எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 8 டிசம்பர், 2023

வன்புணர்வுக் குற்றங்கள்! தண்டனைக்குரியவர்கள் ஆண்கள் மட்டுமா?

ண்மையில், ஊடகங்களில் வெளியான சோகச் செய்திகளில் கீழ்வருவதும் ஒன்று.

அவளுக்கு, வயது பதினைந்து; முதிர்வயதுச் சிறுமி[பெயர், ஊர் வேண்டாம்]; “அலோ” சொல்லிக் காமக் கடவுள் கைகுலுக்கி வரவேற்கும் வளரிளம் பருவத்தினள் அவள். 

ஆண்களை[குடும்ப உறுப்பினர்கள் விதிவிலக்கு] நெருங்கி நின்று ரசிக்கவும், ஒட்டி உரசித் தொட்டுச் சுகம் காணவும் ஆசைப்படத் தூண்டும் பொல்லாத உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்துவது இப்பருவத்தில்தான்.

கட்டுப்படுத்தி வாழ்வதற்கான மனப்பக்குவம் இல்லாததாலோ என்னவோ, கோயிலுக்குப்போனபோது 20 வயது இளைஞனுக்கு அறிமுகம் ஆகிறாள்[கூடவே அவன் நண்பனுக்கும்] இவள். 

இன்ஸ்டாம்கிராம் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக, தொடர்ந்து ஆசாபாசங்களை[?]ப் பகிர்ந்துகொண்டதில்  இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள்.

சந்தித்துக்கொள்கிறார்கள்.....

***வழவழா கதையெல்லாம் வேண்டாம். அதன் உச்சக்கட்ட நிகழ்வுக்குச் செல்வோம்.

காட்டுப்பகுதிக்கு அவளை அழைத்துச் சென்ற அவன், அவளை மது குடிக்கச் செய்து, போதை ஏற்றிப் புணர்ந்து இன்புறுகிறான்.

வேறு வேறு இடங்களுக்கு அவளை அழைத்துச்சென்று அனுபவிக்கிறான்; நண்பர்களுக்கும்[4 பேர்] விருந்தாக்குகிறான். 5 பேரின் கட்டுப்பாட்டில் 34 மணி நேரம் அவள் இருந்திருக்கிறாள்.

காவல்துறை அந்த 5 பேரையும்[அயோக்கியர்கள்?] கைது செய்து விசாரிக்கிறது. https://www.dailythanthi.com/News/State/5-people-who-raped-a-15-year-old-girl-under-the-influence-of-alcohol-stir-in-karaikudi-1085127

மேற்கண்டதுதான் நான் வாசித்த அந்தச் செய்தியின் சாராம்சம்[முழுச் செய்திக்கு மேற்கண்ட முகவரியைச் சொடுக்குக].

***ஐந்து வாலிபர்களும் குற்றவாளிகளாகக் கருதப்படும் நிலையில்,  பாதிக்கப்பட்ட வளரிளம் பருவச் சிறுமி மீதும், அவளை ஈன்று புறம்தந்து வளர்த்து ஆளாக்கிய அவளின் பெற்றோர்கள் மீதும் நாம் அனுதாபம் கொள்ளும் வகையில்தான் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அனுதாபத்தைக் கூட்டும் வகையில் ஒரு படமும்[தினத்தந்தி] இணைக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கத்தக்கதா?

முன்பின் தொடர்பு இல்லாதவனுக்கு அறிமுகம் ஆகி, தோழியும் ஆகி, சமூக ஊடகங்கள் வாயிலாக நட்பை வளர்த்து, இளம் வயது ஆண்களுக்கான அந்தரங்க ஆசைகள் பற்றியோ, இளமை கொஞ்சும் வயசுக்காரியான தன் பலவீனங்கள் பற்றியோ கொஞ்சமும் சிந்திக்காமல்,  அவர்களுடன் சென்று அவர்களின் காம வெறிக்குப் பலியானது ஏன்? எப்படி?

ஆணைப் பொருத்தவரை, தாபம் தணிந்த நிலையில் அதன் பிடியிலிருந்து முற்றிலுமாய் விடுதல பெறுகிறான். 

பெண்ணின் நிலை அதுவல்ல. அது விசயத்தில் முழுத் திருப்தி பெறுவது அத்தனை எளிதல்ல என்பதால், அப்புறமும் அவள் துயரத்திற்கு உள்ளாவது தொடர்கிறது. விந்து கருப்பையில் தங்கிக் கருவாக மாறினால் அவள் அனுபவிக்கும் கூடுதல் துன்பங்களை அளவிடுவது அத்தனைச் சுலபமல்ல[இங்கே புணர்தல் என்பது திருமணம் ஆகாத ‘ஆண்-பெண்’ இடையே இடம்பெறுவது].

கருக்கலைப்புச் செய்ய நேரிட்டால் அதை மறைத்து, மாப்பிளை தேடி அவளுக்கு மணம் செய்விப்பதில் ஏற்படும் தடைகள் மிகப் பல.

மணமான பிறகு, கடந்தகாலத்தில் செய்த தவறுகளை[பலருடன் உடலுறவு] மறந்து, மனதைப் பக்குவப்படுத்தி, கட்டிக்கொண்டவனுக்குத் துரோகம் செய்யாமல் வாழ்வதும் அத்தனைச் சுலபமல்ல.

ஆக, முறையற்ற கள்ள உடலுறவில் ஈடுபடும் ஆணைப் பொருத்தவரை ஏற்படும் பாதிப்புகள் மிக மிக மிகக் குறைவு என்பதும், அவ்வகைப் பெண்களுக்கு அவை மிக மிக மிக அதிகம் என்பதும் இவளை வளர்த்த பெற்றோர்களுக்குத் தெரியாதா? பிள்ளை வளர்ப்பில் போதுமான கவனம் செலுத்தாதது ஏன்?

முறையாக வளர்க்கத் தெரியாதவர்களுக்குப் பிள்ளைகள் எதற்கு?

குற்றம் புரிவோரைக் கைது செய்து தண்டனை பெற்றுத் தருவதுதான் காவல்துறையின் கடமை என்றால், இது விசயத்தில் அரசுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் உரிய பங்கு என்ன?

மக்கள் நலம் நாடும் அனைவரும் ஒருங்கிணைந்து சிந்தித்துச் செயல்பட வேண்டிய காலக்கட்டம் இதுவாகும். 

                                         *   *   *   *   *

***நிராதரவான நிலையில் உள்ள பெண்களைக் கடத்திக் கற்பழிப்பது மிக கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.