எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 7 டிசம்பர், 2024

நாத்திகர்களின் நற்குணங்கள்!

நாத்திகராக இருப்பவர்கள் பெரிதும் மதிக்கத்தக்கவர்கள். அவர்களுக்குள்ள பல நற்குணங்களே அதற்கான காரணங்கள் ஆகும். 

அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

*கடவுள் குறித்த விவாதங்களாகட்டும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகட்டும் அவை தொடர்பாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள்  எவராயினும்[ஆன்மிகர்கள் உட்பட] அவர்களை மிகவும் மதிக்கிறார்கள்.

*ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் அறிவியலைப் போற்றுகிறார்கள். வாழ்க்கைக்குப் பயன்படுகிற அணுக்கள், அண்டம், நுண்ணுயிர்கள் போன்றவை பற்றி அறிவியல் அறிஞர்கள் அதிகம் ஆராய்வதை அவர்கள் வரவேற்கிறார்கள்.

*மரணத்திற்குப் பின்னரான வாழ்க்கை பற்றிய சிந்தனையில் ஈடுபடுவதைக் காட்டிலும், இக உலக வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியானதாகவும் ஆக்க உதவுவது பற்றியே அதிகம் சிந்திக்கிறார்கள். 

*கடவுள் வழிபாட்டைவிடவும், பரிவு, கருணை, நேர்மை போன்ற நற்குணங்களுடன் ஒருவரையொருவர் மதித்து வாழ்வதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

*நாத்திகர்கள் பெரிதும் நகைச்சுவை உணர்வுள்ளவர்கள். அது சவால்களை எதிர்கொள்ளவும், மக்களுடனான தொடர்பை இணக்கமுள்ளதாக ஆக்கவும் பயன்படுகிறது.

*அவர்கள் இயற்கையின் அதிசயங்களை மிகவும் ரசிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். அது அறிவியல் மீதான மதிப்பைக் கூட்டுகிறது.

*கடவுள் மறுப்பாளர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். அது அவர்களின் அனுபவங்களைப் பிறருடன் பகிர உதவுகிறது.

*அவர்களுக்குப் புதியனவற்றைக் கற்கும் ஆர்வமும் அதிகம்.

*எதார்த்த வாழ்வின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அதிக நாட்டம் கொண்டவர்கள் நாத்திகர்கள்.

*சகிப்புத்தன்மையின் இருப்பிடம் அவர்கள். துன்பங்களை எதிர்கொண்டு சளைக்காமல் ஆராய்ச்சியில் ஈடுபட அது உதவுகிறது.

                                   *   *   *   *   *

அனைத்துத் தகவல்களையும் அறிந்திட

People Who Don’t Believe In God Often Have These 15 Qualities Too