எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

ஞாயிறு, 31 மே, 2015

இவர்களால் வாழ்கிறது மனிதாபிமானம்![உண்மை நிகழ்வு]

கீழ்க்காண்பது ஓர் உண்மை நிகழ்வு. எப்போதோ கேட்டறிந்தது இன்றளவும் அடிமனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட இதைக் கதையாக்கியிருக்கிறேன்.

வாசிக்கும் உங்களாலும் இதை மறக்க இயலாது.

                                           =================

கட்டடத் தொழிலாளியான கணேசனுக்குச் சிறிய வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகம்; அக்கம்பக்கத்தவர்க்கு ஏதும் அவலம் நேர்ந்தால் கண் கலங்குவான்.

கணேசனின் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி, தெருமுனையில் நீரேற்று நிலையம் இருந்தது. 

அன்று மாலை ஐந்து மணி சுமாருக்கு நீரேற்று நிலையத்துக்கு அருகில் ஆழமான பெரிய சாக்கடைத் தொட்டியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள்,  விஷ வாயு தாக்கி மயக்கமுற்றார்கள். ஒருவர் எப்படியோ ‘தம்’ பிடித்து வெளியே வந்துவிட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர், உள்ளே இருந்தவரைக் காப்பாற்ற நினைத்து உள்ளே இறங்க, அவரும் மயக்கமடைந்தார்.

அப்போது பாஸ்கர் வேலை முடிந்து வீடு திரும்பியிருந்தான்.

சோக நிகழ்வு பற்றிக் கேள்விப்பட்டு, ஓடிச் சென்று தயங்காமல் தொட்டியில் குதித்தான்.

மயக்கமாக இருந்த ஆளைச் சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கினான். மேலே இருந்தவர்கள் கயிறு கட்டி அந்த ஆளை மேலே தூக்கிவிட்டார்கள்.

மயக்கம் போட்டுக் கிடந்த இன்னொரு ஆளையும் அலாக்காகத் தூக்கினான். மேலே இருந்தவர்கள் அவரையும் மேலே தூக்கிக்கொண்டார்கள்.

சின்னப் படிகளில் சிரமப்பட்டு மேலே ஏறி வந்த கணேசன் கால் நழுவித் தொட்டிக்குள் விழுந்தான். சுவரில் மோதிக்கொண்டதில் மண்டையில் ஆழமான காயம் ஏற்பட்டது. விஷ வாயுவின் தாக்கம் வேறு. மயக்கமுற்றான்.

மருத்துவமனைக்குத் தூக்கிப் போனார்கள். காப்பாற்ற முடியவில்லை. ஒரு முழு மனிதனாக வாழ்ந்துகொண்டிருந்த அவனுடை மரணம் அங்குக் கூடியிருந்த அனைவரையும் அழ வைத்தது.