சனி, 31 அக்டோபர், 2020

இலவசம்!...ஆடு, மாடு...பின்னே கடவுள்!!!

[மனிதகுலத்தின் முதல் தேவை மனிதாபிமானம்]

இன்று[31.10.2020] பிற்பகல் 02.15 மணிக்கு 'பாலிமர்' தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. 

வேறு வேறு செய்திகளுக்கிடையே, 'திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவசத் தரிசனம். அனுமதிச் சீட்டு வாங்க முண்டியடிக்கும் பக்தர்கள்' என்னும் செய்தியும் இடம்பெற்றிருந்தது. அதற்கான பின்னணி நிகழ்வும் திரையில் காட்டப்பட்டது.

கடவுள் எனப்படுபவர்தான் உயிர்களைப் படைத்தார் என்றால், அவரால் உயிர்கள் பெறும் இன்பங்களைக் காட்டிலும் பெறும் துன்பங்களின் அளவு மிக மிக மிகப் பல மடங்கு அதிகம் என்னும் பகுத்தறிவாளரின் கூற்றை நம்மவரில் பலரும் உணரும் நிலையில் இல்லை.

அவரை வழிபடுவதாலோ, நேர்ந்துகொள்வதாலோ, கோயில்களில் குடியேற்றி விழாக்கள் எடுத்துக் கொண்டாடுவதாலோ எந்தவொரு பயனும் இல்லை என்று நற்சிந்தனையாளர்கள் சொல்வதை இந்த மானுட ஜாதியாரில் பெரும்பாலோர் நம்பத் தயாராயில்லை.

காலங்காலமாய்ப் பல கொள்ளை நோய்களின் தாக்குதலில் கொத்துக் கொத்தாய்ப் பல லட்சம் பேர் பலியான போதெல்லாம் கடவுள்[கள்] என்ன செய்துகொண்டிருந்தார் என்று கேட்கும் துணிவு எந்தவொரு பக்தனுக்கும் இல்லை.

இன்றளவில், கொரோனா கொடுந்தொற்றால் லட்சக்கணக்கானவர்கள் படும் துன்பங்களையும் உயிரிழப்புகளையும் கண்கூடாகப் பார்க்க நேர்ந்தும், புற்றீசல்களாய்க் கோயில்களை நோக்கிப் படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

'கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை முதலில் கோயில்களுக்கு அனுப்புவோம். கடவுள் குணப்படுத்துகிறாரா பார்ப்போம்' என்று சொல்லும் துணிவு எவருக்குமே இல்லை என்பது பரிதாபம்.

முற்றுப்பெறாத தொடர் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்களே இந்தக் கற்பனைக் கடவுள்கள்தான். இதை உணராதவரை இந்த மனித ஜாதி திருந்தப்போவதில்லை.

அடுத்தடுத்துப் பல கொரோனாக்கள் தாக்குதல் தொடுத்தாலும், கடவுளி[களி]ன் காலடிகளில் கிடந்து புலம்பும் அறியாமையிலிருந்து இவர்கள் விடுபடுவது இப்போதைக்கு இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது! 

நோயற்றவர்கள் நோயுற்றவர்களுக்கு உதவலாம். வசதி படைத்தவர்கள் வசதியற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம். முடிந்தவரை பண உதவி செய்து ஆட்சியாளரையும் அறிவியல் அறிஞரையும் ஊக்குவிக்கலாம். கடவுளுக்காக நேரத்தையும் பொருளையும் வீணடிக்காமல் இவை போன்ற நல்ல செயல்களில் மனதைச் செலுத்தினால் மட்டுமே மனித ஜாதி உருப்படும் என்பது உறுதி.


ஏழுமலையான் கோயிலில் எனக்கு மிக மிக மிகப் பிடித்தது இது மட்டுமே! ஹி...ஹி...ஹி!!

வியாழன், 29 அக்டோபர், 2020

குஷ்பு, கவுதமி, காயத்திரி ரகுராம் போன்ற 'பெண்' இனத்தவருக்குச் சமர்ப்பணம்!!!

மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனைச் சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794இல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்[1] இந்நூலைத் திருலோக சீதாராம் என்பவர் தமிழ் மொழியில் பெயர்த்துள்ளார்.

தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது. இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. 'இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களை நிலைநிறுத்துவதற்கும், பெண்களை மிக இழிவாகவும் போகப் பொருளாகவும் வலியுறுத்துவதற்கும் மேட்டுக்குடியினர் கையாளும் உத்தி இது' என்று இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.

இந்நூலுக்கு மானவ தர்மம் (சமசுகிருதம்:मानवधर्मशास्त्र) என்ற பெயரும் உள்ளது. அதற்கு மானுட அறம் என்று பொருளாகும். -விக்கிப்பீடியா

                            *                         *                       *                       *                      *                 

மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்."

மனு 2.214: ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்."

மனு 2.215: ''தாய், மகள், சகோதரி என்று எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவையாதலால் அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"

மனு 9.14: ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்."

மனு 9.15: ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்."

மனு 9.16:  ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்." 

மனு 9.17: ''படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள், படுக்கை மோகம், பதவி தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மையின்மை, வஞ்சகம், தீயநடத்தை ஆகியவை."

மனு 9.2:  ''இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்; உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்."

மனு 9.3:  ''குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத் தகுதியற்றவள்."

மனு 9.5:  ''எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீய குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும், பாதுகாக்காவிட்டால் குடும்பத்திற்குத் துயரத்தை வருவிப்பார்கள்." 

மனு 4.147: ''சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில்கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது."

மனு 11.45:  ''கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது என்பதால்தான்."

மனு 9.46:  ''விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது."

மனு 5.149:  ''தந்தையிடமிருந்தோ, கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள். விவாகரத்து உரிமை கிடையாது."

மனு 8.415: ''மனைவி, மகள், அடிமை, இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்.....

கணவன் இறந்தாலும் பெண் சொத்துக்கு உரிமை பெற முடியாது, மாறாக ஜீவனாம்சம் பெற முடியும் என்பதன் மூலம் கணவன் சார்ந்த குடும்பத்துக்கு அடிமையாக இருக்கக் கோருவதுடன் கணவனின் தம்பி, அல்லது அண்ணனுக்கு அல்லது தந்தைக்கு வைப்பாட்டியாக இருக்க, இந்தச் சொத்துரிமை மறுப்பு நிர்ப்பந்திக்கின்றது.....

[பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது]."

மனு 2.66 இல், ''பெண்.. வேதமந்திரங்களை ஓதக் கூடாது." [மனு 9.18]

மனு 9.36: ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது. அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்."

மனு 4.205: ''ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது."

மனு 4.206: ''பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்."

மனு 5.151:  ''தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது."

மனு 5.154:  ''அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்."

மனு 5.150:  ''அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். வீட்டுக் காரியங்களைத் திறம்பட ஆற்றுதல் வேண்டும்;. பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைத்தல் வேண்டும். செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்."

மனு 5.15: ''கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர் பதவி கிடைக்கும்."

மனு 5.15: ''புனித முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன். இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே."

அர்த்த சாஸ்திரம் 3,8:  ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள். உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம் பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது."

===============================================================

செவ்வாய், 27 அக்டோபர், 2020

மகளிர் மாதவிடாயும் ஒரு 'மதகுரு'வின் உளறலும்!!!

"மாதவிடாய் நேரத்தில் பெண்கள் தங்கள் கணவருக்கு உணவு சமைத்தால் மறுபிறவியில் அவர்கள் நாயாகவும், அந்த உணவை உண்ணும் கணவர், காளை மாடாகவும் பிறப்பார்கள்."

இந்தக் கருத்தை, குஜராத்தில், கட்ச் மாவட்டத்தில் உள்ள 'சுவாமிநாராயன்' கோயிலில் முக்கியப் பதவி வகிக்கிற 'குருஸ்னஸ்வரூப்  தாஸ்தி' என்ற மதகுரு சொல்லியுள்ளார்[https://www.hindutamil.in/news/india/540229-menstruating-women-cooking-food-for-husbands-will-be-reborn-as-dogs-says-godman.html] 

சமீபத்தில் கல்லூரி மாணவிகள் 68 பேரின் உள்ளாடையைக் களைந்து மாதவிடாய்ச் சோதனை நடத்திக் கைதான கல்லூரி முதல்வரும், அலுவலர்களும் பணியாற்றிய கல்லூரியும் சுவாமி நாராயணன் கோயிலில் இயங்கி வருகிறது.

குஜராத்தில் கட்ச் மாவட்டத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீசகஜானந்த் பெண்கள் இன்ஸ்டிடியூட்(எஸ்எஸ்ஜிஐ) இயங்கி வருகிறது. சுவாமி நாராயணன் கோயில் டிரஸ்ட் மூலம் இந்தக் கல்லூரி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் எழுதப்படாத விதி ஒன்று அமலில் உள்ளது. அதாவது இங்குள்ள விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகள், தங்களது மாதவிடாய்க் காலத்தில் சக மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்பதும், பழகுவதும் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விதியைச் சில மாணவிகள் மீறியதாகக் கூறப்படுகிறது. மாணவிகள் சிலர் இந்தக் கட்டுப்பாட்டை மீறிய தகவல் விடுதிக் காப்பாளருக்குத் தெரியவந்ததை அடுத்து அவர், கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். விடுதிக் காப்பாளர் அளித்த புகாரின் பேரில், கல்லூரி முதல்வர் தலைமையில், விடுதியில் இருந்த 68 மாணவிகளையும் கழிவறைக்கு வரிசையாக அழைத்துச் சென்று அவர்களது உள்ளாடைகளைக் களையச் செய்து சோதனை நடத்தி உள்ளனர்.

இந்தச் செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் உருவாக்கியது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடு உள்ளிட்ட நெருக்கடி காரணமாகக் கல்லூரி முதல்வர் ரீட்டா ரணிங்கா , கல்லூரி நிர்வாகி ரமீலா பென், புயூன் நைனா உள்பட 3 பேர் கடந்த 11ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர்,அலுவலக உதவியாளர் ஆகியோரையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்தச் சூழலில் சுவாமி குருஸ்னஸ்வரூப் தாஸ்ஜி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ எங்கு எப்போது பேசியது எனத் தெரியவில்லை. ஆனால், கோயிலின் யூடியூப் சேனலில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் அவர் பேசுகையில், "மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சமைக்கும் உணவை உண்ணும் கணவர் அடுத்த பிறவியில் காளை மாடாகவும், அந்த மாதவிடாய் நேரத்தில் கணவருக்கு உணவு சமைக்கும் பெண்கள் அடுத்த பிறவியில் பெண் நாயாகவும் பிறப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்[கணவன் ஆண் நாயாக அல்லவா பிறக்க வேண்டும்?!].

என்னுடைய கருத்தை நீங்கள் விரும்பாவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. இவை அனைத்தும் சாஸ்திரங்களில்[???] கூறப்பட்டுள்ளது. ஆதலால் கணவன்மார்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் கவனக்குறைவாக இருந்து உணவு சமைத்தால் அது பாவமாகும். ஆதலால், ஆண்கள் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும். அது உங்களுக்கு உதவும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                 *                                   *                               *                         *                           *

2016இல் நான்['பசி'பரமசிவம்] வெளியிட்ட ஒரு பதிவு, இந்த ஆளின் உளறலுக்குப் பதில் தரும் வகையில் அமைந்துள்ளது. வாசித்துத் தெளிவு பெறுக.

வியாழன், 28 ஜூலை, 2016

மாதவிடாய்க் குருதி தூய்மையற்றதா?

‘இப்படியொரு கேள்விக்கே இனி இடமில்லை’ என்று அடித்துச் சொல்கிறார் ம.சுசித்ரா, ‘எப்போது தீரும் மாதவிடாய்த் தீண்டாமை?’ என்னும் தலைப்பிலான தன் கட்டுரை[‘தி இந்து’, 24.07.2016]யில்.
வியாழன், 28 ஜூலை, 2016
மாதவிடாய்க் குருதி தூய்மையற்றதா?
‘இப்படியொரு கேள்விக்கே இனி இடமில்லை’ என்று அடித்துச் சொல்கிறார் ம.சுசித்ரா, ‘எப்போது தீரும் மாதவிடாய்த் தீண்டாமை?’ என்னும் தலைப்பிலான தன் கட்டுரை[‘தி இந்து’, 24.07.2016]யில்.
‘மாதவிடாய் தூய்மையானது என்று நிரூபித்துவிட்டது நவீன மருத்துவம். தொப்புள் கொடி ரத்தமும் எலும்பு மஜ்ஜையும் பரம்பரை நோய் தீர்க்கும் அருமருந்துகள். அவற்றைப் போலவே மாதவிடாய் ரத்தத்தில் உள்ள ஸ்டெம் செல்லும்[stem cell] உயிர் காக்கும் சக்தி கொண்டது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், என்ன சொன்னாலும் மாதவிடாயின்போது பெண்ணே தன் உடலை வேண்டா வெறுப்பாகப் பார்க்கும் கற்பிதத்திற்குள்தான் இன்னும் சிக்கிக் கிடக்கிறார்கள்' என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் கட்டுரையாளர்.
 menstrual blood is impure? என்று கூகிளில் தட்டச்சு செய்ததில் ஏராள தகவல்கள் கிடைத்தன. அவை மேற்சொல்லப்பட்ட கருத்துகளுக்கு வலிமை சேர்க்கின்றன.  அவற்றில் மிகச் சில மட்டும் கீழே.
* menstrual blood is not dirty. its just like any other blood that you can find in your body, it is just darker because unlike the blood in your veins, it does not flow as easily. menstrual blood is also darker because it contains the lining of your uterus. ----www.epigee.org › Topics › Menstruation
* Now, news that stem cells found in menstrual blood — along with cells from babies’ umbilical cords — could potentially be incorporated into treatments for stroke, Alzheimer’s disease and Lou Gehrig’s disease, or amyotrophic lateral sclerosis, kind of puts a different spin on things. (More on Time.com: Using Stem Cells to Restore Sight)--healthland.time.com/.../stem-cells-from-menstrual-blood-stran.
* Biologically menstrual fluid is a mixture of tissues and blood vessels and there is nothing impure about it, it
 does not contain a smell of its own, it gives foul smell only after it comes in contact with air outside the body.
----Menstrupedia
* Tejinder Bhatia, A Numismatist, An Artist , A Sapiosexual and Dream Chaser
1.7k View
Actually, you need to define , what do you
mean by impure blood? Because Menstruation is just
the periodic discharge of blood and mucosal tissue (the endometrium) from the uterus and vagina.
  Yea, Its full bacteria, if that's what you mean.

திங்கள், 26 அக்டோபர், 2020

அந்தரங்கம் புனிதமானது!!![சி.கதை]

‘உடலுறவில் உச்சம் தொடுவது எப்படி?’ என்ற பலான புத்தகத்தைப் பூங்காவின் கடைக்கோடியில், சிதிலமடைந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து படிக்கத் தொடங்கியபோது[அப்போ நான் புது மாப்பிள்ளை!], “வணக்கம் ஐயா. நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சி” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டேன்.

பார்வையைச் சுழற்றிக் குரலுக்குரியவரைத் தேடினேன். தொலைவில் சில மனித உருவங்கள் தென்பட்டன. பேச்சுச் சத்தம் கேட்கும் அளவுக்கு என்னைச் சுற்றி ஆட்களின் நடமாட்டமே இல்லை. என் அந்தரங்க வாசிப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அங்கே ஒருவர் குரல் கொடுத்தது எப்படிச் சாத்தியமாயிற்று? யாருமில்லை[எட்டி விழுந்து திருட்டுத்தனமாய்ப் படிக்க] என்று உறுதிப்படுத்தித்தானே அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்!

“பார்த்து ரொம்ப நாளாச்சி... பார்த்து.. .சார்த்து... கோர்த்து... போர்த்து...  வார்த்து...” 

எதுகை மோனைச் சொல்லடுக்கு எனக்குள் குழப்பம் விளைவித்தது. புத்தகத்தைக் கைப்பையில் திணித்துக்கொண்டு எழுந்து நின்று செவிப்புலனைக் கூர்மையாக்கினேன்.

“அவனா? அவன் பெரிய எத்தன் ஐயா. எத்தன்... வத்தன்... கொத்தன்... வத்தல்... தொத்தல்... மொத்தல்...”

சில வினாடி இடைவெளிக்குப் பிறகு மர்மக் குரல் தொடர்ந்து ஒலித்தது. “க் ச் ட் த் ப் ற்... க ச ட த ப ற...ய ர ல வ ழ ள... ல ள ழ... ஒன்னு ரெண்டு மூனு... அஞ்சு... பத்து... அம்பது நூறு... ஆறு...”

“ஆருடா அவன்...? நான் பேசுறதைக் கவனிக்காம ஒளிச்சி வெச்சிப் படிக்கிறியே என்ன புஸ்தகமடா அது?”.....

“கதையா, இல்ல, 'பலான' புத்தகமா?”

“மறைக்காதே. மரியாதையா என்கிட்ட குடுத்துடு. கொண்டாந்து குடுடா.”

“நீயா வர்றியா நான் வரட்டுமா?”

என் அடிமனதில்  பயம் கவ்வியது; நாடிநரம்புகளிலெல்லாம் அது ஊடுருவியது. கால்கை உதறலைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்து நின்று, வரிசை கட்டியிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினேன்.

செடிகளின் மறைவில் சற்றே வயதான ஒரு ஜிப்பா உடுத்த மொழுமொழு மண்டை மனிதர் நின்றுகொண்டிருந்தார்.

எனக்குள் நிம்மதி பரவியது. 

‘ஐயோ பாவம். அந்த வழுக்கை பைத்தியம் போலிருக்கு’  -மனதுக்குள் அனுதாபத் தீர்மானம் போட்டுவிட்டு, வேறு தனியிடம் தேட முடிவெடுத்துப் பெஞ்சிலிருந்து தரையில் குதித்தேன்.

நான் குதித்த சத்தம் பைத்தியத்திற்குக் கேட்டிருக்க வேண்டும். “மிஸ்டர்...” என்று உரத்த குரலில் விளித்தது; ஒரே தாவலில் என்னை நெருங்கிவிட்டது; “வத்திப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்” என்றது.

கடந்த வாரம் என் நண்பருக்கு இதே பூங்காவில் ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்து என்னை மிரள வைத்தது. ஓசிப் பீடி கேட்டுவந்த ஓர் ஆளிடம்[பைத்தியம்], இவர் “இல்லை” என்று சொல்ல, “உள்ளே ஒளிச்சி வெச்சிருக்கே” என்று நயமாய்ச் சிரித்துக் கண்மூடித் திறப்பதற்குள் அவருடைய வேட்டியை உருவிவிட்டதாம் அது!

“தீப்பெட்டி இருந்தால் கொடுங்களேன்.” -கோரிக்கையைப் புதுப்பித்தது பைத்தியம்.

சந்தேகமில்லை. இந்தக் கிழவன்தான் அந்தப் பைத்தியம்!

நான் ஓடிவிட நினைத்து,  இரண்டு அடிகள் எடுத்து வைத்தேன்.

“மிஸ்டர், சத்தியமா இந்தப் பூங்காவில் உலவுற பைத்தியம் நான் அல்ல. நான் தனிமையில் பிதற்றினதைப் கேட்டா அப்படித்தான் நினைக்கத் தோணும். நான் பள்ளிக்கூட வாத்தியார். புதுசா பல்செட் போட்டிருக்கேன். பேசிப் பிழைக்கிறதுதானே என் தொழில். சரியாப் பேச வருதான்னு தனியான இடம் தேடிவந்து சோதிச்சிப் பார்த்திட்டிருந்தேன். நீங்க உட்கார்ந்திருப்பதையும் கவனிச்சேன். உங்களுக்குக் கேட்காதுன்னு நினைச்சி நான் பாட்டுக்குப் பேசிட்டுருந்தேன். உங்களுக்குக் கேட்டுடிச்சி போல. நீங்க நினைக்கிற மாதிரி நான் பைத்தியம் அல்ல. சந்தேகம் இருந்தா பார்த்துக்கோங்க” என்று வாய் திறந்து புதிய பல்செட்டைக் கழற்றிக் காட்டினார் வழுக்கை மனிதர்.

“ஹி...ஹி...ஹி...” -அசடு வழியச் சிரித்துவிட்டு, புத்தகப் பையுடன் மீண்டும் தனியிடம் தேடி நகர்ந்தேன்.

ஹி... ஹி... ஹி!!!

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

கொரோனா நீடித்தால்... பாலியல் வன்முறை பெருகும்! மேலும்...


*உலகெங்கிலும் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்திருக்கும் நிலையில், கருத்தடைச் சாதனங்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. லாக்டவுனால் சுகாதாரத்தைப் பேணுவதற்கான போராட்டங்களுக்கு மத்தியில் பாலியல் மற்றும் இனப்பெருக்கச் சுகாதாரச் சேவைகள் ஓரங்கட்டப்பட்டு, பாலின அடிப்படையிலான வன்முறை அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

*COVID-19 பரவல் 6 மாதங்களுக்கு மேல் நீடித்தால், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள 114 நாடுகளில் சுமார் 47 மில்லியன் பெண்கள் நவீனக் கருத்தடைகளைப் பயன்படுத்த முடியாது என்று கணிக்கப்பட்டுள்ளது.  மேலும் 3 மாதங்களுக்கு லாக்டவுன் தொடர்ந்தால், மேலும் 2 மில்லியன் பெண்கள் நவீனக் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.

6 மாதங்களுக்கு மேல் லாக்டவுன் தொடர்ந்தால் கூடுதலாக 7 மில்லியன் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலின அடிப்படையிலான வன்முறை தொடர்பான 31 மில்லியன் வழக்குகளையும் எதிர்பார்க்கலாம் என்பது மிகவும் கவலைக்குரியது.

*குடும்ப வன்முறை குறித்தப் புகார்களின் எண்ணிக்கை 2020 மார்ச் 2ஆம் தேதியில் தொடங்கிய முதல் வாரத்தில் 30 ஆக இருந்ததை விட,2020 மார்ச் 23 முதல் 2020 ஏப்ரல் 1 வரையிலான காலப்பகுதியில்,  இரு மடங்கிற்கும் மேலாக அதாவது 69 ஆக அதிகரித்துள்ளது என்று தேசிய மகளிர் ஆணையம்- என்.சி.டபிள்யூ (NCW) தெரிவித்துள்ளது. பிந்தைய காலகட்டத்தில் புகார்கள் பெரும்பாலும் மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்டதாக மகளிர் ஆணையத்  தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

*30.8%  வன்முறைகள் வீட்டிலேயே நிகழ்வதாகக் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, பெண்களுக்கு உதவும் ஹெல்ப்லைன் எண்களைத் தொடர்பு கொள்வது அதிகரித்து, மன அழுத்தத்திற்கான அழைப்புகளில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

*தற்போது கோவிட்19 தொற்றுநோய்க்கு எதிராக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீடுகளில் பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான குடும்ப வன்முறைகள் "நிறுத்தப்பட வேண்டும்" என்று ஐ.நா. சபையின் தலைவர் அழைப்பு விடுத்துள்ள சூழலில்,  குடும்ப வன்முறைப் புகார்கள் அதிகரிப்பிற்கு நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

*வீட்டினுள் வன்முறை என்பது பாலின அடிப்படையிலான வன்முறையின் மிகவும் பொதுவான வடிவங்களில் ஒன்றாகும். இது  குடும்பத்தினரின் அல்லது வீட்டின் உறுப்பினர்களாகவோ,  முன்னாள் அல்லது தற்போதைய காதல் அல்லது பாலியல் கூட்டாளிகளாகவோ இருக்கும் நெருங்கிய நண்பர்களால் ஏற்படக்கூடும். முந்தைய நிலைமை குடும்ப வன்முறை என்றும் பிந்தையது நெருக்கமான கூட்டாளர் வன்முறை (ஐபிவி) என்றும் அழைக்கப்படுகிறது.

*இந்தியாவில், இனப்பெருக்க வயதில் (15 முதல் 49 வயது வரை) ஒவ்வொரு மூன்று பெண்களில் 30% அல்லது கிட்டத்தட்ட ஒருவர் உடல் ரீதியான வீட்டு வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள் என்று, தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு (NFHS) 2015-16 தெரிவிக்கிறது.  தங்கள் வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் திருமணமான பெண்களில், 33% பேர் தங்களது கணவரால் உடல் ரீதியாகப் பாலியல் அல்லது உணர்ச்சி ரீதியான வீட்டு வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள்.

*ஆதரவைத் தேடுவது என்பது காவல் துறையில் புகாரைப் பதிவுசெய்ய நேரில் செல்வது அல்லது தொலைபேசியை அணுகுவது மற்றும் உதவிக்கு ஒரு ஹெல்ப்லைனை அழைக்கக்கூடிய தனியுரிமை ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தியாவில் 57% பெண்கள் மொபைல் போன்களை வைத்திருக்கவில்லை என்று புள்ளி விவரம் கூறும் நிலையில், ஊரடங்கின் போது அதற்கான எந்த வாய்ப்பும் இருக்காது.

*ஊரடங்கின் போது அதிகரித்து வரும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது - கூகிள் போன்ற தேடுபொறிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் குடும்ப வன்முறை தொடர்பான உதவிக்கான தேடல்கள் அதிக அளவைக் கண்டன - ஒரு சவாலாக இருக்கும் என்று ஐ.நா குறிப்பிட்டது. 

*கொரோனா வைரஸிற்கான அரசின் பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் வீட்டு வன்முறை பற்றிய விழிப்புணர்வு மற்றும் உதவி பெறும் வழிகள் ஆகியன இருக்க வேண்டும் என்று ஜாகோரியின் வேலங்கர் கூறினார்.

*ஊரடங்கைச் செயல்படுவதற்கான வழிகளைக் கண்டுபிடித்த மகளிர் அமைப்புகள், ஹெல்ப்லைன்கள் மற்றும் மருந்துகள் மற்றும் கருத்தடை மருந்துகளை உள்ளடக்கிய ‘அத்தியாவசியச் சேவைகளின்’ நோக்கத்தை அரசுகள் விரிவுபடுத்த விரும்புகின்றன.

கீழ்வரும் தளங்களுக்கு நன்றி.

https://zeenews.india.com/tamil/exclusive/world-population-day-2020-338242

https://tamil.indiaspend.com/activists-urge-roping-in-asha-workers-and-other-novel-approaches-as-domestic-violence-rises-during-lockdowns/

Lankasri Newsnews.lankasri.com › germany

சனி, 24 அக்டோபர், 2020

'குஷ்பு'வைப் போற்றுவோம்!!!

"பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டது. தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன..... 

'தற்போது இந்தியாவை ஆட்சி செய்வது புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டமா? அல்லது மனுஸ்மிருதியா?' என்னும் கேள்வி எழுந்துள்ளது.

பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது மனுஷ்மிருதி. ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது. அதன் காரணமாகவே புரட்சியாளர் அம்பேத்கர் 1927ஆம் ஆண்டிலேயே அதைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

அத்துடன், அவருடைய நூல்கள் பலவற்றிலும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோதக் கருத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளார். அதுபோலவே தமிழ்நாட்டில் தந்தைபெரியார் அவர்களும் மனுஸ்மிருதியை எரித்துள்ளார்." 

மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை இந்தச் சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரசாரத்தை நிறுத்தவே முடியாது.

எனவே, வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாகவும், பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று மீண்டும் குரலெழுப்ப வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

"புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் 'மனுநூலைத் தடைசெய்!' என்ற இந்த அறப்போராட்டத்திற்குச் சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்" என்றிவ்வாறெல்லாம் திருமாவளவன் கூறியவற்றை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன[https://www.bbc.com/tamil/india-54660846].

திருமாவளவனின் இந்தக் கருத்து வெளிவந்த சில நிமிடங்களிலேயே, பெண்கள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த கருத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்றும்; மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவரது கருத்துக் குறித்துக் கூட்டணிக் கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த திரைப்படக் கலைஞர் குஷ்பு வலியுறுத்தியிருக்கிறார்[ஊடகச் செய்தி].

குஷ்புவைப் பொருத்தவரை, முன்னோர்களால் பேணி வளர்க்கப்பட்ட மனுதர்மம் காக்கப்படுதல் வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.

நம் மனம் கவர்ந்த நடிகை. அவருக்கென ஒரு கோயில் கட்டிக் குடமுழுக்கெல்லாம் நடத்தியவர்கள் நாம். 

குஷ்புவுக்கும் திருமாவளவனுக்கும் இடையேயான விவாதத்தில் குஷ்பு வெற்றி பெற வேண்டும் என்பதே நம் போன்றோர் ஆசை. 

"பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு மனுவில் ஏதிமில்லை" என்று குஷ்பு கூறியதை மனதில் கொண்டு, பெண்கள் இழிவுபடுத்தப்பட்டதற்கான ஆதாரங்களைத் திருமா தேடக்கூடும். அவற்றைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல. குஷ்புவுடனான விவாதத்தில் திருமாவளவன் தோற்பார்.

ஆதாரம்: உங்களின் வாசிப்புக்கு மட்டும்.

//‘ஸூத்ருசோ.......................................................ப்ரஜபேன்மனும்...’[இரண்டு வரிகள்]

பொருள்: ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக்கொண்டு பத்தாயிரம் முறை காளிதேவியை நினைந்து மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமம் ஆவான்.

‘சாவம் ஹ்ருதயமாருஹ்ய................................................................’[நான்கு வரிகள்].

பொருள்: சுடுகாட்டில் அம்மணமாகப் பிணத்தின் மார்பில் அமர்ந்துகொண்டு, தன் வீரியத்தில்[விந்து] தேய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் மந்திரம் சொல்லிக் காளிதேவியைப் பூசிக்கிறவன் வெகு சீக்கிரம் அரசனாவான்.

‘ரஜ: கீர்ணபகம் நார்யா த்யாயன்யோயுத..................’[இரண்டு வரிகள்]

பொருள்: வீட்டுக்குத் தூரமான பெண்ணின் ரத்தத்தோடு கூடிய பெண்குறியைத் தியானித்துக்கொண்டு பதினாயிரம் உரு[மந்திரம்] செபிக்கிறவன் மதுரமான தன் பாடல்களால் உலகை மயக்கும் வல்லமை பெறுவான்.

‘................................................சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்[நான்கு வரிகள்]

பொருள்: புன்சிரிப்புடன் கூடிய முகத்தை உடையவளான காளிதேவியைத் தியானித்தவாறு, ஒரு பெண்ணைப் புணர்ந்துகொண்டே ஆயிரம் முறை செபிக்கிறவன் சிவபெருமானுக்கு ஒப்பாவான்.

‘ஸ்ருணோதி நூபுராராவம்.............................................................’[நான்கு வரிகள்]

பொருள்: மந்திரம் செப்பிப்பவன், தேவியின் சிலம்பொலியும் சங்கீதமும் கேட்டுக்கொண்டே மந்திரம் செபித்துக்கொண்டிருந்தால், தேவியானவள் மிக்க விருப்புடன் இவனைப் புணர்ச்சி செய்ய வருவாள். புணர்ச்சி முடிந்ததும் இவனுடைய அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றுவாள்[சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் எழுதிய ‘ஞான சூரியன்’,சாமி புக்ஸ், சென்னை]//

வெள்ளி, 23 அக்டோபர், 2020

மக்களை 'மடையர்கள்' ஆக்கும் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும்!!!

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இறங்கின. இதில், கொரோனா தடுப்பூசியைப் பதிவு செய்துவிட்டதாக ரஷ்யா முதல் நாடாக அறிவித்தது. 

இருப்பினும், கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் தடுப்பூசிகள் அனைத்துமே இன்னும் மருத்துவப் பரிசோதனைகளில்தான் உள்ளன. இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் தடுப்பூசிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.  இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடித்த ‘கோவேக்சின்’ தடுப்பு  மருந்துக்கு 3 ஆம் கட்டப் பரிசோதனை தொடங்க உள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியுள்ளது. 

மூன்றாவது கட்டப் பரிசோதனை 28,500 பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 10 மாநிலங்களில் டெல்லி, மும்பை, பாட்னா, லக்னோ உள்ளிட்ட 19 நகரங்களில் பரிசோதனை நடைபெற உள்ளது. இதுதவிர ஜைடெஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்போது இரண்டாம் கட்டப் பரிசோதனையிலும், சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனக்கா மருந்து 2 மற்றும் 3ஆம் கட்டப் பரிசோதனையிலும் உள்ளன .

விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கோவேக்சின் வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவது தெரியவந்துள்ளது என பாரத்பயோடெக் நிறுவனம் அண்மையில் கூறியிருந்தது நினைவிருக்கலாம்[https://www.dailythanthi.com/News/India/2020/10/23074331/Covaxin-Bharat-Biotechs-Coronavirus-Vaccine-Cleared.vpf].

இது அண்மைச் செய்தி[பதிவு: அக்டோபர் 23,  2020 07:43 AM]

இச்செய்தியில், கவனத்தில் கொள்ளத் தக்கவையாகச் சில அம்சங்க்கள் உள்ளன.

1. மூன்றாவது கட்டப் பரிசோதனை 28500 பேரிடம் நடத்தப்படவுள்ளது. 28500 என்பது ஒரு நிலை. இந்தச் சோதனை எதிர்பார்க்கிற பலனைத் தந்தால் மேலும் பல ஆயிரம் பேரிடம் இந்தப் பரிசோதனையைத் தொடர வேண்டியிருக்கலாம். 

எதிர்பார்க்கிற பலன் கிடைக்காவிட்டால், தடுப்பூசி குறித்த ஆய்வைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். அது எப்போது முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாது.

2. இந்தத் தடுப்பூசியை விலங்குகளுக்குச் செலுத்திப் பரிசோதித்ததில் வலுவான எதிர்ப்புச் சக்தி உருவானதாகச் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்குச் செலுத்தும் போதும் அதே அளவுக்கு எதிர்ப்புச் சக்தி உருவாக வேண்டும். இல்லையெனில் ஆய்வு தொடரும்.

3. பரிசோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. நம்பிக்கை பொய்த்துப்போகவும் வாய்ப்புள்ளது[மெய்ப்பட வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய ஆசையும்].

உண்மை நிலை இதுவாக இருக்க, பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், கொரோனா தடுப்பு மருந்து வந்த பிறகு அனைவருக்குமே இலவசமாக அதைப் போடுவோம் என்று ஒரு வாக்குறுதியைக் சேர்த்துள்ளது பா.ஜ.க.கட்சி.

பாஜக இதைச் செய்த சில நிமிடங்களிலேயே நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலவசமாகவே தடுப்பு மருந்தைக் கொடுப்போம் என்று அறிவித்துள்ளார். 

கொரோனாத் தொற்றின் அசுரத்தனமான தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமும் கதிகலங்கிப்போய், தீராத துயரத்தில் மூழ்கிக்கிடக்கிறது. தடுப்பூசி கண்டறியப்பட்டால், சாதி, மதம், இனம். மாநிலம், நாடு என்று வித்தியாசம் பாராட்டாமலும், பலனை எதிர்பாராமலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதே மனித மாண்பு.

கண்டுபிடிக்கப்படுகிற எந்தவொரு தடுப்பு மருந்தும் ஒட்டுமொத்த மனித குலத்துக்கானது என்பதை மறந்துவிட்டு, ஓட்டுக்காக இலவசமாக அதைத் தருவோம் என்று இந்த இரு கட்சிகளும் அறிவித்திருப்பது, இந்த மாநிலங்களைச் சாராத மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயலாகும்.

பீகாரில் பாஜக வெல்லாமல் போனால் தடுப்பு மருந்தே கொடுக்காமல் நடுவணரசு மக்களை அலைய விட்டுவிடுமோ என்ற அதிர்ச்சியான சந்தேகமும் எழவே செய்கிறது..

கொரோனாவுக்கு எதிரான போரில், தேர்தலில் ஜெயித்தால் இலவசம், இல்லாவிட்டால் இல்லை என்பது போல் பேசுவது தவறானது; நாட்டின் நலனுக்குப் பெரும் கேடு விளைவிப்பதும் ஆகும்!

புதன், 21 அக்டோபர், 2020

'எதை'ச் செய்தால் இதையெல்லாம் பெறலாம்?!

நான் சேமித்து வைத்துள்ள மிகப் பழைய வார இதழ்களில்  ஒன்றைப் புரட்ட நேர்ந்தபோது, அதன் ஒரு பக்கத்தில், 'இதைச் செய்தால்.....' என்னும் தலைப்பில்  உடல்நலம் பற்றியக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. 

குறிப்புகள்:

*மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

*நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

*புற்றுநோய், காச நோய் போன்றவை நெருங்கா.

*திடீர்த் தலைவலி, உடல்வலி எல்லாம் காணாமல் போகும். 

*ஆயுட் காலம் அதிகரிக்கும்.

*நிறையவே கலோரிகள் எரிக்கப்படும்.

*உடலின் அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்கும்.

*பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினை குறையும்.

*ஆண்களின் பிராஸ்டேட்டில்[காமநீர்ச் சுரப்பி] வீக்கம் வராது.

*சுரப்பிகளின் செயல்பாடுகள் மேலோங்கும்.

*இதை 10 நிமிடம் செய்வது 50 மைல் ஜாக்கிங் செல்வதற்குச் சமம்.

*முதுமையிலும் இளமைத் தோற்றம் நீடிக்கும்.

'இதை'ச் செய்தால் என்று பொத்தாம் பொதுவாகத் தலைப்பு தரப்பட்டிருப்பதால், அந்த 'இது' 'எது?' என்று யோசித்ததில்.....

'மூச்சுப் பயிற்சி'[யோகா]யாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. அவர்கள் தந்திருந்த விடையும் இதுவாகத்தான் இருந்தது. ஆனால், இதன் மூலம் இத்தனை நன்மைகளைப் பெற இயலுமா என்னும் சந்தேகமும் எழுந்தது.

உங்கள் சிந்தனையில் வேறு காரணம் எதுவும் தோன்றக்கூடும்.

சிந்தியுங்களேன்!

செவ்வாய், 20 அக்டோபர், 2020

'கற்பு' உருவான கதை!

இது அந்தக் காலத்துக் கதை. பொழுதுபோக்காக வாசிக்கலாம்.

திரேதாயுகத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஸ்வேதகேது என்ற முனிவர்தான், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கற்பு நெறிகளை வகுத்தவராம். அதற்கு மூலகாரணமான ஒரு நிகழ்வு கீழே.

ஸ்வேதகேதுவின் தந்தை உத்தாலகன். அவர் பலராலும் மதிக்கப்பட்டவர். மனைவி, மகன், மகள் என்று வாழ்ந்தவர்.

அந்தக் காலத்தில் ஒரு சம்பிரதாயம் இருந்தது. 

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்[அதிதி] வீடு தேடி வந்தால், அவரை வரவேற்று உபசரிப்பது வழக்கம்.

அவர் விரும்பும் உணவு வகைகளை உண்ணத் தருவதோடு, வீட்டு உரிமையாளரின் மனைவியுடனோ மகளுடனோ அவர் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டால், அவளை அவருக்கு விருந்தாக்க வேண்டும். பெண்களும்  சம்மதித்துவிடுவது[விருப்பம் இல்லாதபோதும்கூட] வழக்கத்தில் இருந்தது.

ஸ்வேதகேது ஒரு நாள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவரின் தந்தைவெளியே காத்திருக்க, அவருடைய தாயுடன் படுக்கை அறையில் முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் இருப்பதைப் பார்த்துச் சினம் கொண்டார்.

கட்டுக்கடங்காத சினத்துடன் தந்தையை நோக்க, "இது கலங்காலமாக இருந்துவரும் வழக்கம் மகனே" என்றார் உத்தாலகன்.

"என்ன கொடூரமான வழக்கம் இது? என் தாய் குழந்தை பெற்றால் அதற்குத் தந்தை யார் அப்பா?" என்றார் ஸ்வேதகேது.

உத்தாலகன் சிரித்தார்; சொன்னார்: "மகனே, நீகூட எனக்குப் பிறக்கவில்லை. ஒரு முன்பின் அறிமுகம் இல்லாத விருந்தாளிக்குப் பிறந்தாய். இருந்தும், ஒரு தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் நான் செய்துவருகிறேன்."

ஸ்வேதகேது முனிவர்களைக் கூட்டிவைத்து விவாதித்தார். "இந்த வழக்கத்தை நிறுத்த வேண்டும்" என்றார்.

"சம்பிரதாயத்துக்கு எதிராக நீ கலகம் செய்கிறாய்" என்றார்கள் மற்ற முனிவர்கள். "பெண்கள் இதை விரும்பித்தான் செய்கிறார்கள்" என்றும் வாதிட்டார்கள்.

ஸ்வேதகேது தன் கருத்தில் பிடிவாதம் காட்டவே, ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அன்றிலிருந்து 'விருந்தினருக்கு[அதிதி] வீட்டுப் பெண்ணை விருந்தாக்கலாம். ஆனால், கரு உருவாகும் நாட்களில் அதைத் தவிர்த்திட வேண்டும்' என்பதே அந்த உடன்பாடு.

அதன் பிறகு, மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்பு நெறிகளைப் புகுத்தினாராம் ஸ்வேதகேது.

இன்றும்கூட சில கிராமங்களில், "விருந்தாளிக்குப் பிறந்தவளே" என்று வாய்ச்சண்டையில் திட்டுவது வழக்கத்தில் உள்ளதாம்.

திங்கள், 19 அக்டோபர், 2020

நிர்வாண உறக்கம்![0% ஆபாசம்]

இரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாகத் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்:

இது கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் உண்மை என்னவென்றால், போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவதைவிட நிர்வாணமாகத் தூங்குவது (sleeping naked) ஆரோக்கியமானது என்பது உங்களுக்கு தெரியுமா?

நிர்வாணம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆபாசம்தான் என்பது நம்மில் பலரின் நினைவுக்கு வரும். இது தவறான நினைப்பு. 

எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் நிர்வாணமாக இருப்பது சாத்தியம் இல்லை என்றாலும், வாய்ப்பு அமையும்போது நிர்வாணமாக அல்லது குறைந்த ஆடைகளுடன் இருப்பது உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும் என ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவித்துள்ளது. 

இரவில் நாம் நிம்மதியாக உறங்குவதால் நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த தாம்பத்திய உறவு, காயங்களில் இருந்து விரைவான விடுதலை, தெளிவான நினைவாற்றல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. அந்த நிம்மதியான தூக்கத்தைப் பெற வேண்டும் என்றால் நிர்வாணமாகத் தூங்குவதே சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

அதற்கான அந்த 5 காரணங்கள்:

1.நிர்வாணமாகத் தூங்குவது மன அழுத்தத்தைக் குறைக்கிறது

நிர்வாணமாகத் தூங்குவது உடலில் கார்டிசோலின் அளவைக் குறைக்கும். FYI, கார்டிசோல் என்பது மன அழுத்த ஹார்மோன் ஆகும். நன்றாகத் தூங்காமல் இருப்பது நம்மை மந்தமாகவும், வெறி கொண்டவர்களாகவும் ஆக்குகிறது. சில நேரங்களில், இது மன அழுத்தம் மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கிறது. நிர்வாணமாகத் தூங்குவது இயற்கையாகவே இவற்றைச் சமாளிக்க உதவும்.

2.நிர்வாணமாகத் தூங்குவது நோய்களைத் தடுக்கிறது.

நிர்வாணமாகத் தூங்குவது உங்கள் தலையில் இருந்து கால்வரை ரத்தம் சரியாக ஓட அனுமதிக்கிறது. இரத்தம் சரியாகச் சுழலும் போது, இது நோய் எதிர்ப்புச் சக்தியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, நன்றாகத் தூங்குவது நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களிலிருந்து நம்மை விலக்கி வைக்கும்.

 3.நிர்வாணமாகத் தூங்குவது உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்கும்

விஞ்ஞான ரீதியாக, நிர்வாணமாகத் தூங்குவது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இது உடலின் கொழுப்பு அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான், நன்றாகத் தூங்குவது மிக மிக நல்லது எங்கிறார்கள்.

4.நிர்வாணமாகத் தூங்குவது சருமத்தில்[தோல்] பளபளப்பை உண்டுபண்ணும்.

நல்ல மற்றும் வசதியான தூக்கம், கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கும்; ஆக்ஸிஜனேற்ற அளவை உறுதிப்படுத்தும்; உடலில் மெலடோனின் அளவை மேம்படுத்தும். கூடுதல் அழகை வழங்கும். மேலும், நிர்வாணமாகத் தூங்கும்போது, உங்கள் தோலுக்குள் நல்ல காற்று ஊடுருவும். இதனால், தோல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

5.நிர்வாணமாகத் தூங்கினால் யோனி[பிறப்புறுப்பு] ஆரோக்கியமாக இருக்கும்.

ஈரப்பதமான யோனி பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஈஸ்ட் போன்றவற்றுக்கு வசதியான சூழலை உருவாக்குகிறது. இது நிச்சயமாக சில மொத்த நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். ஆனால், நிர்வாணமாகத் தூங்குவது யோனி சுவாசிக்கவும் வறண்டு போகவும் அனுமதிக்கும். இந்நிலையில் நோய் தொற்றாது.

===============================================================

https://zeenews.india.com/tamil/lifestyle/you-should-start-sleeping-naked-here-are-5-super-convincing-reasons-342730

வியாழன், 15 அக்டோபர், 2020

குணமடைந்தவர்களை 'மீண்டும்' தாக்குமா கொரோனா கொடுந்தொற்று?

உலகம் முழுவதும் 3.7 கோடிக்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவது என்பது அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது.

ஆனாலும், ஹாங்காங், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இரண்டாவது முறையாக நோய்த்தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டடது. அவர்களுக்கு முதல் முறையைவிட நோயின் தீவிரத்தன்மை குறைவாகவே உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தைச் சேர்ந்த இளைஞருக்குக் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகையிலான எவ்வித உடல்நலப் பிரச்சனைகளோ அல்லது நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடோ இல்லை.  ஆயினும், இரண்டாவது முறையாக கோவிட்-19 பாதிப்பு அவருக்கு ஏற்பட்டது. அதில் தீவிரத்தன்மை அதிகம் இருந்தது. தீவிரம் அதிகரித்ததற்கான காரணம் அறியப்படவில்லை. ஆனாலும், இரண்டாம் முறையும் கொரோனா பாதிப்பிலிருந்து அவர் மீண்டுவிட்டார்.

இவரைப் போன்று ஈக்குவேடாரில்  ஒருவருக்கு இரண்டாம் தொற்றில் முந்தைய தொற்றைவிடப் பாதிப்பு அதிகமாக இருந்தது. இருப்பினும், அவருக்கு மருத்துவமனைச் சிகிச்சை தேவைப்படவில்லை.

சில நாடுகள் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருவதால், இந்த விவகாரத்தில் விரைவில் தெளிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கொரோனா வைரஸ் முதல் அலையின்போது மனிதர்களின் உடல், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குக் கற்றுக்கொண்டதால், இரண்டாவது அலையின்போது கோவிட்-19 பாதிப்பு குறைந்த வீரியம் கொண்டதாகவே இருக்குமென்று கருதப்படுகிறது.

கொரோனா வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்ட அனைவரும் அந்த வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுகிறார்களா? இதில் குறைந்த அளவு நோய்த்தொற்று அறிகுறிகள் கொண்டிருந்தவர்களும் அடக்கமா? ஒருவேளை இதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கிறது என்றால் அது எவ்வளவு காலம் நிலைத்திருக்கும்? என்றிவை உள்ளிட்ட எண்ணற்ற சிக்கலான கேள்விகளுக்கான பதில்களை அறியும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இப்போதைய சூழ்நிலையில், நோய்த்தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், முகக் கவசத்தை அணிதல், கைகளைக் கழுவுதல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தகவல்: https://www.bbc.com/tamil/science-54521331,  14 அக்டோபர் 2020

செவ்வாய், 13 அக்டோபர், 2020

பெண்...தற்காப்பு...புத்தி...கத்தி...துப்பாக்கி!!!

"பெண், தன் கற்பைக் காத்துக்கொள்ளப் பற்களையும் நகங்களையும் ஆயுதமாகப் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும்போது, தவறாமல் கைவசம் ஒரு கத்தி வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார் மகாத்மா காந்தி. 

பெண்கள் கடத்தப்படுவதும் கற்பழிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வாக ஆகிவிட்ட இந்நாளில், பாதுகாப்பற்ற சூழலில் பணிக்குச் சென்று திரும்பும் பெண்கள் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்வதுகூட அவசியத் தேவையாகிவிட்டது. இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ இதை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய்தல் வேண்டும்.

இளம் வயதிலிருந்தே கராத்தே போன்ற தற்காப்புக் கலையில் அவர்கள் பயிற்சி பெறுவதும் கட்டாயம் என்று அரசு சட்டம் இயற்றுதல் வேண்டும்.

இக்கட்டான சூழல்களில் துணிவுடன் செயல்படுவதற்கான 'உளவியல்' பயிற்சி அளிப்பதை  நடைமுறைப்படுத்துதல் பெரிதும் பலன் தருவதாக அமையும்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆராய ஒரு குழு அமைத்து, உரிய ஆலோனைகளைப் பெறுவதும் உடனடித் தேவையாகும்.

இது விசயத்தில, மன உறுதியுடன் செயல்படும் 'போர்க்குணம்' பெண்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்தச் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது.

இன்றையச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மீள்பதிவாக வெளியிடப்படுகிறது.

கதை:                            சாகசம்

கருப்பாயி, பெயருக்கேற்ப நல்ல கறுப்பு. ஆனாலும், அழகும் கவர்ச்சியும் கட்டுமஸ்தான தேகக்கட்டும் உள்ளவள்; கிராமத்துப் பெண்.

கொஞ்சம் மேட்டுக்காடு [மானாவாரி] மட்டுமே இருந்தது.

அவள் கணவன், சந்தை சந்தைக்கு, கால்நடைகளை வாங்கி விற்கும் ’தரகு’த் தொழில் செய்தான்.

கருப்பாயி, எருமை[கள்] வளர்த்துப் பால் விற்பனை செய்தாள்.

பொழுது புலர்வதற்கு முன்னதாகவே, பால் கறந்து, மொபட்டில் எடுத்துச் சென்று, பக்கத்து டவுனில் உள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் கொடுத்துவருவாள்.

அன்றும், வழக்கமான நேரத்துக்கு சுந்தரம் தேனீர்க் கடையை அடைந்தாள்.

முதன் விநியோகம் அவனுக்குத்தான்.

அவள் போகும்போது, பாய்லருக்குத் தீ மூட்டிக் கொண்டிருக்கும் சுந்தரம், அன்று கட்டிலில் போர்த்துப் படுத்திருந்தான்.

"எனக்கு உடம்பு சரியில்ல. பாலை உள்ள வெச்சுட்டுப் போ” என்றான்.

அவன் நாடகம் போடுகிறான் என்பதை அறியாத கருப்பாயி, கடைக்குள் சென்றாள். கதவைத் தாளிட்டான் சுந்தரம். அவனுடன் வசித்த அவனின் அம்மாவும் அப்போது இல்லை.

திடீர் அதிர்ச்சிக்குள்ளானாலும், சுதாரித்துக் கொண்ட கருப்பாயி, “வேண்டாம். நான் அந்த மாதிரி பொம்பளையில்ல. வழிவிடு” என்றாள்.

சுந்தரம், தன்வசம் இழந்திருந்தான்.  "உன்னை அடையணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை. மறுக்காதே கருப்பாயி” என்றவாறு அவளை நெருங்கினான்.

பதற்றப்படாமல் அவன் நடவடிக்கையைக் கவனித்தாள் அவள்.

அவளின் தோள்களைத் தொட்டு, மெல்லத் தரையில் சரித்தான் சுந்தரம்.

அவளிடமிருந்து எதிர்ப்பு இல்லாத நிலையில், அவள் மீது மெல்லப் படர்ந்தான். ஆடைகளைக் களைவதில் கவனம் செலுத்தினான். அப்போதுதான், அவன் சற்றும் எதிர்பாராத அது நடந்தது.

இத்தனை சீக்கிரம் அது எப்படி நிகழ்ந்தது என்று அனுமானிப்பதற்குள்ளாகவே, தன் விரைகளை அவள் தன் இரு கைகளாலும் பற்றி இறுக்க முற்பட்டுவிட்டதை அவனால் உணர முடிந்தது.

ஏதோ சொல்ல நினைத்தான். நாக்கு சுழலவில்லை.

அவளிடமிருந்து அவற்றை விடுவிக்க நினைத்தான். உடல் உறுப்புகள் ஒத்துழைக்கவில்லை.

அவனின் ஒட்டு மொத்த உடம்பும் வெலவெலத்தது; நாடி நரம்புகள் முடங்க ஆரம்பித்தன; விழிகள் பிதுங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நினைவாற்றல் குறைய ஆரம்பித்தது.

இனியும் பிடியை இறுக்கினால் அவன் வைகுண்ட பதவி எய்துவது உறுதி என நினைத்த கருப்பாயி, அவற்றிற்கு விடுதலை அளித்து, கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

தன் கணவனிடம் இது பற்றி அவள் பேசவில்லை.

அடுத்த நாள், பால் கொண்டுசென்றபோது, சுந்தரத்தின் கடை அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் கடை திறக்கப்பட்டது. அவள் கடையைக் கடந்தபோது, கண்டும் காணாதது போல, குனிந்த தலையுடன் பாய்லருக்கு நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தான் சுந்தரம்

அப்புறமும் அந்நிலையே நீடித்தது.

திங்கள், 12 அக்டோபர், 2020

உடலுறவுக்கு 'உலை' வைக்கும் கொரோனா!!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சமூக வாழ்க்கையில் தொடங்கி அந்தரங்க வாழ்க்கைவரை அனைத்திலும் கொரோனா அச்சம் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியுள்ளது.

கூட்டமாக இருக்காதீர்கள், ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டு பேசாதீர்கள், 6 அடி தள்ளியே பேசுங்கள், கை குலுக்காதீர்கள்... இப்படி மனிதனுக்கு மனிதனே எதிரி என்பது போல் ஆக்கிவிட்டது கொரோனா அச்சம்.

என்னதான் பாதுகாப்புகள் கருதி இதையெல்லாம் பின்பற்றினாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம்தான். இந்நிலையில் தன் காதல் மனைவியை, அன்புக் காதலனைக் கட்டியணைத்து முத்தம் கொடுப்பதுகூடத் தவறா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதற்கான விடை.....

கொரோனா வைரஸே தாக்கியிருந்தாலும் அதன் அறிகுறி தெரியக் குறைந்தது ஐந்து நாட்களாவது ஆகும் என்கிறார்கள். இந்நிலையில் உங்கள் அன்புத் துணைக்கும் அது இருந்தால்...?

கொரோனா வைரஸ், உடலுறவு கொள்வதால் பரவுமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம் கருத்தரித்தலும் பாதுகாப்பனதா என்பதும் உறுதியளிக்கப்படவில்லை. இருப்பினும் கொரோனா தொடுதல், இருமல் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது என்பதால் உடல் சார்ந்து உங்களுடைய பாலுணர்வுகளை வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.

எச்சில் துப்புதலும் தவறே என்று கூறிவரும் நிலையில் உதட்டோடு உதடு முத்தம் தருதலும் ஆபத்துதான். அதற்காக இந்த வைரஸ் தொண்டை வழியாகப் பரவுகிறது என்று அர்த்தமல்ல. எந்த விசயமெல்லாம் உங்களை அடிக்கடி பாலியல் உணர்ச்சிகளுக்குத் தூண்டுகிறதோ அதையெல்லாம் தவிர்க்க முயலுதல் மிக மிக அவசியம். 

உடலுறவு மூலமாகவும் பரவுகிறது என்பதற்கும் எந்தவித ஆதாரங்களும் இதுவரை இல்லை. இருப்பினும் இந்தச் சமயத்தில் உடல் பாதுகாப்புக் கருதி   உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் இன்றியமையாத் தேவையாகும்.

அதேபோல் வீட்டில் கணவன் , மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீர்கள் எனில் வீட்டிற்கு வந்ததும் மீண்டும் ஒருமுறை குளித்துவிடுவது நல்லது. வீட்டையும் அலங்கோலமாக இல்லாமல் இந்த நேரத்தில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். கைகளை அடிக்கடிக் கழுவுங்கள், சானிட்டைஸர் பயன்படுத்துங்கள்.

காதலர்கள் சந்திப்புகளைத் தள்ளி வைப்பது நல்லது. பொதுவெளியில் சந்திப்பது மட்டுமன்றி அவ்வாறு சந்திக்கும்போது பாலின உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம். அதேபோல் தொலைதூரக் காதலர்களும் சந்திப்பைத் தவிர்ப்பது நல்லது. சந்திப்பிற்குப் பதிலாக வீடியோ கால் மூலம் பேசலாம்.

அதேபோல் சிங்கில்ஸ் டேட்டிங் ஆப்ஸ் மூலம் புதிய நபர்களைச் சந்திப்பதையும் தவிர்த்துவிடுங்கள். உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை என்றால் சுய இன்பம் காணுதலே சிறந்தது என அறிவுறுத்துகின்றார்கள் மருத்துவர்கள். இதை 'நியூயார்க் போஸ்ட்', 'வாக்ஸ்', 'ஹெல்த்' போன்ற இதழ்களும் வலியுறுத்துகின்றன. 

ஆக, நிலைமை எதுவாக இருந்தாலும் உங்கள் தாம்பத்திய உறவைத் தள்ளி வைப்பது நல்லது என்பதே மருத்துவர்களின் அறிவுரை.

கணவன் மற்றும் மனைவி இடையே அன்பு நிலையாக இருக்க வேண்டும் என்றால் உடல் உறவு மிகவும் அவசியமான ஒன்று. என்னதான் நாம் வாய் வழியாகவோ அல்லது கண்கள் வழியாகவோ அன்பை பரிமாறிக் கொண்டு இருந்தாலும் அதற்கென்று இருக்கும் நிலைதான் உடலுறவு. எனவே, இதை மேற்கொள்வதற்குச் சில வாரங்கள் பொறுத்திருங்கள், உங்களுக்கு எந்த ஒரு நோய்த் தொற்றும் இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளலாம்.

News18 Tamiltamil.news18.com போன்ற இணையத் தளங்களிலிருந்து 'சுட்டு'த் தொகுத்தது!

சனி, 10 அக்டோபர், 2020

கோயில்களில் ‘ஆபாச’ச் சிற்பங்கள் வடிக்கப்பட்டதன் உள்நோக்கம் என்ன?

சிவலிங்க வடிவத்தின் ‘தத்துவம்’ உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

இறைவனின் பிறப்பு உறுப்பு இறைவியின் பிறப்பு உறுப்புடன் இணைந்த 'புனிதமான' கோலம் அது. 

இது வெறும் ‘புனைந்துரை’;  நாத்திக வாதிகளால் பரப்பப்பட்டது என்று நம் மக்களில் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை பொய்யானது.

இது, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கையாக இருந்தது என்பது மனம் கொள்ளத்தக்கது.

எகிப்தியர்களின் ‘ஓசிரசு’, ‘ஏசீசு’ போன்ற கடவுள்கள் மனிதப் பிறப்பு உறுப்புகளின் வடிவம் கொண்டவைதானாம்.

சிந்துவெளி நாகரிகத்தின்  பண்பாட்டில், உடலுறவு வழிபாட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருக்க வேண்டும். அவர்களுடைய ‘சிஸ்ன’ தேவ வழிபாடுதான் பிறகு சிவலிங்க வழிபாடாக உருமாற்றம் பெற்றது என்கிறார்கள்.

மனிதர்கள், ஆறாவது அறிவு பெற்ற காலக்கட்டத்தில், உலகின் தோற்றம் குறித்துச் சிந்திக்கத் தலைப்பட்டார்கள்.

உயிர்களில், ஆணும் பெண்ணும் இணைந்து இன்பம் துய்ப்பதன் விளைவாகப் புதிய உயிர் தோன்றுவதைக் கண்ட அவர்கள், ஆகாயம் என்னும் ஆண் கடவுளும், பூமி என்னும் பெண் கடவுளும் இணைந்து உடலுறவுச் சுகம் அனுபவித்ததன் விளைவே உலகத் தோற்றம் என்னும் முடிவுக்கு வந்தார்கள்.

அந்தக் கடவுளை வழிபடுவதற்குக் காட்சிப் பொருளாக உள்ள ஓர் வடிவம் தேவைப்பட்டது. இறைவனின் பிறப்பு உறுப்பும் இறைவியின் பிறப்பு உறுப்பும் இணைந்த கோலத்தை வடிவமைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

பின்னர் அதைத் தாங்கள் எழுப்பிய கோயில்களில் இடம்பெறச் செய்தார்கள்; விழாக்கள் நடத்தி மகிழ்ந்தார்கள்.

உலக மக்களில், அவரவர் சமூகப் பண்பாட்டு நிலைக்கேற்ப உடலுறவு நடைபெறும் மையங்களாக அக்கோயில்கள் ஆயின.

பாபிலோனியாவில் உள்ள பல பழைய கோயில்களில் உடலுறவு நிகழ்ச்சி விழாவின் முக்கியச் சடங்காகவும் ஆக்கப்பட்டது.

நம் நாட்டுக் கோயில்களிலும்  உடலுறவு நிகழ்ச்சிகள்  ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்திருக்கக்கூடும் என்கிறார்கள் அறிஞர்கள்.[ஆதாரம்: ‘யுக்தி தர்ஷன்’ என்னும் தலைப்பிலான மலையாள நூல். தமிழில், ’ ‘மதமும் பகுத்தறிவும்’, முதல் பதிப்பு ஜூலை 2004, சூலூர் வெளியீட்டகம், கோவை-641402]

கோயில்களில் உள்ள, காம இச்சையைத் தூண்டும் சிற்பங்களும் இசைப் பாடல்களும், முன்பிருந்த தேவதாசி முறையும் இக்கருத்துக்கு வலுச் சேர்க்கின்றன என்று சொல்கிறார்கள்.

ஆக, கடவுள் தரிசனத்திற்காகக் கோயிலுக்கு வருவோருக்குக் காமக் கலையைக் கற்றுத் தருவதற்காகவே, அல்லது கற்றுத் தருவதற்காகவும் ஆபாசச் சிற்பங்கள் வடிக்கப்பட்டன என்பது தெரிகிறது. 

எது எப்படியோ, பழங்காலச் சூழலில், பகுத்தறிவு வளர்ச்சி பெறாத காலக் கட்டத்தில்.....

கற்பனை செய்த கடவுள்களின் பிறப்பு உறுப்புகளை வழிபட்டதும், அவற்றைக் கோயில்களில் இடம் பெறச் செய்து விழாக்கள் எடுத்து ஆனந்தப் பரவசத்தில் மூழ்கியதும், பெரும் குற்றங்கள் எனக் கூற இயலாது என்பதே என் கருத்து.

உங்கள் கருத்து எதுவாயினும் வருகை புரிந்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி.

வியாழன், 8 அக்டோபர், 2020

'கொரோனா'... மிக மிக மிக முக்கியமான தகவல்!!!

கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப்பிலும் பிற சமூக வலைதளங்களிலும் வேகமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் செய்தி இது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடலில் அந்த வைரஸ் 90 நாள்களுக்கு இருக்கும் என்பதே அது. இது எந்தளவுக்கு உண்மை?

முதலில் இதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என பார்க்க, நாம் அறியவேண்டிய மருத்துவ விஷயம், த்ரோட் ஸ்வாப் எனப்படும் ஆர்டி பிசிஆர்தான். முதலில் ஆர்டிபிசிஆர் என்பது என்னவென நாம் அறிந்துகொண்டோமானால் இந்தத் தகவலில் இருக்கும் அறிவியல் உண்மையை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

கொரோனா வைரஸ் விஷயத்தில் இதன் பங்கு என்னவென்றால்,

பொதுவாக நமக்கு வரும் தொற்றுகளில் பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணிகள் ஆகியவற்றை, அவற்றிற்கான அறிகுறிகளை வைத்தோ, அல்லது சாதாரணமாக உடனடியாகச் செய்யக்கூடிய ரத்த மாதிரி பரிசோதனைகளை வைத்தோ அவற்றின் தாக்கம் இருப்பதை அறிந்து உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்து விடலாம்.

ஆனால், வைரஸ் அப்படி அல்ல. அதனை ஆன்டிஜென் அல்லது ஆன்டிபாடி டெஸ்ட்டுகளின் மூலம்தான் அறிய முடியும். நமக்கு ஏற்கெனவே தெரிந்த வைரஸ் பாதிப்புகளால் வரும் நோய்களான மஞ்சள் காமாலை எனும் ஹெப்படைடிஸ், டெங்கு காய்ச்சல், அனைத்திற்கும் மேல் எய்ட்ஸ் எனும் ஹெச்.ஐ.விக்குக்கூட ஆன்டிஜென் அல்லது ஆன்டிபாடி டெஸ்ட்கள்தான் பரவலாகச் செய்யப்படுகின்றன.

ஆனால், இந்த கொரோனா வைரஸ் உலகிற்குப் புதியது என்பதாலும், இதற்கான சரியான ஆன்டிஜென், ஆன்டிபாடி டெஸ்ட்டுகளின் வருகை தாமதமானதாலும், இந்தப் புதிய வைரஸின் முப்பரிமாண மாற்றங்கள் மிக வித்தியாசமாக இருப்பதாலும், மரபணுக்களை ஆராயும் இந்த RT-PCR மூலம், கொரோனா வைரஸின் RNA-க்கள் எனப்படும் வைரஸ் மரபணுத் துகள்களை அறிந்திடச் செய்யும் இந்தப் பரிசோதனைதான் எளிதாக நோய்த்தொற்றை அறிந்திட உதவுகிறது.

அதே நேரத்தில் நோய்த்தொற்று அறியும் மற்ற பரிசோதனைகள் பற்றிய நம்பகமான ஆய்வுகள் இல்லாத காரணத்தினாலும், இவ்வகை தாமதங்களால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இந்த வைரஸால் கொல்லப்படக்கூடாது என்பதாலும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறியும் பரிசோதனை என மருத்துவ உலகம் ஆர்டி பிசிஆர் சோதனையை அறிமுகப்படுத்தியது.

இந்தச் சோதனை, நம் உடல் நீரில் இருக்கும் நம் மரபணுவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும் ஏதேனும் அந்நிய RNA பொருள்களைக் கண்டறிந்து, அதனை ஒரு கருவியின் உதவி மூலம் அவற்றின் பிரதிகளைப் பெருக்கும்.

அப்படி இருக்கும் பிரதி, நமக்குத் தேவையான அந்நிய வகை RNA பொருளாகத்தான் இருக்கிறதா என்பதை அடுத்த கருவி ஆய்வு செய்யும். அப்படிச் செய்தபின், அந்தப் பிரதிகளில் இருப்பது ஒரே வகையாக இருந்தால் அவை பாசிட்டிவ்வாக கணிக்கப்படும்.

வெவ்வேறு RNA துகள்களாக இருந்தாலோ, தேவைப்படும் அளவு அந்தப் பிரதிகளை எடுக்க முடியாதது தெரிந்தாலோ பரிசோதனை முடிவானது நெகட்டிவ்வாக கருதப்படும். இதுதான் கொரோனா பாசிட்டிவ் - கொரோனா நெகட்டிவ் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால், இதில் நீங்கள் அறியவேண்டிய முக்கிய தகவல் என்ன தெரியுமா? இந்த RT- PCR பரிசோதனை என்பது கொரோனா வைரஸையோ, வைரஸ் கிருமி இருப்பதையோ கண்டறியும் பரிசோதனை அல்ல.

மாறாக அந்த வைரஸிற்குள் இருக்கும் மரபணு, அதாவது RNA எனப்படும் மரபணுவுடைய துகள்களைத்தான் இவை பிரதிகளாக்கி கண்டறிந்து நமக்குக் காட்டும்.

எனவே, தற்சமயம் மக்கள் பயப்படுவது போல, இந்த கொரோனா நோய்க்கிருமி நம் உடலில் 90 நாள்கள் இருப்பது என்பது உண்மையல்ல. ஏனென்றால் நாம் பரிசோதனையில் பார்ப்பது வைரஸ் அல்ல. அதன் ஆர்.என் ஏ துகள் மட்டும்தான்.

அடுத்ததாக, தொற்று ஆரம்பித்த முதல் 11 நாள்களுக்குள் நம் உடலில் இதற்கென பிரத்யேகமாக எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாக்கப்படும் எதிர்ப்பாற்றல் செல்கள், இந்த RNAக்களை கூட விட்டுவிடாமல் அவற்றை உடைத்து நொறுக்கிவிடும்.

கொரோனா குணமான பின்பும் உடல்நிலை மோசமடைவது ஏன்? `போஸ்ட் கோவிட் சிண்ட்ரோம்' அலெர்ட்

அப்படி உடைந்திட்ட RNAக்களால், அதன் பிறகு பொதுவாக நோயைப் பரப்பவும் முடியாது. உடலில் நோயைப் பெருக்கவும் இயலாது. அவை Inactive Fragments எனப்படும் வீரியமில்லா துகள்களாகவே உடல் நீரிலும் நம் செல்களிலும் ஆங்காங்கே காணப்படலாம்.

இந்த நேரத்தில் நாம் செய்யும் வழக்கமான RT-PCR பரிசோதனைக்கு, நம் உடலுக்கு சம்பந்தமற்ற அந்நிய பொருள் (Foreign RNA particles)தானே...

ஆதலால், இந்தப் பரிசோதனை வழக்கம்போல் உடைந்த வீரியமில்லா RNA துகள்களைக் கண்டறிந்து, அதன் பிரதிகளை உருவாக்கி மீண்டும் அந்த நபருக்கு பாசிட்டிவ் என தெரிவிக்கும். இதைத்தான் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் நோய்த்தொற்று வந்ததாகவும், நோய்த்தொற்று வந்து குணமான சிலருக்கு மீண்டும் RT-PCR பரிசோதனை பாசிட்டிவ் எனக் காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதைக் கண்டு நிச்சயமாக அச்சப்படத் தேவையில்லை. இதனால் வரும் பாசிட்டிவ் ரிப்போர்ட்களால் தொற்று உள்ளவருக்கோ, அவருடன் இருப்போருக்கோ எந்தவிதச் சிக்கலும் கிடையாது.

ஆனால் உங்களை நோய்த்தொற்று பாதித்து, அறிகுறிகள் வந்து, மருத்துவ சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும் அறிகுறிகள் குறையாமல் இருந்தாலோ, அதிகமாகத் தென்பட்டாலோ, அது வீரியமடைந்த நோய் எனச் சொல்லலாம். தேவைப்பட்டால் இன்ன பிற உடல்நிலை கண்டறிய உதவும் பரிசோதனை, ரத்த மாதிரிகள், சிடி ஸ்கேன் அல்லது ஒரு ஆன்டிபாடி பரிசோதனை செய்து, நோய் எதிர்ப்பு செல்கள் இருக்குமானால், நோய் நம்மை விட்டு விலகியதாக எண்ணிக்கொள்ளலாம்.

=====================================================================

நன்றி: விகடன் https://www.vikatan.com/health/healthy/is-it-true-that-coronavirus-will-stay-in-our-body-for-90-days   [published 06.10.2020 at 7 PM. Updated:Yesterday at 7 PM]

செவ்வாய், 6 அக்டோபர், 2020

"ஏண்டா இப்படியெல்லாம் 'வெறி' ஏத்துறீங்க?!?!"

கொரோனா கொடுந்தொற்றை நினைச்சா அடிவயிறு கலங்குது. அந்த அளவுக்கு அது பலிகொள்கிற மனித உயிர்களின் எண்ணிக்கை கணக்குவழக்கில்லாம பெருகிட்டே போகுது. ஒட்டுமொத்த மனிதகுலமும் குலை நடுங்கித் துடிச்சிட்டிருக்கு.

மனுசன் சந்திரனில் கால் பதிச்சான்; செவ்வாயில் நடைபயில முயற்சி பண்ணுறான்; சில நிமிடங்களில் ஒட்டுமொத்த உலகையும் எரிச்சிச் சாம்பலாக்குவதற்கான அழிவுக் கருவிகளைக் கண்டுபிடிச்சி வெச்சிருக்கான்.

இந்த அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்ற மனுசனால கொரோனாவுக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க முடியல.

இந்த மண்ணில் எதுஎதுக்கோ பஞ்சம் வருது. ஆனா, எந்தக் காலத்திலும் மனுசங்க கும்பிடுற சாமிகளுக்கு பஞ்சமே வந்ததில்ல. அந்த அளவுக்கு ஆயிரக் கணக்கில் கற்பனை பண்ணி வெச்சிருக்கானுக. ஆனா.....

எந்தவொரு சாமியும் கொரோனாவின் கொலை வெறியைத் தடுத்து நிறுத்தல.

சாமிகளை நினைச்சாலே மனசெல்லாம் கொதிக்குது. இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒர் அதிசயம் நிகழ்ந்ததா செய்தி போட்டு மனக்கொதிப்பை அதிகப்படுத்தறானுக.

அந்தச் செய்தி.....

#கடந்த 10 நாட்களில் திருப்பதி கோயில் உண்டியலில் 1.25 கோடி ரூபாயில் இருந்து 1.45 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளது. அதாவது 20 முதல் 25 சதவீதம் வசூல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை ஆகும். அந்த நாளில் மட்டும் திருப்பதியில் 22,533 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது ஊரடங்கிற்குப் பிறகான தரிசனத்தில் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். மேலும் அன்றைய தினம் வேண்டுதலின் பேரில் 7,494 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர்.#

'இமயமலையில் ஏழுமலையான் கொடுக்கும் சர்ப்ரைஸ்...'[https://tamil.samayam.com/latest-news/india-news/more-than-22-thousand-pilgrims-had-darshan-on-single-day-at-tirupati-temple/articleshow/78483958.cms?story=6]

ஏழுமலையான் சர்ப்ரைஸ் கொடுக்கிறாராம்! என்ன வெங்காய சர்ப்ரைஸ்?!

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

வேண்டாம் ஜாதி ஒழிப்பு!!!

வணக்கம். தங்கள் வருகைக்கு நன்றி.

இந்தத் தலைப்பு, தங்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும் என்பதை நான் அறிவேன்.

அரசுகளும் அறிஞர்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் சாதிகளை ஒழிப்பதற்குப் பல வழிகளிலும் பாடுபட்டு வரும் நிலையில், இப்படிச் சொல்வது கண்டிக்கத்தக்கது; காட்டுமிராண்டித்தனமானது; தண்டனைக்குரியது என்று நீங்கள் சொல்ல நினைப்பதை என்னால் உணர முடிகிறது.

”ஜாதிகளை ஒழிக்க முடியாது” என்று சொல்பவர்கள்கூட, “ஜாதிகளை ஒழிக்க வேண்டாம்” என்பதை ஏற்க மாட்டார்கள்.

நான் சொல்வது ஏற்கத்தக்கதா இல்லையா என்பதை, இப்பதிவைப் படித்து முடித்த பிறகு நீங்கள் முடிவு செய்யலாம்.

’ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்’ என்பது மக்கள் நலம் நாடுவோரின் நீண்ட கால விருப்பம்.

’ஒழிக்க வேண்டும்’ என்பதற்கான காரணங்களை அறிந்தால், ’ஒழிக்க வேண்டாம்’ என்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வது எளிதாக அமையும்.

’வேண்டும்’ என வாதிடுவோர் முன் வைக்கும் முதன்மைக் காரணம்.....

அவ்வப்போது நடைபெறும் ஜாதிக் கலவரங்கள் காரணமாக அளவற்ற பொருட்சேதங்களும் உயிர்ப்பலிகளும் ஏற்படுகின்றன என்பதுதான்.

இதனையும், இது போன்ற பல தீய விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான், ”ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்னும் முழக்கம், மக்களின் நலம் நாடுவோரால் அவ்வப்போது எழுப்பப்படுகிறது.

’மக்களின் மனங்களில் ஜாதி வெறியை ஊட்டுபவை இந்தச் சங்கங்கள்தான். இவற்றைத் தடை செய்வதால், வெறி தணிந்து படிப்படியாக ஜாதிப் பற்றும் குறையும். கலப்பு மணங்களின் எண்ணிக்கை பெருகும். காலப்போக்கில், சாதிகளற்ற சமுதாயம் உருவாகும்’ என்பது இவர்களின் நம்பிக்கை.

இவர்களின் நம்பிக்கை செயல் வடிவம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என்பது பற்றி ஏற்கனவே நீங்கள் சிந்தித்திருப்பீர்கள். ஒரு முடிவுக்கும் வந்திருக்கக்கூடும்.

நீங்கள் எடுத்த முடிவுக்கு உரம் சேர்ப்பதாகவோ, அதை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டுபண்ணுவதாகவோ என் எண்ணங்கள் அமையலாம் என்ற நம்பிக்கையில்தான் இப்பதிவை வெளியிடுகிறேன்.

இந்த மண்ணின் ஏதோ ஒரு பகுதியில், ஜாதிக் கலவரம் மூண்டு, அது பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படிக்க நேரும்போது, எனக்குள் நானே எழுப்பிக் கொள்ளும் கேள்வி ஒன்று உண்டு. அது.....

இந்தக் கலவரங்கள் மூளுவதற்கு மூல காரணமாக இருப்பவர்கள் யார்? எவை?

ஒரு சிற்றுண்டிக் கடைக்காரருக்கும் போதையில் இருந்த வாடிக்கையாளருக்கும் இடையே ‘மீதிச் சில்லரை’ கொடுப்பதில் தகராறு. போதை மனிதர் ’வக்காளி’, ‘தக்காளி’ என்று வாய்க்கு வந்தபடி பேச, கடைக்காரர் கை நீட்டிவிடுகிறார். அவரைத் திருப்பி அடிக்க முடியாத நிலையில் சொந்த ஊர் சென்று தன் ஜாதி ஆட்களுடன் வந்து கடையை அடித்து நொறுக்குகிறார் நம் குடிமகன். ஜாதி பேதமின்றி மற்ற கடைக்காரர்களின் சொத்துகளும் சூறையாடப்படுகின்றன.

கடைக்காரரின் ஜாதிக்காரர்கள் போதை ஆசாமியின் கிராமத்துக்குத் திரண்டு போய் அவர்களைத் திருப்பித் தாக்குகிறார்கள்.

குடியிருப்புகள் தரை மட்டம் ஆகின்றன. சுற்று வட்டாரத்தில் உள்ள கரும்புத் தோட்டங்கள் பற்றி எரிகின்றன. பம்ப் செட்கள் உருக்குலைகின்றன.

நூற்றுக் கணக்கில் போலீஸ் படை குவிக்கப்பட்டும் கலவரம் அடங்க நான்கு நாட்கள் தேவைப்பட்டன. [இவை, நான் நேரடியாகக் கண்ட நிகழ்வுகள்]

இது, தனி மனிதர்களால் உருவான ஜாதிக் கலவரம்.

யாரோ ஒரு குடிகாரன் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவன் அல்லது ஜாதி வெறி ஊட்டி வளர்க்கப்பட்ட ஓர் அசாதாரணன் நாற்சந்தியில் உள்ள ஒரு ஜாதி சார்ந்த தலைவருக்குத் திருட்டுத்தனமாய் செருப்பு மாலை அணிவிக்க, வெடிக்கிறது ஜாதிக் கலவரம்.

இது ஒரு தனி மனிதருக்காக உருவாக்கப்பட்ட கலவரம். இப்படிப்பட்ட பல கலவரங்களால் மக்கள் வாழ்க்கை சிதைந்து சீர்குலைந்து போனதை, நம் சமுதாய வரலாறு சொல்லும்.

இன்னும், காதல் திருமணங்கள்,  கோயில்களில் நுழையத் தடை போன்ற காரணங்களாலும் ஜாதிக் கலவரங்கள் வெடித்திருக்கின்றன. இம்மாதிரி கலவரங்களுக்கும் ஜாதி வெறியர்கள் சிலரே மூல காரணமாக இருந்திருப்பதைக் கொஞ்சம் நுணுகி ஆராய்ந்தால் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றிற்கும் தனி மனிதர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு, அரசாங்கத்தின் சட்ட திட்டங்களின் மீதோ நீதிமன்றத்தின் நடுவு நிலை மீதோ எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. எந்தவொரு ஜாதியிலும் சில பொல்லாதவர்களுக்கிடையே மிகப் பல நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் ஒரு போதும் உணர்ந்ததில்லை.

ஆக, தனிப்பட்ட நபர்களுக்காகவே  வெவ்வேறு ஜாதியைச் சார்ந்த பெரும்பான்மை மக்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு சீரழிந்து போயிருக்கிறார்கள் என்று உறுதிபடச் சொல்லலாம்.

தத்தம் ஜாதிக்குச் சலுகைகள் வேண்டி, உண்ணா நோன்பு மேற்கொள்ளுதல், ஊர்வலம் நடத்துதல் போன்ற போராட்டங்களில் பல்வேறு ஜாதியைச் சார்ந்த மக்களும் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர, இம்மாதிரி போராட்டங்களின் போது பிற ஜாதியாருடன் மோதலை உருவாக்கியதற்கான  ஆதாரங்கள் ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. கொடிக் கம்பம் நடுதல் போன்ற நிகழ்வுகளில் சிறு சிறு குழுக்களாக மோதிக் கொள்வது ஆங்காங்கே நிகழ்ந்திருக்கிறது.

இம்மாதிரி அசம்பாவிதங்களுக்கும்கூட, அனுசரித்துப் போகும் மனப் பக்குவமும் பிறரை மதிக்கும் குணமும் இல்லாத சுயநல விரும்பிகளே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஜாதிச் சங்கங்கள் தடை செய்யப்பட்டாலும்கூட, இந்தச் சுயநலவாதிகள், ‘நம்ம மாவட்டம்’, ‘நம்ம ஊரு’, ’நம்ம தெரு’ என்று ஏதாவதொரு பின்னணியில் மக்களைத் திரட்டி, கலவரங்களில் ஈடுபடத் தயங்க மாட்டார்கள்.

அமைச்சராக இருந்த ஒருவர், ஜாதிச் சங்கங்களில் முக்கிய பதவி பெற முயன்று தோற்றுப் போய், சுயமாய் ஒரு ஜாதிச் சங்கம் ஆரம்பித்து, திருமண விழாக்களில், ஏன், இழவு வாசல்களிலும்கூட தன் கட்சிக்கு ஆள் பிடிக்கும் காட்சிகளையெல்லாம் நான் நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன்.

இம்மாதிரி சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து அமைதி விரும்பிகளான மக்களை விடுவிக்க அறிஞர்களும் பொதுநல விரும்பிகளும் முயல வேண்டுமே தவிர, ஜாதிச் சங்கங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருப்பதில் பயனேதும் இல்லை எனலாம்.

இம்மாதிரி நச்சுப் பிறவிகளைச் சட்ட நடவடிக்கைகள் மூலமோ, சமுதாயப் புறக்கணிப்பு வாயிலாகவோ திருத்த முயல்வதே புத்திசாலித்தனம் ஆகும்.

எவ்வகையிலேனும் இவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பொது வாழ்க்கையில் இவர்களின் தலையீடு மட்டுப்படுத்தப்பட்டால், ஜாதிச் சங்கங்களை ஒழிக்கும் பணி தேவையற்றதாகி, சங்கங்கள் தாமாகவே அழிந்து ஒழிந்து போகும். மக்களின் ஜாதிப் பற்று படிப்படியாக மறையத் தொடங்கும். ஜாதி பேதமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்னும் நல்லவர்களின் கனவு நனவாகும் என்பது திண்ணம்.

இது என் நம்பிக்கை. வருகை புரிந்த உங்களின் நம்பிக்கையும் இதுவாகத்தான் இருக்க முடியும்.