எனது படம்
மனிதன் விசித்திரமானவன்; விரும்பியது கிடைக்காவிட்டால் விதியை நொந்துகொள்கிறான்; தடங்கல் ஏதுமின்றி கிடைத்துக்கொண்டிருந்தாலோ, “இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்” என்று பித்துப்பிடித்து அலைகிறான். ஆசை ஐயா ஆசை... பேராசை! தடை எதுவும் இல்லாவிட்டாலோ அது அடங்கவே அடங்காது!

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

அதிகாரப் போதையில் மிதக்கும் அவதாரி மோடி!!!

னிதர்கள் சைவ உணவு உண்பதும் அசைவம் சேர்த்துக்கொள்வதும், அவரவர் மனப்பக்குவத்தையும் வாழும் சூழலையும் உணவுப் பண்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் பொருத்தது.

எனவே, எந்தவொரு இடத்திலும், எந்த ஒருவரையும் சைவ உணவுதான் உண்ண வேண்டும், அசைவம் கூடாது என்று கட்டுப்படுத்துவதோ கட்டளையிடுவதோ கூடாது. அப்படிச் செய்வது அதிகாரப் போதையில் செய்யும் அடாவடித்தனம் ஆகும்.

அயோத்தியைச் சுற்றி 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு அசைவ உணவு பயன்படுத்தக்கூடாது என்னும் மோடி[அயோத்தி மாவட்ட நிர்வாகம்] அரசு பிறப்பித்துள்ள உத்தரவு* அத்தகையதுதான்.

கோயிலைச் சுற்றிக் குறைந்த அளவிலான தூரத்தை[100 மீட்டர், 150 மீட்டர் என்றிப்படி] நிர்ணயித்தல் போதுமானது.

100 மீட்டர், 150 மீட்டர் தொலைவுக்குள் அசைவம் பயன்படுத்தினால், அதன் கெட்ட வாசம் கோயிலுக்குள் குடியிருக்கும் ராமனின் மூக்கைத் துளைக்குமா?

”ஆம்” என்கிறார் ராமச்சந்திர மூர்த்தியால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்ட மோடி. கோயிலின் புனிதமும் கெட்டுவிடுமாம்.

கடவுள் என்று சொல்லப்படுபவர் படைத்த அத்தனை இடங்களுமே புனிதமானவைதான். இந்தியாவில் எங்குமே அசைவம் உண்ணக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கலாமே? செய்வாரா செயற்கரிய செயல்கள் செய்யும் மோடி?

15 கிலோ மீட்டர் என்றால் எத்தனை வேகமான காற்று வீசினாலும் இறைச்சியின் கெட்ட வாசனை ராமனைச் சென்றடையாதா?

“அடையாது” என்கிறார் மோடி.

அதிகார மமதையில் இவர் மக்களுக்கு எதிராகச் செய்யும் மாபாதகங்களில் இதுவும் ஒன்று.

முட்டாள் பக்தர்களின் ஆதரவைத் தக்க வைப்பதற்காக, இனியேனும் இம்மாதிரி ஆறறிவுக்கு ஒவ்வாத நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருப்பது மோடிக்கு நல்லதோ அல்லவோ, இந்த நாட்டிற்கு நன்மை தருவதாக அமையும்.

======================

*அயோத்தி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்தக் கோவிலைப் பிரதமர் மோடி திறந்து  வைத்தார். இந்நிலையில், இந்த ராமர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகத்திற்கு அயோத்தி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ”அயோத்தி ராமர் கோவிலைச் சுற்றி 15 கி.மீ., தொலைவில் உணவகங்கள் இந்தப் பகுதிக்குள் அசைவ உணவுகளைத் தயாரிக்கவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது. அதே போல, அசைவ உணவுகளை விநியோகம் செய்யவும் கூடாது. அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அயோத்தி மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. https://theekkathir.in/News/states/delhi/meat-should-not-be-sold-within-a-15-km-radius-around-the-ram-temple!#google_vignette - ஜனவரி 10, 2026