எனது படம்
உடல் நலம் குறித்தோ, வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றியோ எழுதினால், அவை வாசிப்போருக்குப் பயன்படக்கூடும். படைப்புத் தத்துவம், நிரந்தரம், நிலையாமை பற்றியெல்லாம் எழுதுவதால் பயன் என்ன? விரிவாகவும் வெகு ஆழமாகவும் இவை சிந்திக்கத் தூண்டுவதால் பயன் உண்டு என்று உறுதிபடச் சொல்லலாம்.

சனி, 29 ஏப்ரல், 2017

பெரியாரின் ‘பட்டுச்சேலையும் ஜமுக்காளமும்’ -‘சுருக்’ கதை!

#ஒருத்தியிடம் இன்னொருத்தி பட்டுச்சேலை இரவல் கேட்டாள்.

அந்த ஒருத்தியும் கொடுத்தாள்.

கட்டிக்கொண்டு போகிறவள், ‘இது அடுத்தவள் சேலைதானே’ என்று அலட்சியமாய்க் கண்ட கண்ட இடத்தில் உட்கார்ந்தால் சேலை அழுக்காகும்; எண்ணைக்கறை படும் என்றெல்லாம் இரவல் கொடுத்தவள் கவலைப்பட்டாளாம். அதனால்.....

அவள் போகும் இடங்களுக்கெல்லாம் இவளும் ஒரு ஜமுக்காளத்தைத் தூக்கிக்கொண்டு அவள் பின்னால் அலைந்தாளாம்; அவள் உட்காரும்போதெல்லாம் இவள் அவள் அமரும் இடங்களில் எல்லாம் அதை விரித்தாளாம்.

மக்களாகிய நம் கதையும் இதுதான். நம்மால் பதவி பெற்ற அமைச்சர்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் கறைபடாமல் காக்கும் பொறுப்பு நம்முடையதாக இருக்கிறதே#
***********************************************************************************************************************

கதை உதவி: முனைவர் அ.ஆறுமுகம்; ‘பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்’, பாவேந்தர் பதிப்பகம், திருமழபாடி, அரியலூர் மாவட்டம். முதல் பதிப்பு: திருவள்ளுவர் ஆண்டு 2048[2017]