எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 1 ஜனவரி, 2024

பொல்லாத புத்தாண்டு! மனமார்ந்த வருத்தங்கள்!!

புத்தாண்டு[2024]ப் பிறப்பை ஒட்டி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தும், வாழ்த்துகளைப்ப் பகிர்ந்தும் உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த நாளை இன்று கொண்டாடியிருக்கிறார்கள்; கொண்டாடுகிறார்கள்.

இது ஆண்டாண்டுதோறும் இடம்பெறும் நிகழ்வுதான்.

ஒட்டுமொத்த மண்ணுலக மக்களின் அறியாமையை இது அடையாளப்படுத்துகிறது என்பதே என் எண்ணம்.

கொஞ்சம் சிந்தித்தால்.....

இளவட்டங்கள் தங்களின் வாலிபத்தில் கணிசமான அளவு இழக்கிறார்கள் என்பதையும், நடுத்தரங்கள் முதுமைப் பருவத்தை எட்டிப் பிடிப்பது ஓராண்டு முன்னதாகவே நிகழவுள்ளது என்பதையும், மரணத்தைத் தொட்டுவிடக் காத்திருக்கும் கிழடுகளின் மரண பயத்தை இது அதிகரிக்கிறது என்பதையும் அறியலாம்.

ஆகவே, புத்தாண்டுப் பிறப்பு என்பது வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்வதற்குரியதல்ல; வருந்துவதற்குரியதே என்பது புரியும்.

இதை இப்போது புரிந்துகொண்ட அனைவருக்கும்.....

 அடியேனின் புத்தாண்டு வருத்தங்கள்!

ஹி... ஹி... ஹி!!!

இங்கே சாதி! அங்கே பணமும் இனமும்!! அத்தனை மதத்தவரும் சொத்தையர்தான்!!!

கேள்வி:  இந்திய இஸ்லாமியர்களை அரபு இஸ்லாமியர்கள் தங்களுக்கு நிகராக ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?

                                                        பதில்:

அராபியர்கள் இந்திய முஸ்லிம்களைக் கட்டி அணைப்பார்கள்; பக்கத்தில் அமர வைத்து உணவு பரிமாறுவார்கள் . ஆனால், அவர்கள் வீட்டு பெண்ணைக் காதலித்தால் பார்சல்தான். எல்லாருமே முஸ்லிம்தானே, ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்றால், நாம் மட்டும் ஹிந்துக்கள் எல்லோரும் சமம் என்று எண்ணுகிறோமா? இல்லையே! இங்கு ஜாதி பிரதானம். அங்கு பணம் பிரதானம்; அதோடு இனமும் .

அரேபியர்கள் தங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்கள். ஆனால், துருக்கியர்களுக்கு அரேபியர்கள்விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. அரேபியர்கள், துருக்கியர்கள் ஆகிய இருவரையும்விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஈரானிய முஸ்லிம்கள் நினைப்பது உண்டு.

50 ஆண்டுகளுக்கு முன் துருக்கியரும் பெரிசியரும் உயர்ந்தவர் என்று அரபிகள் நினைத்திருந்தனர். அவர்களிடம் இன்று பணம் கொழிக்கவும் மாறிவிட்டனர்.

பொதுவாக இஸ்லாம் ஆடம்பரத்தை ஆதரிப்பது இல்லை. இஸ்லாமிய ஆண்கள் தங்க நகைகளை அணியமாட்டார்கள். ஆனால், அரேபியர்களின் போன்கூடத் தங்கமும் வைரமும் பதிக்கப்பட்டது.

மாலத்தீவு நாட்டில் உள்ளூர் முஸ்லிம்கள் பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கு மதிப்புக் கொடுக்கமாட்டார்கள். உலகில் எங்கும் வங்கதேசிகளுக்கு மரியாதை இருக்காது. எல்லாம் பணம்தான் காரணம்.

இந்திய முஸ்லிம்களுக்கு அரபு நாடுகளில் குறைந்த அளவில் மரியாதை உள்ளது. அது அவர்கள் வீட்டுத் தட்டுவரைக்கும்[உணவளித்தல்] செல்லும். பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கும் இதே அளவில் மரியாதை உண்டு.

இந்திய விடுதலைக்கு முன்புவரை அரேபியர்கள் அதிகம் மதித்தது இந்தியாவில் இருந்த முஸ்லிம் சுல்தான்களைத்தான். குறிப்பாக, அவர்கள் உயர்வாக நினைத்தது எல்லாம் இந்தியாவின் ஹைதராபாத் நிஜாமைத்தான். காரணம், அந்த அரபு நாடுகளுக்கு அவர் வழங்கிய ஏராளமான நன்கொடைகள். ஒரு காலக்கட்டத்தில் உலகின் மிகப்பெரிய பணக்கார முஸ்லிம் சுல்தான் ஹைதராபாத் நிஜாம்தான்.


கேள்விக்கான பதில் சரியானதுதானா? திருப்தியா?!

                                             *   *   *   *   *

நன்றி: 

எழு. ஹை.ந[quora.com]