எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 17 செப்டம்பர், 2025

இரண்டு பெரிய மதங்கள் இணைந்து பரப்பிய இமாலயப் பொய்!!!

//யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் புனிதமாகக் கருதும் சினாய் மலையில் ஒரு பெரிய சுற்றுலாத் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் மொழியில் 'ஜபல் மூசா' என அழைக்கப்படும் இந்த மலையில், மோசேக்குப் பத்துக் கட்டளைகள் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பைபிள் & குர்ஆன் கூற்றுப்படி, எரியும் புதரில் இருந்து மோசேவிடம் கடவுள் பேசிய இடம் இதுதான் என்று பலர் கருதுகின்றனர்//[https://www.bbc.com/tamil/articles/c179q4dxy7jo]


கட்டளைகள் பத்தோ பத்து நூறோ அவையல்ல நம் அடி மனதை உறுத்துவது; எரியும் புதரிலிருந்து மோசேவிடம் கடவுள் பேசினார் என்கிறார்களே அதுதான்.
எரிந்துகொண்டிருக்கிற ஒரு புதரைக் கடவுள் ஏன் தேர்ந்தெடுத்தார்?

கடவுளே நெருப்பு வடிவில் இருந்திருப்பாரோ?

புதருக்குள் மறைந்திராமல், மோசேவின் எதிரில் நெருப்பு வடிவிலேயே காட்சி தந்து பேசியிருக்கலாமே?[வேறு வேறு உருவங்களிலும் அதைச் செய்திருக்கலாம்] அனல் பட்டு மோசே கருகிவிடுவார் என்று நினைத்திருப்பாரோ? வேறு காரணங்களும் இருக்குமோ?

எது எப்படியோ, இம்மாதிரியான தகவல்கள் பக்திமான்களின் கடவுள்[சர்வ மதக் கடவுள்கள்] பக்தியை அதிகரிப்பதற்கு மாறாக, கடவுள்கள் குறித்த மூடநம்பிக்கைககளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதுதான் அடியேனின் தீராத கவலை[ஹி... ஹி... ஹி!!!].

என் கவலை எப்போது தீரும்?

மத மறுப்பும் மத மாற்றமும் மத வெறியும்!!!

சவூதி அரேபியாவில் 2016ஆம் ஆண்டு, மதத்தை விமர்சித்த ட்வீட்களுக்காக ஒருவருக்கு 2,000 சவுக்கடிகளும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. ‘மரண தண்டனை’ விதிக்கப்படுதலும் உண்டு.

சூடானில் இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையில் மத மாற்றம் மரண தண்டனைக்குரியது.

ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றங்களில் மத எதிர்ப்பும் ஒன்று.

எரித்திரியா[எரிட்ரிய] அரசாங்கம் எரிட்ரியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச், சன்னி இஸ்லாம், ரோமன் கத்தோலிக்க சர்ச், எரிட்ரியாவின் எவாஞ்சலிகல் லூத்தரன் சர்ச் ஆகிய நான்கு மதக் குழுக்களை மட்டுமே அங்கீகரிக்கிறது. இந்தக் குழுக்கள் மட்டுப்படுத்தப்பட்ட மதச் சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. அதே நேரத்தில், இவற்றைப் புறக்கணிப்பவர்கள் துன்புறுத்தல்களையும் சிறைவாசத்தையும் எதிர்கொள்கின்றனர். https://www.indexoncensorship.org/2014/01/worst-countries-religious-freedom/

ஆப்கானிஸ்தான், மலேசியா, மாலத்தீவுகள், மவுரித்தேனியா, நைஜீரியா, கத்தார், சோமாலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,  ஏமன் ஆகிய நாடுகளும் மதம் மாறுபவர்களுக்கு ‘மரண தண்டனை’யை அளிக்கின்றன.

பாகிஸ்தான் தெய்வ நிந்தனை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கிறது. https://www.theatlantic.com/international/2013/12/13-countries-where-atheism-punishable-death/355961/