திங்கள், 16 மார்ச், 2026

‘அர்ச்சகர் தட்டில் பணம்’... பிச்சையா காணிக்கையா???

க்திமான்களே,

கோயில் வாசலில் கையேந்துவோருக்கு நீங்கள் காசு[1, 2, 5 ரூபாய்கள்] போட்டால் அது பிச்சை. 

கோயில் உண்டியலில் கட்டுக்கட்டாய் ரூபாய் போடுவீர்களே அது காணிக்கை.

நீங்கள் பிச்சை போடுவது, இருக்க இடமில்லாமலும், வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லாமலும் வறுமையில் வாடும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உதவுவதற்காக.

கோயில் உண்டியலில் பணம்[பயன்பாடு விரிவான ஆய்வுக்குட்பட்டது] போடுவது, நீங்கள் கும்பிடும் சாமிகளைத் தாஜா செய்வதற்காக. அதன் மூலம் உங்களின் குறைகள் நீங்குவதாகவும் கோரிக்கைகள் நிறைவேறுவதாகவும் நம்புகிறீர்கள்.

கோயிலில், பயப்பக்தியுடன் கும்பிடு போட்டு, அர்ச்சகர் நீட்டும் தீபாராதனைத் தட்டில் ஐம்பது நூறு என்று பணம் போடுகிறீர்களே[பெரும்பாலோர்], அது பிச்சையா காணிக்கையா? எதுவாயினும் அது அனுமதிக்கத்தக்கதா?

சிந்தியுங்களேன்.

                                            *   *   *   *   *

தட்டில் பணம்> செய்தி: 

அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினைக் கோவில் பணியாளர்கள் கவனிக்க வேண்டும். காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்[நிர்வாகம்]. இந்த உத்தரவானது, இந்து சமய அறநிலையத்துறைக் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மத்திமத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்தும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது[https://www.maalaimalar.com/news/tamilnadu/order-withdraw-for-priests-do-not-have-access-to-offerings-that-fall-on-the-aarti-plate-759919