பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021
கடவுளாம் கடவுள்...வெங்காயக் கடவுள்!!!
சனி, 27 பிப்ரவரி, 2021
'மனிதன்-விலங்கு'...கலப்பின உயிர் ஆய்வில் ஜப்பான் விஞ்ஞானிகள்!!!
விண்வெளி ஆய்வு உள்ளிட்டவைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கில், இதுபோன்ற கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் முன்பு சோவியத் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது[என்ன ஆயிற்று?].
இது சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவதால். பல நாடுகளில் இதற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இந்த ஆய்வின் மூலம் மனிதர்களுக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்யும்போது, தேவையான உறுப்புகளை விலங்குகளின் கருக்கள் மூலமாக வளர்த்தெடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த 'மனிதன் – விலங்கு' கலப்பினக் கருவை உருவாக்க வேண்டும் என்ற ஜப்பான் ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அந்நாட்டு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன//[https://www.sathiyam.tv/jeppan-government-approved-human-and-animal-reasearch/ -01/08/2019 9:42]
எதிர்ப்பவர்கள் என்ன காரணத்தால் எதிர்க்கிறார்கள் என்பது பற்றியோ, ஆதரிப்பவர்கள் எதனால் ஆதரிக்கிறார்கள் என்பது பற்றியோ இக்கட்டுரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கூரு கெட்ட கடவுள், வதவதன்னு தேவையே இல்லாமல் கோடானு கோடி உயிர்களைப் படைத்து இந்த உலகைப் பெரிய போராட்டக் களமாக ஆக்கி வைத்திருக்கிறார். கோடிகளில் இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்பதுதான் நம் எண்ணம்.
ஜப்பான் ஆய்வாளர்களின் முயற்சி வெற்றி பெற மனதார வாழ்த்துவோம்!
======================================================================================
வெள்ளி, 26 பிப்ரவரி, 2021
'யோனிப் பொருத்தம்'...அமேசான் கிண்டிலில் என் புதிய நூல்!
யோனிப் பொருத்தம்: சேர்ந்து வாழ்ந்து[Living Together] மனம் சோர்ந்துபோனவன் கதை (Tamil Edition)
by 'பசி'பரமசிவம்
ஆறாவது அறிவைப் பெற்றபின், உணவுண்ணும் முறையில் மாற்றங்களை நிகழ்த்தினான். போலவே, உடலுறவு[புணர்ச்சி] மூலம் இன்பம் பெறுவதிலும் புதிய புதிய உத்திகளைக் கையாண்டான்.
குழந்தை பெறுவதோடு நில்லாமல், உடலுறவுக்கான நேரத்தையும் அதிகப்படுத்தினான். மருந்து, மாத்திரை, லேகியம், மனப்பயிற்சி, உடற்பயிற்சி என்று பலவற்றையும் பயன்படுத்தி விந்து வெளியேறுவதைத் தாமதப்படுத்த முயன்றான். அதில் போதிய பலன் கிடைக்காமல் போகவே, வயாகரா நயாகரா என்று எதையெதையோ தேடி அலைந்தான்; அலைகிறான்.
இது ஒருபுறம் இருக்க, அண்மைக்காலக் கண்டுபிடிப்பான இணையம் இவனின் இன்ப வெறியைத் தூண்டும் சாதனமாக அமைந்துவிட்டது.
இணையத்தில் இடம்பெறும் உடலுறவு தொடர்பான படங்களும் காணொலிகளும் ஆடவரை மட்டுமல்லாமல் மகளிரையும் மிதமிஞ்சிய போதையில் ஆழ்த்துவனவாக உள்ளன.
ரசித்தல், கேட்டல், தொடுதல், உரசுதல் முதலான சல்லாபங்கள் முடிந்து, அந்தரங்க உறுப்புடன் உறுப்பு இணைத்து இயங்குவதிலான ஆண்களுக்குள்ள பலவீனத்தை மிகத் தெளிவாகப் பெண்கள் புரிந்துகொள்ளவும் இந்தக் கண்டுபிடிப்பு உதவிகரமாக அமைந்துவிட்டது. விளைவு?
இயற்கையாகவே, எளிதில் உச்ச சுகத்தைத் தொட்டுவிடாத அவர்களைத் திருப்திபடுத்த ஆண்கள் படாதபாடெல்லாம் படுகிறார்கள்.
புணர்ச்சி செய்யும்போது விதம் விதமான உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டு ‘பரவாயில்லை’ என்று சொல்லும் அளவுக்குத் ‘திருப்தி’ அளிப்பவர்களைச் சாதனையாளர்கள்[சராசரிக்கும் மேலே] என்றும், ‘சுமார்’ என்கிற அளவுக்குச் சுகம் தருபவர்களைச் ‘சராசரி’கள் என்றும், பின்தங்கியிருப்பவர்களைப் ‘பலவீனர்கள்’ என்றும் வகைப்படுத்தியிருக்கிறார்கள் ‘பாலியல்’ மருத்துவர்கள். இம்மூன்றுக்குமான 'இயங்கும் கால அளவு' வரையறுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
அறிவரசு, ‘தகவல் தொழில்நுட்பத் துறை’யில் பணிபுரியும் முப்பது வயது இளைஞன். உடன் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்து[Living Together], உடலுறவுச் சுகத்தையும் அனுபவித்த நிலையில் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். இவனின் விருப்பத்தை நிராகரிக்கிறாள் அவள். அந்தக் கசப்பான அனுபவம், ‘அது’ விசயத்தில் அவன் ‘சாதனையாளன்’ அல்ல என்பதைச் சற்றே தாமதமாக அவனுக்குப் புரியவைத்தது. தான் சராசரியா, அதற்கும் கீழேயா என்ற கேள்வி அவனைக் கவலைப்பட வைத்தது. அவனைப் பெற்றவர்கள், வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்த கொஞ்சம் நாட்களில், கழுத்தை நீட்டியவள் காதலனோடு ஓடிப்போனது நெஞ்சைச் சுட்டுக்கொண்டிருந்த கவலைப் பெரு நெருப்பில் நெய் வார்த்தது.
‘இனி திருமணமே வேண்டாம்’ என்று முடிவெடுத்திருந்த இவனின் மனதை மாற்றுவதற்கு நல்ல நண்பனொருவன் கடும் முயற்சியை மேற்கொண்டான். அவன் தன் முயற்சியில் எவ்வாறு வெற்றி கண்டான் என்பதை விவரிப்பதோடு இந்தக் குறுநாவல் முற்றுப்பெறுகிறது.
இயன்றவரை, தொய்வில்லாத விறு விறு நடையைக் கையாண்டு கதை சொல்லியிருக்கிறேன். உங்கள் மனதில் நிரந்தரமானதொரு இடத்தை இது கைப்பற்றும் என்னும் நம்பிக்கை எனக்குள்ளது.
வாசித்து மகிழுங்கள்.
================================================================================================
புதன், 24 பிப்ரவரி, 2021
சில நேரங்களில் சில பெண்டாட்டிகள்![சிரிக்கவும் சிந்திக்கவும்]
திங்கள், 22 பிப்ரவரி, 2021
திருமணங்களில் புரோகிதர் சொல்லும் மந்திரத்தின் பொருள்!!!!!
திருமணங்களில் புரோகிதர் பல மந்திரங்களைச் சொல்கிறார். அவற்றில் ஒன்று கீழே.
//தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே பஷேபம்...//
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021
பெண்களைப் புறக்கணித்து ஆண்கள் மட்டுமே நடத்தும் திருவிழா!!!
பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு ஒரு கதையும் சொல்கிறார்கள்.
கோயிலுக்கு அருகே உள்ள போதமலையிருந்து ஒரு கர்ப்பிணிப் பெண் கீழே வந்தாளாம். வந்த வேலை முடிந்து மலைக்குத் திரும்பும்போது பிரசவ வலி உண்டானதாம். அக்காலத்தில் தீண்டாமை வேரூன்றியிருந்ததால் பெண்கள் யாரும் உதவ முன்வரவில்லை.
'உதவிக்கு வராத ஊரிலுள்ள பெண்களுக்குக் குழந்தை பிறக்கக்கூடாது; பிணியும் வறுமையும் இவர்களை வாட்டட்டும்' என்று சாபமும் கொடுத்துவிட்டு, இறந்து பிறந்த தன்னுடைய இரு குழந்தைகளை ஓடையில் வீசிவிட்டு உயிர் துறந்தாள்.
அவளின் சாபம் பலித்தது.
மேலும், ஓர் ஆணின் கனவில் தோன்றி, 'ஆலமரத்தடியில் எனக்குச் சிலை வைத்து, மலைவாழ் மக்கள் முன்னின்று பூஜை செய்ய, ஆண்டுதோறும் ஆடுகளைப் பலியிட்டுச் சமபந்தி விருந்து வைத்து விழா நடத்த வேண்டும்' என்றும், 'அந்த விழாவில் எனக்கு உதவாத ஊர்ப் பெண்களை அனுமதிக்கக் கூடாது' என்றும் உத்தரவிட்டாள்.
அவ்வுத்தரவின்படி நூறாண்டுகளுக்கும் மேலாக ஆடி மாதத்து நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று விழவை வெகு சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
நோய் நொடிகள் அகன்று, பெண்கள் அழகழகான குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்களாம்!
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யாரோ ஒருவர், அல்லது பல ஆண்கள் சேர்ந்து கட்டிவிட்ட கதையைச் சொல்லி, பெண்களைப் புறக்கணித்து[ஏமாற்றி?] ஒரு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே கிடா விருந்து சாப்பிடுகிறார்கள் என்பது நம்மைப் பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது.
பொங்களாயி அம்மனுக்குப் பலி கொடுக்கப்படுவதும் பெண் ஆடுதான் என்பது மிகப் பெரிய சோகம்!
=======================================================
வெள்ளி, 19 பிப்ரவரி, 2021
சாமியே சரணம் ஐயப்பா!... 'இது' பொய்யப்பா!!!
வியாழன், 18 பிப்ரவரி, 2021
கூடிக்களித்தல்[லிவிங் டுகெதர்]!!!
#நடிகை 'ஷமதா அஞ்சன்' ஒரு வருட 'லிவிங் டுகெதர்' முடிந்து காதலரைக்[கவுரவ் ஷர்மா] கரம் பிடித்தார்#[https://tamil.filmibeat.com/news/darbar-actress-shamata-anchan-got-married-080326.html] என்பது செய்தி.
கடந்த ஆண்டு ரஜினியின் தர்பார் படத்தில் ரஜினிக்கு உதவும் பெண்ணாக[போலீஸ் அதிகாரி] 40 நிமிடம் நடித்துள்ளாராம்.
"ஒன்றாக ஒரு வருடம் கழித்த[கூடிக்களித்தல்!] பிறகு வாழ்நாள் முழுவதையும் ஒருவருக்கொருவர் செலவிட விரும்புகிறோம் என்பது எங்களுக்குப் புரிந்தது. புதிய ஆண்டு அழகாகத் தொடங்கியுள்ளது" என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் இந்த நடிகை.
'வாழ்நாள் முழுவதும் இருவரும் ஒன்றாகச் செலவிட விரும்புகிறோம் என்பது புரிந்தது" என்கிறார். இப்படிச் சுற்றிவளைக்காமல், 'கல்யாணம் பண்ணிக்கப் போறோம்'னு இரண்டு மூன்று வார்த்தைகளில் முடித்திருக்கலாம்.
'சேர்ந்து வாழ்ந்த ஒரு வருடத்தில் அந்தரங்க சுகானுபவம் திருப்தியாக இருந்தது' என்கிறார். அந்த ஒரு வருடத்தில் திருப்தி கிடைக்காமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும்?
இருவரும் பிரிந்திருப்பார்கள். அப்புறம்.....
திருமணம் இல்லாமலே காலம் கடத்துவதா? அல்லது, இன்னொருவருடன் சேர்ந்து இன்னொரு வருடம் 'கூடிக்களித்து'க் கழிப்பதா? அப்படிக் கழித்தும் திருப்தி கிடைக்காவிட்டால்.....
வேறொரு ஆளைத் தேடிக்கொள்ளலாம்தானே?
ஒருவேளை, திருப்தி கிடைக்காமல் போவது தொடருமேயானால்.....
'லிவிங் டுகெதர்' என்ற பெயரில் எத்தனை பேருடனும் கூடிக் களிக்கலாமா?
இதற்கு வரம்பே கிடையாதா?
எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்படிக் கூடிக் கும்மாளம் போடும் வாழ்க்கை முறையை அறிமுகம் செய்த உலகமகா புத்திசாலி யார்?!
அவர் யாராயினும், 'கல்யாணம்' என்னும் ஆயுள் சிறையில் சிக்கிக்கொள்ள விரும்பாத இன்றைய இளசுகள் அவரைப் பாராட்டி மகிழவே செய்வார்கள்.
நம் போன்ற கிழடுகளின் மனதில்தான் புகைச்சல்!!!
=================================================================================
செவ்வாய், 16 பிப்ரவரி, 2021
சிற்றின்பம் பெறுதலில் சில விநோதங்கள்!!!
பத்திரிகைகளிலும் பருவ இதழ்களிலும் பாலுறவு குறித்து நிறையப் பேர் கேள்விகள் கேட்கிறார்கள்; பாலியல் நிபுணர்கள் பதில்கள் அளிக்கின்றனர். மஹிந்தர் வத்ஸா என்பவர் அதுபோன்ற ஒரு நிபுணர். சமீபத்தில் அவர் காலமாகிவிட்டாராம்.
ஒரு முறை B.B.C.க்குப் பேட்டியளித்த அவர்....
"என் மனைவி என்னைத் துடைப்பத்தால் அடித்தால் தவிர, எனக்குப் பாலுறவு விருப்பம் தூண்டப்படுவதில்லை. ஆனால், சமீபத்தில் என் மனைவி இறந்துவிட்டார். எனவே, துடைப்பத்தால் என்னை அடித்து, பாலுறவு விருப்பத்தைத் தூண்டக்கூடிய ஒரு மனைவியை நான் எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஒருவர் கேட்டார்" என்று சொல்லிச் சிரித்தாராம்.
துடைப்பத்தால் அடி வாங்கினால்தான் 'அது'க்கான 'மூடு' வரும்னு சொன்ன அந்த ஆள், நல்ல வேளை 'அங்கே' அடித்தால்தான் 'மூடு' வரும்னு சொல்லல!
இப்படித் துன்பத்திற்கு ஆளாகிச் சிற்றின்பம்[பேரின்பமய்யா!] அனுபவிப்பதை மேற்கத்தியச் சமுதாயத்தில் பி.டி.எஸ்.எம்.(BDSM) என்கிறார்களாம். ஆனால், பல நாடுகளில் இது கேள்விப்படாத வார்த்தையாக இருக்கிறது.
இதுபோன்ற நிகழ்வுகளில் யாரையாவது துன்புறுத்துதல் அல்லது தனக்குத் தானே துன்புறுத்திக்கொள்ளுதல் மூலம் பாலுறவு விருப்பத்துக்கான தூண்டுதல் பெறுகிறார்கள்.
இதில் துன்புறுத்துபவர் ஆதிக்கம் செலுத்துபவர் என்றும், துன்புறுத்தல்களை ஏற்பவர் அடங்கிச் செல்பவர் என்றும் கருதப்படுகிறார்கள். துன்புறுத்தல் செயல்களைச் செய்பவரும், அதை ஏற்பவரும் இந்தச் செயலால் பாலுறவுக்கான தூண்டுதலைப் பெறுகிறார்கள். ஒருவரை அடிமை போல நடத்துதல் அல்லது தானே அடிமை போல நடந்துகொள்ளுதல் என்ற பாணியும் இதில் இருக்கிறதாம்.
இப்படியெல்லாம் பாலுறவு! இதில் இன்பசுகம் காணும் கிறுக்கர்கள்!! நல்லாப் படைச்சாரய்யா கடவுள்!!!
=================================================================================
https://www.bbc.com/tamil/global-55940851
திங்கள், 15 பிப்ரவரி, 2021
'கன்னித்தன்மை'யைப் புதுப்பித்தலும் தரகர்கள் பேரமும்!!!
இது தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ள தரகர்கள் பணக்காரர்களின் இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி நிறையவே சம்பாதிக்கிறார்கள் என்பதான செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு இணையதளம் ஒன்று வெளியிட்டிருந்தது[asianetnews.com தளத்தில் வாசித்தது].
இளம் வயது விலைமகளிரை[வயது 17 - 20] மருத்துவரிடம் அழைத்துச் சென்று, கன்னித்தன்மைக்கான சான்றிதழை, அதற்குரிய கட்டணத்தைச் செலுத்திப் பெறுவார்கள் தரகர்கள்.
பெண்ணைச் சான்றிதழுடன் பணக்காரர்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.
பேரம் படிந்தால்....
ஓர் இரவுக்கு ஒருத்திக்கு ரூபாய் 3 லட்சம் முதல் 17 லட்சம்வரை செல்வந்தர்கள் கொடுப்பார்களாம்.
அதில் பெருந்தொகையைத் தாங்களே வைத்துக்கொண்டு, சிறு தொகையை மட்டும் சம்பந்தப்பட்ட பெண்களுக்குத் தரகர்கள் தருவது வழக்கமாகிப்போன ஒன்றாம்..
குடும்பப் பெண்களோ விலைபோகும் பெண்களோ, பெண்களைப் பலவீனமானவர்களாகவும், ஆண்களை அவர்களை அடக்கி ஆளும் பலசாலிகளாகவும் படைத்த ஓரவஞ்சனைக் கடவுளைப் பெண்கள்தான் அதிக அளவில் போற்றி வழிபடுகிறார்கள் என்பது அதிர்ச்சிதரும் உண்மையாகும்!
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021
'ஆன்மா' உண்மையெனின், அது உடம்புக்குள் புகுவது எப்படி?!
ஆணிடமிருந்து வெளிப்படும் விந்துவில் உள்ள பல கோடி உயிரணுக்களில் [ஒரு மி.லிட்டர் விந்துவில் 12 கோடிவரை உயிரணுக்கள் இருக்குமாம்] ஒன்று பெண்ணின் கருப்பையிலுள்ள சினை முட்டையுடன் இணைந்து வளர்வதன் மூலம் குழந்தை உருவாகிறது என்கிறது அறிவியல்.
சனி, 13 பிப்ரவரி, 2021
'மகா... பெரியவா'வும் மகாப் பெரிய சூனியக்காரியும்!!!
'மகா பெரியவா' திருச்சிக்கு அருகே முகாமிட்டிருந்தாராம்.
அவரைத் தரிசிக்கச் சுற்றுவட்டார மக்கள் வந்தார்களாம். அவர்களுள் 60 வயது மதிக்கத்தக்க ஒரு சூனியக்காரியும் இருந்தாளாம். அவள் பணத்துக்காகப் பணம் தர்றவங்களோட எதிரிகள் மேல, எலுமிச்சம்பழத்தை மந்திரிச்சி ஏவல், சூனியம் எல்லாம் செய்யுறவளாம்.
அவள் சூனியக்காரிங்கிறது அங்கிருந்த மத்தவாளுக்குத் தெரியலையாம்.
ஆனா, நம்ம பெரியவா பெரிய மாகானல்லவோ, அவள் சூனியக்காரிங்கிறதையும், தனக்கே சூனியம் வைக்க வந்தவள்ங்கிறதையும் 'ஞானக் கண்'ணால் தெரிஞ்சுண்டாராம். ஆனா, தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலையாம்.
"பெரியவா, நான் இப்போதான் முதன் முதலா உங்களைத் தரிசிக்க வந்தேன்"னு சூனியக்காரி சொன்னாள். அதுக்குப் பெரியவா, "நீ வர்றேங்குறது தெரியும்; எதுக்கு வந்திருக்கேங்குறதும் தெரியும்"னு சொன்னதோட, அவளுக்கு நூறு எலுமிச்சம் பழமும் கொடுத்தார்.
தான் வந்த நோக்கத்தை யாரும் சொல்லாமலே[வழக்கமா, தரிசணம் பண்ண வர்றவங்களோட குறையை அவங்க சொல்லாமலே தெரிஞ்சி, அதை நிவர்த்தி செய்வது பெரியவா வழக்கம். இது எப்படிச் சாதியமாச்சுன்னு கேட்டுடாதீங்க. மகானை நிந்திச்ச பாவம் உங்களைச் சேரும். ஜாக்கிறதை!] பெரியவா கண்டுபிடிச்சதை நினைச்சிப் பயந்துபோனாள் அந்தச் சூனியக்காரி.
கதறி அழுது, மகாப் பெரியவாகிட்டே மன்னிப்புக் கேட்டாள். பெரியவாவும் அவளை மன்னிச்சி ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார்.
"ரொம்ப நல்லவரான பெரியவாவுக்குச் சூனியம் வைக்கத் தூண்டினது யாரு? ஏன் தூண்டினாங்க? இவரைப் பத்திச் சூனியக்காரிக்குத் தெரியாதா?" என்கிற மாதிரியெல்லாம் கேள்வி கேட்டுடாதீங்க.
மறைந்த பெரியவாவுக்குப் பெருமை சேர்க்கிறதா நினைச்சுண்டு இப்படியான 'ஓட்டை உடைசல்' கதைகளை வாராவாரம் 'குமுதம்' வார இதழ்க்காரங்க எழுதிட்டு வர்றாங்க.
தவறாம படிங்க. உங்களுக்குப் புண்ணியம் சேரும். ஏடாகூடமா கேள்வியெல்லாம் கேட்டா நரகத்துக்குப் போவீங்க! உஷார்!!
=================================================================================
https://www.kumudam.com/magazines/open_magazine/547
வியாழன், 11 பிப்ரவரி, 2021
போடாதே போடாதே! கோயில் உண்டியலில் பணம் போடாதே!!
கோயில் உண்டியலில் நீங்கள் போடுகிற பணமோ தங்க நகைகளோ 100% நல்ல வழிகளில்தான் செலவிடப்படுகிறது என்பது குறித்து நீங்கள் யோசித்ததுண்டா? "இல்லை" என்பதே உங்களில் பெரும்பாலோரின் பதிலாக இருக்கும்.
"கடவுளுக்கான காணிக்கை அது. இவ்வாறெல்லாம் யோசிப்பது பாவ காரியம்; கடவுள் தண்டிப்பார்" என்று பலரும் அஞ்சுவதே அதற்கான முக்கியக் காரணம்.
'அனைத்தையும் படைத்தவர் கடவுள்; மனிதன் பணத்தைக் கண்டறியக் காரணமானவரும் அவரே. அவருக்கெதற்குப் பணமும் நகை நட்டுகளும்?' என்று கொஞ்ச நேரம் சிந்தித்திருந்தால் செய்யக்கூடாத இந்தத் தவற்றைச் செய்திருக்க மாட்டீர்கள்.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியேனும் உங்களைத் திருத்திக்கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்டது போல், தேவைக்கு மேல் உங்களிடம் பணமோ விலைமதிப்புள்ள பொருள்களோ இருந்து, அவற்றை நல்ல வழிகளில் செலவிட விரும்பும் நல்ல மனமும் உங்களுக்கு இருந்தால்.....
கீழ்வருவது 'பி.பி.சி.' என்னும் இணைய ஊடகத்தில் வெளியான செய்தி[https://www.bbc.com/tamil/india-55930408]. முதலில் இதைப் படியுங்கள்.
#கோவை நகரின் ரெட்பில்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள இருபது ரூபாய்ப் பிரியாணிக் கடை சமீபத்தில் பிரபலமாகி வருகிறது. இதற்குக் காரணம் இருபது ரூபாய்க்குப் பிரியாணி வழங்குவது மட்டுமல்ல, 'பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க...' என எழுதிவைத்து இலவசமாகப் பிரியாணிப் பொட்டலங்களை அள்ளிக்கொடுக்கும் ஷப்ரினாவின் மனிதநேயம்தான்.
மதிய வேளையில், சாலையோரத்தில் இரு குடைகளுக்குக் கீழ் அமைந்திருந்த பிரியாணிக் கடையில் பரபரப்பாக இயங்கி வந்த ஷப்ரினாவை நேரில் சந்தித்தோம்.
சூடான பிரியாணியை ஷப்ரினா தட்டில் எடுத்து வைக்க, அவரது கணவர் வாழை இலையில் பார்சல் கட்டிக்கொண்டே இருந்தார். இருபது ரூபாய்ப் பிரியாணியை ருசிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருந்தது.
ஒருபுறம் வாடிக்கையாளர்கள் பார்சலை வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தைக் கொடுத்துச் செல்கின்றனர். மற்றொருபுறம் 'பசிக்கின்றதா.. எடுத்துக்கோங்க' என எழுதப்பட்டிருந்த பெட்டியில் வைக்கப்பட்ட பிரியாணிப் பொட்டலங்களைப் பலர் எடுத்துச் செல்கின்றனர். இலவசப் பெட்டியில் பொட்டலங்கள் தீர்ந்ததைக் கவனித்த ஷப்ரினா, விறுவிறுவென்று சில பொட்டலங்களைக் கட்டி மீண்டும் பெட்டியில் வைத்துச் செல்கிறார்#
மீண்டும் தலைப்புக்கு வருவோம்.
உங்களிடம் உங்களின் தேவையை மிஞ்சிய பணம் இருந்தால், கோயில்களைத் தேடி ஓடாதீர்கள்; உண்டியலில் பணம் போடாதீர்கள்.
அந்தப் பணத்தை ஷப்ரினாவிடம் கொடுங்கள். அன்றாடம் ஒரு வேளைச் சோற்றுக்குக்கூட வழியில்லாத மேலும் பலரின் பசிக்கு அவர் உணவு கொடுப்பார்.
இலவசப் பிரியாணிப் பொட்டலம் வழங்குவதை அவர் விளம்பரத்திற்காகச் செய்கிறார் என்று சந்தேகப்பட்டால், அவரின் செயல்பாட்டைச் சில வாரங்களோ, சில மாதங்களோ கண்காணியுங்கள். அவர் செய்யும் சேவைக்கு மனிதாபிமானமே காரணம் என்பது உறுதியான பிறகு அவருக்கு நீங்கள் துணை நிற்கலாம்.
கோவையில் மட்டுமல்லாமல் ஊரூருக்கு ஷப்ரினாக்கள் இருப்பார்கள்; தேடினால் கிடைப்பார்கள். நீங்கள் விரும்பும்போது விரும்புகிற ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டலாம்.
வெறும் அனுமானக் கடவுள்களையும், அவர்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களையும் நம்பி முட்டாள் ஆகாதீர்கள்; மனிதாபிமானமுள்ள மனிதர்களை நம்புங்கள். பலரும் நம்பினால்.....
'தர்மம் தலைகாக்கும்' என்பார்கள். தலை காக்கிறதோ இல்லையோ, பல உயிர்களைக் காக்கும்!
=================================================================================