எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 16 நவம்பர், 2022

இணையத்தில் ‘வலைப்பதிவு’களின் தாக்கம்![Latest Blogging Statistics For 2022]

இணையத்தில் வலைப்பதிவுகளின்[blogging]  தாக்கம் பெரிதும் குறைந்துவிட்டதாகப் பலரும் நம்புகிறார்கள். அது தவறு.

‘ஹோஸ்டிங்’ தீர்ப்பாயத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ஆன்லைனில் குறைந்தது 600 மில்லியன் வலைப்பதிவுகள் உள்ளன. இன்னும் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சரியான எண்ணிக்கையைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல[ஆதாரம்: ஹோஸ்டிங் தீர்ப்பாயம்].

மேலும் விவரங்கள்:

*தினமும் 2 மில்லியன் வலைப்பதிவுகளில் இடுகைகள் வெளியியாகிக்கொண்டிருக்கின்றன.

*அமெரிக்காவில் மட்டும் 31.7 மில்லியன் பதிவர்கள் தமக்கான தளங்களில் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ’ஸ்டேடிஸ்டா’வால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம்:


அமெரிக்காவில் மட்டும் 31.7 மில்லியன் பதிவர்கள் உள்ளனர்

ஆதாரம்: Statista 1

*இணைய பயனர்களில் 77% பேர் வலைப்பதிவுகளைப் படிக்கின்றனர்.

*LinkedIn இன்படி, அனைத்து இணையப் பயனர்களில் ¾க்கும் அதிகமா னோர் வலைப்பதிவுகளைத் தவறாமல் படிக்கின்றனர்[ஆதாரம்: LinkedIn].


*வலைப்பதிவுகளின் பயன்கள்:


1.வலைப்பதிவுகள் பலருக்குத் தகவல்களின் முக்கிய ஆதாரமாக உள்ளன.


2.விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கத்தால் வழங்க முடியாத ஆழமான விவரங்களை அவை வழங்குகின்றன.


3.வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள இவை வணிகர்களுக்கு மிகவும் பயன்படுகின்றன.


இவற்றின் மூலம் நுகர்வோர் & இணையப் பயனர்களிடையே பதிவர்கள் பிரபலமடைந்திருக்கிறார்கள் என்பது அறியத்தக்கது.

*வலைப்பதிவு இடுகைகளில் இணையப் பயனர்கள் மாதத்திற்கு சுமார் 77 மில்லியன் கருத்துகளை வெளியிடுகின்றனர்[வேர்டுபிரஸ்].


இணைய பயனர்கள் வலைப்பதிவு இடுகைகளில் மாதத்திற்கு சுமார் 77 மில்லியன் கருத்துகளை வெளியிடுகின்றனர்

ஆதாரம்: வேர்ட்பிரஸ்

*ஒவ்வொரு மாதமும் 409 மில்லியன் மக்கள் WordPress.com வலைப்பதிவுப் பக்கங்களைப் பார்க்கின்றனர்[ஆதாரம்: வேர்ட்பிரஸ்].

*சராசரியாக ஒரு வலைப்பதிவு இடுகையை எழுதுவதற்குச் சுமார் 3 மணிநேரம் 55 நிமிடங்கள் ஆகும்.

*2021இல் வலைப்பதிவு இடுகைகளின் சராசரி நீளம் 2164 சொற்கள்.


*பார்ச்சூன் 500 நிறுவனங்கள் குறைந்தபட்சம் 54% பொது வலைப்பதிவுகளைக் கொண்டுள்ளன.


*பெரும்பாலான வணிக வலைத்தளங்களின் நிலையான அம்சமாக வலைப்பதிவுகள் மாறி வருகின்றன,


*மேலும் பல பெரிய நிறுவனங்கள், வலைப்பதிவுகள், நேரத்தையும் சந்தைப்படுத்தல் செலவையும் மிச்சப்படுத்துகின்றன என்பதை ஒப்புக்கொள்கின்றன[ஆதாரம்: உமாஸ் டார்ட்மவுத்].

*இணையப் பயனர்களில் கிட்டத்தட்ட, பாதிப் பேர் வலைப் பதிவாளர்களின் கருத்துக்களை மதிக்கிறார்கள்.

===================================================================

ஆதாரம்[மிக மிக விரிவான தகவல்களுக்கு]:

 

https://bloggingwizard.com/blogging-statistics/ [Latest Blogging Statistics For 2022: The Definitive List]  October 26, 2022

கட்டிய புருசனின் எச்சில் சோறு தின்ற கலியுகப் பதிவிரதை!!!

மீனாட்சி, தேவகியைத் தேடிப் போனபோது, சாப்பிட்டுக்கொண்டிருந்த சாதத்தை மீதம் வைத்துவிட்டுத் தள்ளாடியபடி எழுந்து போனான் தேவகியின் கணவன்.


அலுமினியத் தட்டை இழுத்து வைத்து, எச்சில் சோற்றை உண்ண ஆரம்பித்த தேவகி, மீனாட்சியைப் பார்த்துவிட்டு, “வாக்கா சாப்பிடலாம்” என்றாள்.

பதில் பேசாமல் தேவகியின் முகத்தையே உற்றுப் பார்த்தாள் மீனாட்சி.

“என்னக்கா அப்படிப் பார்க்குறே?” 

“இவ்வளவு நாளா உன்னை நான் சரியாவே புரிஞ்சிக்கல.”

“புரியும்படியா சொல்லு.”

“உன் புருஷன்கூட நீ அடிக்கடி சண்டை போடுவே. அதனால, அது மேல உனக்குப் பாசம் இல்லேன்னு நினைச்சேன். ஆனா, பாசம் மட்டுமில்ல ரொம்ப ஆசையும் வெச்சிருக்கேன்னு இப்பத்தான் புரியுது.” -குரலில் குறும்பு துள்ளக் கண் சிமிட்டினாள் மீனாட்சி.

“எதை வெச்சிச் சொல்லுறே?” -விழிகளில் வியப்பு மிளிரக் கேட்டாள் தேவகி.

“இப்பல்லாம் புருஷன் மிச்சம் வெச்ச எச்சில் சோத்தை எவளும் சாப்பிடுறதில்ல. ஆனா, நீ சாப்பிடுறியே, அதை வெச்சுத்தான்.”

“நல்ல கூத்துக்கா. ஆட்டுக் கறி சமைச்சேன். குடிச்சிட்டு வந்து, போடு போடுன்னான். அள்ளி அள்ளிப் போட்டேன். போதையில் பாதி தின்னுட்டு மிச்சம் வெச்சுட்டு எந்திரிச்சிப் போய்ட்டான். கறி விக்கிற விலைக்கு எச்சின்னு பார்த்தா முடியுமா? விதியேன்னு திங்கிறேன். ஆசையாவது தோசையாவது.”

வறட்சியானதொரு சிரிப்பை உதிர்த்தாள் தேவகி.
===========================================================================
இக்கதை, 2015இல் இதே தளத்தில் வெளியானது. ஏற்கனவே வாசித்திருந்தால் பொறுத்தருள்க!