக்கூட்டங்களில் பங்குபெறும்போதெல்லாம் தாய்மொழிக்கு முன்னுரிமை தருதல் நம் கடமை என்பதைத் தவறாமல் வலியுறுத்துவார்.

சில நாட்கள் முன்பு, ‘மாநிலங்களவை’ நிகழ்வில்   பங்கு பெற்றபோது, உறுப்பினர்கள் அவரவர் தாய்மொழியில் உரை நிகழ்த்தியதைப் பெரிதும் போற்றி மகிழ்ந்திருக்கிறார். நாளிதழ்ச் செய்தி.....

[நன்றி: தினகரன்{08.08.2019} நாளிதழ்] 

“எதிர்காலத்தில் அனைத்து உறுப்பினர்களும் மாற்று மொழியைப் புரிந்துகொள்ள வசதியாக மொழியாக்க வசதி மேற்கொள்ளப்படும்” என்று அவர் அறிவித்திருப்பது தாய்மொழிப் பற்றுக்கொண்டோரைப் பேருவகையில் ஆழ்த்துகிறது.
=================================================================================