சனி, 13 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம்... இன்று ‘ஒரு நாள்’ உண்ணாவிரதம்! அடுத்து? அடுத்து? அடுத்து?

//திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உள்ளூர் மக்களில் ஒரு தரப்பினர்[50 பேர்] சார்பாக உண்ணாவிரதம்//*[செய்தி] 

உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றமே அனுமதி அளித்திருக்கிறது; ஆதரவாகவும் இருக்கிறது.

த.நா.அரசு அனுமதிக்காவிட்டால், அடுத்தடுத்தடுத்து, ஐயாயிரம் பேர், ஐம்பதாயிரம் பேர், ஐந்து லட்சம் பேர் என்று பெரும் எண்ணிக்கையிலான பக்தக்கோடிகள் உண்ணாவிரதம் இருப்பார்கள். பயந்தும் பணிந்தும் தர்க்காவுக்கு அருகே உள்ள தூணில்[தீபத் தூணோ அல்லவோ] தீபம் ஏற்ற அரசு அனுமதிக்கும்.

அடுத்து.....

தீபத் தூணுக்கு அருகே உயரமான இடத்தில் இஸ்லாமியர்களின் தர்கா இருக்கக் கூடாது. அதை அகற்ற வேண்டும் என்று, இந்தியா எங்கும் உள்ள பக்திமான்கள் திரண்டுவந்து, நீதிமன்ற அனுமதியுடன் ‘சாகும்வரை’ உண்ணாவிரதம் இருப்பார்கள்.

தர்கா அகற்றப்பட்டு அங்கு ராமச்சந்திர மூர்த்திக்கு மாளிகை எழுப்பப்படும்; திருப்பரங்குன்றத்திற்குப் பாலராமர் குன்றம் என்று புதிய நாமகரணம் சூட்டப்படும்[இதற்கும் உண்ணாவிரதம் இருப்பார்கள்].

அடுத்து.....

அவ்வப்போது இந்த நாட்டில் ஏற்படும் மதக் கலவரங்களுக்குக் காரணமாக இருக்கும் இஸ்லாமியரின் தர்காக்களோ மசூதிகளோ[+கிறித்தவர்களின் தேவாலயங்கள்?] இருத்தல் கூடாது என்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். விளைவு.....

அனைத்துப் பிற மதத்தவர் வழிபாட்டுத் தலங்களும் அகற்றப்பட்டு, முழுக்க முழுக்க ஒரு ‘இந்து’ நாடாக இந்தியா காட்சியளிக்கும்; ஜொலிக்கும்.

அடுத்து.....

வேறென்ன, இந்தப் புண்ணிய ராமஜென்மப் பூமி மதக் கலவரங்களே இல்லாத அமைதிப் பூங்காவாகத் திகழும். கலவரங்களுக்கே இடம் தராமல் இந்து மக்கள்[அனைத்து இனத்தவரும் இந்துக்களாக மாறியிருப்பார்கள், அல்லது மாற்றப்பட்டிருப்பார்கள்] ஒற்றுமையுடன் சுபிட்சமாக வாழ்வார்கள்.
போற்றி போற்றி ராமச்சந்திர மூர்த்தி போற்றி!

வாழ்க... வளர்க... ராமஜென்மப் பூமி[‘இந்தியா’]! வெல்க ராமப்பிரானின் பக்தர்கள்!!
                                           
                                       *   *   *   *   *