எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

மூளைப் புற்றுநோய்... அறிகுறிகள்:

மூளைப் புற்றுநோய்க் கட்டி மிகவும் ஆபத்தானது. இதற்கான அறிகுறிகள்:

*வலி நிவாரணிகளுக்குக்  கட்டுப்படாத  நீடித்த தலைவலி.

*குமட்டலோ வாந்தியோ ஏற்படுதல்.


*பார்வை மங்குதல்; இரட்டைப் பார்வை.


*அடிக்கடி கண்களைச் சுருக்குதல், கவனம் செலுத்துவதில் சிரமம், பிரகாசமான விளக்குகளைப் பார்க்கும்போது கண் கூசுதல்[கண்ணாடி அணிந்திருந்தாலும் கூட]. 


*தற்காலிக மனக் குழப்பம், பேசுவதில் சிரமம், சிறிது நேரத்திற்குச் சுயநினைவு இழப்பு. 


*நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், மனதைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் பாதிப்பு.


*மறதி, எரிச்சல்,  மனச்சோர்வு, பதற்றம்.


இவ்வறிகுறிகள் சிலவாகவோ பலவாகவோ இருப்பினும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

====================

***‘புற்றுநோய்’ குறித்தான தேடலில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு[சுருக்கமாக].