எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

ஞாயிறு, 9 நவம்பர், 2025

உறவை மேம்படுத்துவதாகச் சொல்லிச் சொல்லி உலகம் சுற்றும் மோடி! ஓர் ஒப்பாய்வு!!

‘இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்த மோடியார் ‘பூடான்’[Bhutan] நாடு போகிறார்’ -இது இன்றைய காலைச் செய்தி[‘சன்’ தொ.கா.]. இது நேற்றே ஊடகங்களில் வெளியான பழைய செய்தியும்கூட.


இப்படிச் சொல்லிக்கொண்டு,  இவர் சுற்றிவராத நாடுகள் உலகில் எத்தனை என்பதை எண்ணுவதற்குப் பத்தே பத்து விரல்கள் போதும்.

இரு நாட்டு உறவைப் பலப்படுத்துகிறாராம்.

நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கேட்க வேண்டிய கேள்விகள்.....

இவரின் சுகபோகச் சுற்றுலாவால்[மக்களுக்கான வரிப்பணத்தில்> கோடி கோடியாய்]உலகின் எத்தனை நாடுகள் இந்தியாவுடன் ஒட்டி உறவாடுகின்றன?

இந்தியாவின் எல்லைப்புற நிலப்பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்தபோதெல்லாம்[மோடி ஆட்சியில்> இந்திய அரசால் மறைக்கப்பட்ட நிகழ்வுகள்] அதை எத்தனை நாட்டுத் தலைவர்கள் கண்டித்தார்கள்?

இந்தியா-பாகிஸ்தான் போரைத் தான்தான் தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் சொல்வதைக் கண்டிப்பதற்கான ‘தில்’ இல்லாத மோடியிடம், “நாங்கள் உனக்குப் பக்கபலமாக இருக்கிறோம். அந்த ஆளை எச்சரித்து அறிக்கை விடு” என்று எத்தனைத் தலைவர்கள் தெம்பூட்டினார்கள்?

கீழ்க்காண்பது மேற்கண்டவற்றைக் காட்டிலும் மிக முக்கியமான கேள்வி:

“இந்தியாவுடனான உறவைப் பலப்படுத்த இந்நாள்வரை எத்தனை நாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை புரிந்திருக்கிறார்கள்?

இன்னும் கேட்கலாம்.

கேட்க வேண்டியவர்கள் நம் ‘சொரணை’ இல்லாத மக்கள்.

“அனுபவி ராஜா அனுபவி” என்று சொல்லித்தான் கடவுள் இவரை இங்கே அனுப்பியிருப்பார் போலும்!