கர்னாடகாவில் பகுத்தறிவுச் சிந்தனையுள்ள பிரபல எழுத்தாளர்கள் 35 பேர் இருக்கிறார்கள் என்பதை இன்றைய நாளிதழ்ச்[தி இந்து, 10.09.2017] செய்தியால் அறிய நேர்ந்தது.
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்னாடகாவில் முற்போக்குச் சிந்தனையுள்ள எழுத்தாளர்களுக்குக் கர்னாடக அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளதாம்.
’35 பேர்’ என்னும் புள்ளிவிவரம் எம் மனதில் பெருமளவில் பொறாமைத் தீயை மூட்டியுள்ளது.
அங்கே, முற்போக்குச் சிந்தனையுள்ள [பிரபல]எழுத்தாளர்கள் 35 பேர். நம் மாநிலத்தில் எத்தனை பேர் தேறுவார்கள்?
ஒத்தைப்படை எண்ணிக்கையைக்கூடத் தாண்டமாட்டார்கள் என்பதே என் எண்ணம்.
இங்குள்ள மிக மிகப் பெரும்பாலான பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து ஆன்மிகத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளை வளர்ப்பவை. இவற்றின் நீடித்த ஆதரவைப் பெறுவதற்காக ஆன்ம நேயராகத் தம்மைக் காட்டிக்கொள்ளவதில் முனைப்புக் காட்டுவார்களே தவிர மறந்தும் ஆன்மிகத்தின் பெயரால் வளர்க்கப்படும் மூடநம்பிக்கைகளைச் சாட மாட்டார்கள் இவர்கள்.
விதிவிலக்காகச் சிலர் இருத்தலும்கூடும்.
அந்தச் சிலரை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நம் மாநில அரசு உறுதி செய்திடல் வேண்டும். செய்யுமா?
‘ஆம்’ எனில், அத்தகையோர் பற்றிய பட்டியலையும் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பற்றிய விவரங்களையும் உடனடியாக வெளியிடுதல் வேண்டும்.
கோவையில் முற்போக்குச் சிந்தனையாளர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தமிழ்மக்கள் அறிவார்கள். அவ்வாறான அவலங்கள் இனியும் இங்கே நிகழ்ந்துவிடாமல் தடுத்திட இது உதவும்.
அரசு நிகழ்வுகளில்கூடத் தம்மைப் பழுத்த ஆன்மிகவாதிகளாகக் காட்டிக்கொள்ளத் தவறாத நம் ஆட்சியாளர்கள், கொஞ்சமேனும் நடுநிலை உணர்வுடன் கர்நாடகா அரசை முன் உதாரணமாகக்கொண்டு செயல்படுதல் வேண்டும்.
செய்வார்களா?
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை!
தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை!
அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர்கள் முற்போக்குவாதிகள் அவர்கள் இவர்களை காப்பாற்ற நினைப்பார்களா நண்பரே ?
பதிலளிநீக்குஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் கணினி திறக்கிறேன்.
உதவ மாட்டார்கள் என்பது தெரிந்ததுதான். எழுதுவது நம் கடமை.
நீக்கு//ஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் கணினி திறக்கிறேன்//
பிற பணி நிமித்தம் வலைப்பக்கம் வர இயலாமல்போவது இயல்புதான்.
நான் புதிய பதிவை இணைத்தவுடன் வருகை புரிந்து பாராட்டிவிடுகிறீர்கள். இது போதுமே.
நன்றி நண்பரே.
அப்படியொரு பட்டியல் எடுத்தால் ,அதில் நீங்களும் உண்டு :)
பதிலளிநீக்குகருத்தொருமித்த நண்பர் என்பதால் ரொம்பவே புகழ்ந்துட்டீங்க.
நீக்குநன்றி பகவான்ஜி.
பெயருக்கு மட்டுமே முற்போக்கு என்று கூறிக்கொண்டு பிற்போக்கில் உள்ள பலரை இச்சமுதாயத்தில் காணமுடியும்.
பதிலளிநீக்குஅவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்!
நீக்குநன்றி நண்பர் ஜம்புலிங்கம்.
அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி mohamed althaf
நீக்குநன்று! த ம 4
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க.
நீக்கு