எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 17 மார்ச், 2020

தமிழ் வளர்க்கும் குமுதமும்[வார இதழ்] ‘கொன்றை’ அறக்கட்டளையும்!!

போட்டியில், முதல் பரிசு ரூ3,00,000/, 2ஆம் பரிசு ரூ2,00,000/, 3ஆம் பரிசு ரூ1,00,000/, தேர்வாகும் 15 கதைகளுக்குத் தலா ரூ10,000/ என்று, ‘அவர்கள்’ நடத்தும் ‘சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டிக்கு, மிகப் பெரும் பரிசுத் தொகையை அறிவித்து நம்மைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள் குமுதம் வார இதழ் நிறுவனத்தாரும் ‘கொன்றை’ அறக்கட்டளைதாரரும்.

சிறுகதைகள் உரிய முகவரியை அடைவதற்கான இறுதி நாள் 31.03.2020.

கதையின் அளவு 1000 சொற்களுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்[மேல் விவரங்களை அறிய, http://www.konrai.org/kumudam என்னும் முகவரியைச் சொடுக்கலாம்].

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குப் பாடுபடுவது தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுதலுக்கு ஒப்பாகும் என்பதால், இப்பதிவுக்கு மேற்கண்டவாறு தலைப்புத் தரப்பட்டுள்ளது.

போட்டிக்கான அறிவிப்பு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு முன்பே குமுதம் இதழில் வெளியானது. இதனை அறியாத வலைப்பதிவு எழுத்தாளர்கள் இருக்கக்கூடும் என்பதால்  போட்டி குறித்த செய்தி பதிவாக வெளியிடப்படுகிறது.

நன்றி.
எழுத்தாளர்களின் கவனத்திற்கு: குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி - சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி
=======================================================================