எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 11 பிப்ரவரி, 2023

வாருங்கள்..... கொஞ்சம் கவலைப்படலாம்!!!

தினக்கூலித் தொழிலாளியான சுனிதா நோய்வாய்ப்பட்டு, முசாபர்பூரில், ‘பாரியார்பூர் சௌக்’ அருகே உள்ள ‘சுப்காந்த் கிளினிக்’கில் அனுமதிக்கப்பட்டபோது, கருப்பையில் தொற்று இருப்பதாகப் பொய் சொல்லி அறுவைச் சிகிச்சைக்கு உடன்படச் செய்தார் மருத்துவர் பவன். சுனிதாவின் இரு சிறுநீரகங்களையும் திருடினார்.

அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவளைப் பாட்னாவில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுத் தப்பியோடினார்[போலீசார் பவனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்].

சுனிதாவுக்கு மூன்று குழந்தைகள். இப்போது அவள் வேலைக்குச் செல்ல இயலாத நிலை.

"எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், நான் மரணத்தின் நாட்களை எண்ணுகிறேன், எனக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்று தெரியவில்லை, எனக்குப் பிறகு என் குழந்தைகளுக்கு யார் ஆதரவு? அவர்கள் எப்படி வாழ்வார்கள்?" என்று மனம் கலங்கிக் கண்ணீர் வடிக்கிறார்.

தற்போது சுனிதா, மாவட்டத்தில் உள்ள ‘எஸ்கே’ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சுனிதாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்ய வேண்டும்.

சில நாட்களுக்கு முன்புவரை சுனிதாவின் கணவர் ‘அக்லு ராமு’ உடன் இருந்தார். அவர் சுனிதாவுக்குச் சிறுநீரகம் கொடுக்கத் தயாராக இருந்தார். அது பொருத்துவதற்கு ஏற்றதாக இல்லை.

சுனிதாவுடன் ஏதோ பிரச்சினைக்காகச் சண்டையிட்டு, மூன்று குழந்தைகளையும் அவளுடன் விட்டுவிட்டு அவர் ஓடிவிட்டார்.

தற்போது சுனிதாவின் தாய், மருத்துவமனையில் அவரைக் கவனித்து வருகிறார். மருத்துவமனை நிர்வாகமும் சுனிதாவுக்கு உதவ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், இதுவரை பெறப்பட்ட நன்கொடையாளர்களின் சிறுநீரகங்களில் எதையும் பொருத்த இயலவில்லை[இந்தியா டுடே].

சுனிதாவின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது; கவலைக்குரியதாக உள்ளது.

நாமும் கவலைப்படுகிறோம். இதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்!?

Don't care if you die: Bihar man leaves wife months after both her kidneys stolen during operation

[கையறு நிலையில் சுனிதா]

====================================================================

ஓட ஓட விரட்டி மானுடரின் உயிர் பறிக்கும் மாரடைப்பு!!!

லகமெங்கும் அதிகம் பேர் மாரடைப்பால்தான் மரணம் அடைகின்றனர். ரணம் இயற்கையானது என்றாலும் சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத  சூழ்நிலையில் மரணம் ஏற்படுகிறது. சிலருக்குத் தூக்கத்தில் மாரடைப்பு வரும். சிலருக்கு உடற் பயிற்சி செய்யும்போது, அலுவலகத்தில் பணியில் இருக்கும்போது, வீட்டில் அமைதியாகத் தொ.கா. பார்த்துக்கொண்டிருக்கும்போது என மாரடைப்பு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் ஒருவர் கடையில் பரோட்டா வாங்கிவந்து அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வாயில் பரோட்டா இருக்கும் நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது. https://www.bhoomitoday.com/man-died-while-eating-parotta/[copy&paste]

பாடும்போது..... கேரளா முழுக்கக் கோயில் விழாக்களில் பாடியுள்ள எடவா பஷீர். நேற்று ஆலப்புழாவில் இசை நிறுவனத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் மேடையில் நின்று பாடியபோது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ‘எடவா பஷீர்’ மரணம் அடைந்தார். https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=769364

பேசும்போது….. எழுத்தாளர் ராணி மைந்தன் 'சாவி 85' என்ற புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தக வெளியீட்டுவிழா சென்னை நாரத கான சபாவில் நடந்தது. முதல்வர் கருணாநிதி விழாவில் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். மேயர் ஸ்டாலின் முதல் இதழைப் பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் சாவி, மேடையில் பேசும்போது தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறி, பேச்சைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு இருக்கைக்குத் திரும்ப முடியாமல் மைக்கைப் பிடித்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் மயங்கிக் கீழே விழுந்தார்[சிகிச்சையளித்தும் பின்னர் மரணமடைந்தார்]. https://tamil.oneindia.com/news/2001/01/21/book.html

வாகனம் ஓட்டும்போது..... தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தான் ஓட்டிக்கொண்டிருந்த பேருந்தை,  ஓரமாக நிறுத்திப் பயணிகளின் உயிரைக் காத்த  அரசுப் பேருந்து ஓட்டுநரின் மரணம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://kamadenu.hindutamil.in/national/a-government-bus-driver-died-of-chest-pain-while-driving-the-bus

விளையாடும்போது…. சென்னையைச் சேர்ந்த பதினெட்டே வயதான கல்லூரி மாணவி மகிமா, மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருந்த மகிமா, திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். மாணவர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் மகிமாவை உடனடியாக, மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.  https://www.vikatan.com/literature/arts/144506-why-do-some-youngsters-have-heart-attack[copy&paste]

பந்தயத்தில் ஓடும்போது….. கனடா நாட்டில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தியத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் வெற்றிபெறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாகத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. http://www.vanakkamkarur.com/?action=viewnews&newsid=490


உடற்பயிற்சியின்போது….. புனித் ராஜ்குமார்[கர்னாடகா] தன் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். அனுதினமும் உடற்பயிற்சிக்காகக் கணிசமான நேரம் செலவிடுபவர். காலையில் உடற்பயிற்சி முடிந்ததும் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். https://kamadenu.hindutamil.in/life-style/can-exercise-lead-to-cardio-problem


உடலுறவின்போது….. நாக்பூரைச் சேர்ந்த 28 வயதான இளைஞரும், ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். சமீபத்தில் அவர்கள் ஒரு விடுதியில் உடலுறவில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்தில், எந்த அசைவும் இல்லாமல் காதலன் மாரடைப்பால் சரிந்து விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன காதலி, உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினரை உதவிக்கு அழைத்தார். உடனடியாக அந்த இளைஞர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரின் உயிர் பிரிந்தது. https://www.vikatan.com/government-and-politics/man-dies-after-getting-cardiac-arrest-while-having-sex

ஓடும் ரயிலில்…..

டெல்லியில் இருந்து கோழிக்கோடு நோக்கிச் சென்ற ரயிலில் ‘கேசவன்- தயா’ தம்பதியர் பயணம் செய்துள்ளனர். மதுரா அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, கேசவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. https://tamil.news18.com/news/trend/an-elderly-man-who-was-on-a-train-had-sudden-chest-pains-and-was-saved-by-his-wife-812131.html

                                           *   *   *   *   *

இதன் மூலம் சகலமானவர்களும் அறியவேண்டிய நீதி என்னவென்றால்.....


உடல்நலத்துடன் மனநலமும் பேணுங்கள். அகங்காரம் தவிர்த்து, அனைவர் மீதும் அன்பு செலுத்தி அமைதியாக வாழப் பழகுங்கள் என்பதே!

                                           *   *   *   *   *


கர்நாடகா: 50 அடி உயர தென்னை மரத்தின் மேல் அமர்ந்து ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

//கர்நாடக மாநிலம் மைசூர் சாலையில் உள்ள விஜயஸ்ரீ லேஅவுட், மயிலாசந்திராவில் உள்ள 50 அடி உயரத் தென்னை மரத்தின் உச்சியில் 60 வயது முதியவர் திங்கள்கிழமை இறந்த நிலையில் அமர்ந்திருந்தார். தேங்காய் பறிக்க மரத்தில் ஏறியபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது[news18]// என்னும் இந்தச் செய்தியே இந்தப் பதிவு உருவானதற்கான காரணம் ஆகும்.