பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
வியாழன், 26 மார்ச், 2026
வாருங்கள், அங்கே சென்று ‘சொர்க்கச் சுகம்’ பெற்றுத் திரும்பலாம்!!!
மூடநம்பிக்கைத் திணிப்பில் முந்துவது இந்து மதமா கிறித்தவமா?
//சவூதி அரேபியாவின் ‘ஷேக் நாசர் பின் ரட்டான் அல் ரஷீத் அல் வதா' 142ஆம் வயதில் மரணமடைந்தவர். 110 வயதில் ஒரு திருமணம்[பல பெண்டாட்டிக்காரர்] செய்தார்; ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையும் ஆனார்//https://www.news18.com/world/saudi-arabias-longest-living-man-who-married-at-110-dies-at-142-ws-kl-9829418.html
இது உலக அளவில் பேசப்படும் சாதனை என்கிறது செய்தி வெளியிட்ட ஊடகம்.
இவரைவிடவும் அதிக வயதில் சாதனை படைத்தவர்கள் பற்றி இணையத்தில் தேடுதேடென்று தேடியதில், கீழ்க்காணும் காணொலி அடியேனின் பார்வையில் தட்டுப்பட்டது.
உள்நுழைந்து தகவல்களை வாசித்தபோது.....
“தன்னுடைய 500ஆவது வயதில் கர்த்தரின் அருளால், ‘நோவா’ என்பவர் மூன்று பிள்ளைகள் பெற்ற நிகழ்வானது வேதாகமத்தில்[பைபிள்] இடம்பெற்றுள்ளது” என்று கூறப்படுவது[காணொலியில்] கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
“கற்பனைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் இந்துமதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் இடையேதான் கடும் போட்டி” என்று சொல்லத் தோன்றுகிறது!
