தொடர்ந்து 30 நாட்கள் தங்களின் தாய்நாட்டில் தங்கிக் கடமையைச் செய்யாமல் வெளிநாடுகளில் சுற்றும்பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகளை ரத்து செய்ய ஒரு மசோதா கொண்டுவருவது மிக மிக மிக வவேற்கத்தக்கது!
அன்றிலிருந்து இன்றுவரை ஆண்கள் செய்த/செய்யும் அட்டூழியங்களுக்குத்தான் இன்றையப் பெண்கள் பதிலடி கொடுக்கிறார்கள்!
“ஆகா, பெண்ணினம் சீரழிந்துவிட்டது; சமூகக் கட்டுப்பாடு சிதைந்துவிட்டது” என்றெல்லாம் ஆத்திரப்படவோ, கொதித்துக் கொந்தளிக்கவோ தேவையில்லை. அவற்றால் பயன் ஏதும் இல்லை!
காரணம், இவையெல்லாமே இயற்கை நிகழ்வுகள்! இறை நம்பிக்கையாளர்களுக்கு ‘அவன்’இன் திருவிளையாடல்கள்!!