விருத்தாசுரன் என்கிற ஒரு வலிமை மிக்க அசுரன் இருந்தான். அவனுடைய மனைவி பெயர் விருதை என்பதாகும். அவள் அழகிலும் கற்பிலும் சிறந்தவள்.
விருதையை மகாவிஷ்ணு கண்டு மோகித்தார். அவளை அனுபவிக்க, தந்திரங்கள் பல செய்தும் தம்முடைய கடவுள் சக்தி எல்லாம் காட்டியும் பலன் கிடைக்காததால் சூரனுடன் சண்டையிட்டார். சூரன் மகாவிஷ்ணுவைவிட வலிமைமிக்கவன். ஆதலால், விஷ்ணு தோற்றார்.
இருப்பினும், விருதை மீதான காம இச்சையை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. சிவபெருமானைச் சந்தித்துத் தன் ஆசையையும் கவலையையும் தெரியப்படுத்தினார்.
சிவன் சூரனிடம் சண்டையிட்டு அவனைக் கொன்றார்.
விஷ்ணுவானவர் சூரன் உடலுக்குள் புகுந்து விருதையை ஆசை தீரப் புணர்ச்சி செய்து இன்பத்தில் திளைத்தார்.
விஷ்ணுதான் தன் புருஷன் உடலில் புகுந்து திருட்டுத்தனமாகத் தன்னைக் கூடி விட்டான் என்பது விருதைக்குச் சற்று தாமதமாகவே தெரிந்தது. “நீ அயோக்கியன், சண்டாளன், பொறுக்கி[பொம்பளை பொறுக்கி]” என்றெல்லாம் மனம் போனபடி தூற்றினாள்.
மேலும், “நீ மனிதனாகப் பிறப்பாய். உன் மனைவியை அசுரகுலத்தவன் தூக்கிச் சென்று சிறை வைத்துக் கற்பழிப்பான்” என்று சாபமும் கொடுத்தாள்
பின்னர், விஷ்ணுவால் தான் வஞ்சிக்கப்பட்டதை நினைந்து நினைந்து வருந்திய விருதை தீக்குளித்துச் சாம்பலானாள்.
இந்தவொரு அவல நிலையிலும், அவள் மீது கொண்ட மோகம் தணியாமல், விருதையின் சாம்பலின் மீது புரண்டார் விஷ்ணு பகவான்; புரண்டுகொண்டே இருந்தார்.
விஷ்ணுவின் சகோதரியும், சிவனின் மனைவியுமான பார்வதி இந்த அசிங்கத்தைக் காணச் சகிக்காமல், துளசி என்னும் அழகான தன் தாதிப் பெண்ணை விஷ்ணுவிடம் அனுப்பினாள்.
துளசி, விஷ்ணுவுடன் சல்லாபித்து, இதுவரை அவர் அனுபவித்திரா உடலுறவுச் சுகத்தை வாரி வழங்கி, விருதையின் பிரிவால் விளைந்த சோகத்திலிருந்து அவரை விடுவித்தாள்.
நன்றிக் கடனாக, துளசியை மாலையாக்கித் தன் கழுத்தில் சூடிக்கொண்டார் விஷ்ணு[விஷ்ணுவுக்குத் துளசி மாலை அணிவிப்பதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்].
காம வசப்பட்டு ஆனான விஷ்ணுவே படாத பாடு பட்டார் என்றால், அற்ப மானுடர்களாகிய நாம் எம்மாத்திரம்?! ஹி...ஹி...ஹி!!!
==============================================================================உதவி:
thathachariyar.blogspot.com › 2011/02 › blog-post_04
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக