வெள்ளி, 30 செப்டம்பர், 2022

29.09.2022 உலக இதய தினம்! 'தூய மன தினம்' எப்போது?!

29.09.2022ஆம் நாள் 'உலக இதய தினம்' என்பதை இன்று[30.09.2022] சற்று முன்னர் 'BBC' செய்தி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்.

இதய[Heart] நலம் பேணுவது குறித்து 'பிபிசி' பயனுள்ளதொரு கட்டுரையை வெளியிட்டுள்ளது[https://www.bbc.com/tamil/science-63066655] இதய நோயாளிகள் மட்டுமல்லாமல் இதய நோய் அணுகாதிருக்க விரும்பும் அனைவரும் இதைப் படிப்பது மிகவும் பயன்பெறுவதாக அமையும்.

இணையத்தில் இதய நலம் பற்றிய வேறு சில கட்டுரைகளையும் தேடிக் கண்டறிந்து வாசித்ததில் இதயம் முழுக்க மகிழ்ச்சி பரவியதை உணர முடிந்தது.

இப்படி, உடலுறுப்புகளுக்கு மட்டுமல்லாமல், காதலர் தினம், அன்னையர் தினம், ஊனமுற்ற குழந்தைகள் தினம், முதியோர் தினம் என்று எது எதற்கெல்லாமோ ஒரு நாளை நிர்ணயித்து அவற்றைப் போற்றிக் கொண்டாடுகிறது உலகம்.

பாராட்டுக்குரிய செயல்தான்.

விதம் விதமான நோய்களாலும், வறுமையாலும், இயற்கைச் சீற்றங்களாலும் மனித குலம் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகிற அதே வேளையில், பொறாமை, சூதுவாது, வஞ்சகம், பழிவாங்கும் வன்மம் என்று மிகப் பல தீய எண்ணங்களாலும் வதைபட்டுக்கொண்டிருக்கிறது.

அத்தனை பேரும் உத்தமர்களாக வாழ்வது என்பது அத்தனை எளிதல்ல. எனினும்.....

ஆண்டுக்கு ஒரு முறையேனும் மனதிற்குள் கெட்ட எண்ணங்களை அண்டவிடாமல் வாழ்ந்து காட்டுவது, நாம் அத்தனை பேரும் இயன்றவரை நல்லவர்களாக வாழ்வதற்கு வழிகோலுவதாக அமையக்கூடும் என்பதால், 'உலகத் தூய மன தினம்' கொண்டாடுவது மிகவும் தேவையான ஒன்று என்று சொல்லத் தோன்றுகிறது.

தேவைதானா?

சிந்தியுங்களேன்!

===========================================================================


பெண் உருவில் ஓர் ஆபாச 'ஐஏஎஸ்' அதிகாரி!!!

பீகார் மாநிலம், பாட்னா நகரில், 'மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம்' சார்பாக, 'அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்' என்னும் தலைப்பில் 9&10ஆம் வகுப்பு மாணவியருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

'ஹர்ஜோத் கௌர் பம்ரா' என்பவர் தலைமை தாங்கிக் கலந்துரையாடினார்[இவர்தான் மேற்கண்ட அமைப்பின் இயக்குனர்]  இவர் IAS பட்டம் பெற்ற அதிகாரி.

மாணவிகள் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டார்கள்.

'ரியா குமாரி' என்னும் மாணவி, "ரூ20-30 விலையுள்ள சானிடரி நாப்கின்களை மாணவிகளுக்கு அரசு இலவசமாக வழங்குமா?" என்று கேட்டுள்ளார்.

இதற்கு, அந்தத் தறுதலை 'ஹர்ஜோத் கௌர் பம்ரா' அளித்த பதில் என்ன என்பதை அறிந்தால் அதிர்ந்துபோவீர்கள். அது மட்டுமல்ல, அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் அவர் மீது எச்சிலைக் காறித் துப்புவீர்கள்.

அவர் சொன்ன பதில்.....

"இப்போது நாப்கின் கேட்கிற நீங்கள் அடுத்து ஜீன்ஸ், காலணி, ஆணுறை எல்லாம் கேட்பீர்கள்."

மாணவி,  "எனக்கு வசதி உள்ளது. தேவையான நாப்கினை நானே வாங்கிக்கொள்வேன். நான் கேட்டது வறுமையில் வாடுகிற ஏழை மாணவிகளுக்காக" என்று அவருக்குப் பதிலடி கொடுத்ததோடு, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் கடமை இது" என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அந்தக் கழிசடை, "நீங்களெல்லாம் வாக்களிக்க வேண்டாம்" என்று திமிராகப் பதில் தந்திருக்கிறது.

அவரின் இந்த ஆபாசப் பேச்சுக்கு, தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.https://www.nakkheeran.in/24-by-7-news/india/girl-who-asked-napkin-girl-who-spoke-rudely-ias-officer

அடியேனுக்கு வழக்கம்போல இங்கும் ஒரு சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அது.....

'ஹர்ஜோத் கௌர் பம்ரா' என்னும் அசிங்கப் பெண் அதிகாரி, பள்ளி மாணவியாக இருந்தபோதே 'ஆணுறை' பயன்படுத்தியிருப்பாரோ? 

ஹி... ஹி... ஹி!!!


வியாழன், 29 செப்டம்பர், 2022

'இது'க்கு இதுதான் தண்டனையா?!


#கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுவூர்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ். இவரது மனைவி லில்லி ஜெனட்.

இவர் கடந்த 14ஆம் தேதி மண்டைக்காடு காவல் நிலையத்தில் இவரது பக்கத்து வீட்டுக்காரர் சில நபர்களுடன் சேர்ந்து அரசின் உரிய அனுமதியின்றிக் கோயில் ஒன்றைக் கட்ட முயற்சிப்பதாகப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த மண்டைக்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளிதரன்  கடந்த 24ஆம் தேதி ஞானதாஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில்  போலீஸ்காரர் வீட்டிற்கு வந்துள்ளதாக 'லில்லி ஜெனட்' தனது கணவருக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த[?!?!?!] உதவி ஆய்வாளர் முரளிதரன் அந்தப் பெண்ணை அடிக்க முற்பட்டதோடு அவரது செல்போனையும் பறிக்க முயன்றுள்ளார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது#

இது செய்தி. https://tamil.news18.com/news/kanniyakumari/assistant-inspector-assaulted-woman-at-the-place-of-investigation-in-kanyakumari-cctv-video-809231.html

                                      *   *   *   *   *

போலீஸ்காரர் 'லில்லி ஜெனட்'டை நெஞ்சுப் பகுதியில் தொட்டுத் தள்ள, அந்தப் பெண் பின்னோக்கி நகர, அவரை இவர் பின்தொடர்வதான நிகழ்வு காணொலியில் இடம்பெற்றுள்ளது.

போலீஸ்காரர் கோபப்பட்டுத் தாக்கும் அளவுக்கு அங்கே என்ன நடந்தது என்பது பற்றிய விவரம் 'new 18' செய்தித் தொகுப்பில் இடம்பெறவில்லை.

நிகழ்வுக்குக் காரணம் ஒரு பொதுப் பிரச்சினை என்று தெரிகிறது.

போலீசை இழிவுபடுத்தும் அளவுக்கு 'லில்லி ஜெனட்' குற்றம் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இந்நிலையில், இன்று காலை 09.00 மணியளவில், இதே செய்தியை, 'பாலிமர்' தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. இதன் தொடர்ச்சியாக.....

'கன்னியாகுமரி காவல்துறைக் கண்காணிப்பாளர், மேற்கண்ட போலீஸ்காரரைத் தண்டிக்கும் விதமாக, 'இடமாற்றம்'[Transfer] செய்துள்ளார்' என்னும் தகவல் அறிவிக்கப்பட்டதை அறிய முடிந்தது.

இதன் மூலம் போலீஸ்காரர் குற்றம் இழைத்துள்ளார் என்பது உறுதியாகிறது.

இங்கு நாம் எழுப்பும் வினா ஒன்றே ஒன்றுதான். அது.....

ஓர் இளம் பெண்ணைத் தொட்டுத் தள்ளியவருக்குத் தரப்படும் தண்டனை 'வெறும்' இடமாற்றம்தானா?

காவல்துறையில், இம்மாதிரிக் குற்றம் செய்வோருக்கு வெறும் இடமாற்றம் மட்டுமே தண்டனையாக வழங்கப்படும் செய்தி அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகிறது.

இடமாற்றம் என்பது எவ்வகையிலும் ஒரு தண்டனை ஆகாது. இன்னும் சொல்லப்போனால், இடம்மாறிச் செல்லும் ஊர் முன்னைவிடவும் அதிக 'வரும்படி' கிடைப்பதற்கான வாய்ப்பாகவும் அமையக்கூடும். புகார் கொடுக்கக்கூடத் தெரியாத, அல்லது, தயங்குகிற அப்பாவி மக்கள் வாழ்கிற ஊராகவும் அது அமைந்திட வாய்ப்புள்ளது.

காவல்துறையில் குற்றம் புரிவோருக்கு வழங்கப்படும் 'இடமாற்றம்' என்னும் தண்டனை தண்டனையே அல்ல என்பதை இந்நாள்வரை காவல்துறை உயர் அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ உணராமலிருப்பது ஏன் என்று புரியவில்லை.

தொடர்புடைய காணொலி அடுத்து இடம்பெறும் கேட்ஜெட்டில்:

புதன், 28 செப்டம்பர், 2022

சத்குருவா, சத்துருவா?!?!

ஜக்கியின் விதிகளை மீறிக் கட்டடங்கள் கட்டிய வழக்கில், 2014 சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு[கல்வி நோக்கத்திற்காகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளனவாம்!!!] விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நடுவணரசு தெரிவித்தது. அப்போது நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டுப் பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா என மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ((செப்டம்பர் 28))தள்ளிவைத்தனர் -இது, 27.09.2022 செய்தி.

தியான மண்டபம் கட்டியது, பிரமாண்ட ஆதியோகி சிலையை நிறுவியது, பல கட்டடங்களைக் கட்டியது, தனக்குத்தானே சத்குரு[கடவுளின் குரு] என்று பட்டம் சூட்டிக்கொண்டது என்று ஜக்கி செய்த அத்தனை காரியங்களும் தன்னைக் கடவுள் அவதாரம் என்று நம்ப வைப்பதற்காகவே.

யோகா, தியானம் என்று சொல்லிக்கொண்டு கற்பனை செய்ய இயலாத அளவுக்குக் கட்டணங்கள் வசூலித்துக் கோடீஸ்வரன் ஆனவர் இந்த ஜக்கி என்னும் சாமியார்.

இந்த ஆள் கல்விக்குச் செய்த சேவை என்று எதுவுமே இல்லாதபோது, நடுவணரசு விதிவிலக்கு அளித்ததன் பின்னணி என்ன?

இதைத்தான் நீதியரசர்கள் கேட்டிருக்கிறார்கள்.

விதம் விதமாய் அதீத ஆடம்பர உடை உடுத்து, ஹெலிகாப்டர், சொகுசுக் கார் என்று விலையுயர்ந்த வாகனங்களில் உலகம் சுற்றும் இந்த நபரை மோடி அவர்களின் தலைமையிலான அரசு ஆதரிப்பதற்கான உண்மைக் காரணம்தான் என்ன?

என்னுடைய இந்தக் கேள்வியில் உள்நோக்கம் ஏதுமில்லை. இந்த நாட்டின் உண்மைக் குடிமகன் என்ற வகையில் உண்மை அறியும் ஆர்வம் மட்டுமே காரணம்.


இந்தப் படத்தை ஒருமுறை ஊன்றிக் கவனியுங்கள்.

ஜக்கி இருக்கும் இடத்தில் யாரேனும் ஓர் அரசியல் தலைவர் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். ஊடகக்காரர்கள் எப்படியெல்லாமோ அவர் பெயருக்குக் களங்கம்  கற்பித்திருப்பார்கள்தானே?[மற்றபடி, இப்படம் குறித்து நாம் தவறாக விமர்சனம் ஏதும் செய்யவில்லை].

தன்னை யோகி, ஞானி, அவதாரம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த நபர், நவராத்திரி விழா என்று சொல்லிக்கொண்டு அழகிகளுடன் ஆட்டம் பாட்டம் என்று ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டம் செய்கிறாரே, இதற்காகத்தான் மத்திய அரசு இவருக்கு விதிவிலக்கு அளித்ததா?

எந்த அடிப்படையில் இவரை நடுவணரசு தாங்கு தாங்கென்று தாங்குகிறது?

இன்னும் கேட்கலாம்.

அதற்கான 'தில்' வெகு சாமானியனான 'பசி'பரமசிவத்திற்கு இல்லை.

எனவே, நாம் காத்திருப்பது நீதியரசர்களில் நடுநிலையான தீர்ப்பை அறிவதற்காக மட்டுமே.

                                         *   *   *   *   *

https://tamil.oneindia.com/ செய்திக்கான வாசகர் பின்னூட்டங்கள்[திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை]:

 

கற்பழித்து விட்டுத் திருமணம் செய்து கொண்டால், அது சட்டப்படி சரி என்று சொல்வது போல் கைவிட்ட ஜீயின் ஒன்றிய அரசு ஆக்கிரமிப்புப் போலி நிறுவனச்சாமியாருக்கு ஆதரவு .

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள். ஜீயிடம் நீதி எப்படி எதிர்பார்க்கமுடியும்: ஜசோ

அது ஒரு வியாபார நிறுவனம் , ஆன்மிக வியாபாரமும் நடக்கும் இடம் .. ஜக்கி எப்பவுமே சட்டத்தை மதிக்கறதில்லை

All politicians, Judges and Executives will listen to his words. Nothing can be done against him. Govt of India can rename that entire forest as Jaggi forest. Even elephants should take his permission to roam around for food.

கல்வி நோக்கத்திற்காகவும், மாணவர் விடுதிக்காகவும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது// இதைவிட கொடூர நகைச்சுவை வேறொன்றும் இருக்கமுடியாது.

கல்விக்காக கட்டிடம் கட்டி:: கல்விக்காக வா இல்லை கலவிக்கு ஆக கட்டிய இடமா , சரி அப்போ கல்விக்காக கட்டிய இடத்தில சிவராத்திரி அன்று 2 லட்சம் என்று எல்லாம் வசூல் எப்படி செய்யலாம் இதை கோர்ட் கவனத்தில் கொள்வதோ

சூஊப்பர் !!!இனிமேல் மலைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கல்விக்காக கட்டிடம் கட்டியதாக சொல்லிவிட வேண்டியதுதான் !!!! சூஊஊஊப்பர் !!!!!!!

Mani

இதென்னடா நூதன திருட்டா இருக்கு. அந்த பரதேசிப்பய கல்விக்கு கட்டலடா கலவிக்கு கட்டினான்.

ஜிக்கிபாசுதேவ் கஞ்சாவை மூலிகையாக நினைத்து பயிரிட்டதால், தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது - பொத்திய அரசு

magi

தேவைக்கு சட்டத்தை வளைத்துக்கொள்ளலாம் என்று ஒன்றியம் சொல்லவருதா என்று புரியமாட்டேங்குது .

இனிமேல், இஷ்டம் போல வளைச்சி போட்டுட்டு, வெளியே பேருக்கு ஒரு போர்டுக்கு வெச்சிட்டு.
இங்கேய பாடம் சொல்லி தரப்படும்னு கரும் பலகை வெச்சிட்டா யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க, கேள்வி கேக்க கூடாது.

உங்க வீடு உருட்டு, எங்க வீடு உருட்டு இல்ல, இதுக்கு பெரு தான் உலக மகா உருட்டு.

===========================================================================

[https://tamil.oneindia.com/news/coimbatore/isha-coimbatore-case-it-does-not-need-any-clearance-says-union-govt-in-mhc/articlecontent-pf771450-477847.html]