//திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவியிடம் பட்டம் வாங்காமல், அவரைப் புறக்கணித்து, துணைவேந்தரிடம் பட்டத்தைப் பெற்றுச் சென்ற பட்டதாரிப் பெண்.....//> ஊடகச் செய்தி.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் ‘பல்கலை.’ 32ஆவது பட்டமளிப்பு விழா, நேற்று திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக் கழக வளாகத்தில் நடந்தது. ரவி[கவர்னர்] என்பவர் பட்டங்களை வழங்கினார்.
விழாவில், நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, தனக்கான முனைவர் பட்டத்தை ஆளுநன் மூலம் வாங்க மறுத்து, துணைவேந்தர் சந்திரசேகரிடம் இருந்து பெற்றார்.
''கவர்னர் ரவி, தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகச் செயல்படுகிறார். எனவே, துணைவேந்தரிடம் பட்டம் பெற்றேன்” என்று தன்னுடைய புறக்கணிப்பிற்கு விளக்கம் அளித்துள்ளார் ஜீன் ஜோசப்.
அவர் அளித்த விளக்கம் முழுமையானதல்ல.
“தமிழினத்தை அவமதித்து அவர்களின் தன்மான உணர்ச்சியை முற்றிலுமாய் அழிப்பதற்கும், மூடநம்பிக்கைளின் விளைநிலமான சனாதனத்தைப் போற்றிப் புகழ்வதற்கும் மேலிடத்தால் அனுப்பப்பட்ட நபரான உம் கையால் பட்டம் பெறுவதை நான் அவமானமாகக் கருதுகிறேன்” என்றுதான் அவர் சொல்ல நினைத்திருப்பார்; தமிழர் நாகரிகம் கருதி அதைத் தவிர்த்து மேற்கண்டவாறு கூறியிருக்கக்கூடும்.
கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்தி, நாகரிகம்/பண்பாடு என்றால் என்னவென்று அறிந்திராத ஆளுநனை அது குறித்து அதை அறியத் தூண்டிய முனைவர் ஜீன் ஜோசப் அவர்களுக்கு நம் பாராட்டுகளும் நன்றியும்.
ஒவ்வொரு தமிழனும் இம்மாதிரியான வாய்ப்புக் கிடைத்தால் அதைப் பயன்படுத்தி, ஆளுநனுக்குப் புத்தி புகட்டுதல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.
* * * * *
சங்கிகளின் கைக்கூலி ‘தினமலம்’ மாணவியை இழிவுபடுத்தும் வகையில் செய்தி வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது> https://www.dinamalar.com/news/tamil-nadu-news/controversy-over-a-woman-with-a-doctorate-degree-who-ignored-the-governor-without-stage-manners/4006802
