மூளைப் புற்றுநோய்க் கட்டி மிகவும் ஆபத்தானது. இதற்கான அறிகுறிகள்:
*வலி நிவாரணிகளுக்குக் கட்டுப்படாத நீடித்த தலைவலி.
*குமட்டலோ வாந்தியோ ஏற்படுதல்.
*பார்வை மங்குதல்; இரட்டைப் பார்வை.
*அடிக்கடி கண்களைச் சுருக்குதல், கவனம் செலுத்துவதில் சிரமம், பிரகாசமான விளக்குகளைப் பார்க்கும்போது கண் கூசுதல்[கண்ணாடி அணிந்திருந்தாலும் கூட].
*தற்காலிக மனக் குழப்பம், பேசுவதில் சிரமம், சிறிது நேரத்திற்குச் சுயநினைவு இழப்பு.
*நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், மனதைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் பாதிப்பு.
*மறதி, எரிச்சல், மனச்சோர்வு, பதற்றம்.
இவ்வறிகுறிகள் சிலவாகவோ பலவாகவோ இருப்பினும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
====================
***‘புற்றுநோய்’ குறித்தான தேடலில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு[சுருக்கமாக].

