“பொய் பேசினாலும் பொருந்தப் பேசு” எனபது வழக்கு மொழி.
“மனம்போனபடியெல்லாம் புளுகிப் பிறரை மனம் நோகச் செய்யாதே” என்பது இதன் மூலம் நாம் பெறும் அறிவுரை; வாழ்க்கைக்கான நெறிமுறையும்கூட.
இது சாமானிய மக்களுக்கு மட்டுமே ஆனது; நாட்டை ஆளும் பெரிய தலைவர்களுக்குப் பொருந்தாது என்று சொல்லத் தோன்றுகிறது.
சொல்ல வைப்பது.....
கீழ்க்காணும் நாளிதழ்ச் செய்திகள்[நகல் பதிவு].
மேற்கண்டவாறு, எக்காலத்தும் நிலைகொண்டிருப்பதான[கீதையில் சொல்லப்பட்டது போல்] சோம்நாத் கோயில்[சூரியனையும் சந்திரனையும் போல் அழியாதிருப்பது] முழுமுதல் கடவுளான சிவபெருமானால் கட்டப்பட்டது என்பதால்[புராணங்கள் சொல்லியிருக்கின்றன] எக்காலத்தும் அழியாது என்று அருளுரை வழங்கியிருக்கிறார் ‘அவதாரம்’ மோடி.
சாமானிய அறிவிலி மாந்தர்களில் அடியேனும் ஒருவன் என்ற வகையில், மோடிப் பெருமகனாரிடம், அவரின் திருத்தாள் பணிந்து முன்வைக்கும் வேண்டுகோள்.....
“அருட்பெருந்திரு பிரதமர் அவர்களே, ஒட்டுமொத்தப் பிரபஞ்சம் எப்படியோ, நீங்கள் சொல்லும் பொய்களைப் பல்லுயிர் வாழும் இந்தப் பூமி தாங்காது; இது துகள் துகளாய் வெடித்துச் சிதறுவது 100% உறுதி என்பதால் இனியும் இம்மாதிரியான பொய்மொழிகளை மக்களிடையே பரப்பாதிருப்பீர் ஐயனே!”



