எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 8 நவம்பர், 2025

அழியும் மனித அறிவும் அழியாத கடவுளும்!

‘மாறாதது எதுவும் இல்லை; மாற்றம் மட்டுமே நிரந்தரம்’["Nothing is permanent; change is the only constant"]  என்றார்கள்.

‘அழியாமல் இருப்பது எதுவும் இல்லை; அழிவே நிரந்தரம்’["Nothing is immortal, death is eternal"  என்றும் சொல்லலாம்.

கோள்கள், நட்சத்திரங்கள், பஞ்ச பூதங்கள்[மூலங்கள்], உயிர்கள் என்று மாற்றங்களுக்கு உள்ளாகும் அனைத்துமே அழிவுகளுக்கும் உள்ளாகின்றன.

எத்தனைதான் சிந்தித்தாலும், மாற்றங்களும் அழிவுகளும் நிகழ்வது ஏன் என்பது புரியாத புதிர்.

எதுவும் புரியாத நிலையில், மாற்றமும் அழிவும் இல்லாதவரான கடவுள்தான் மாற்றங்களையும் அழிவுகளையும் நிகழ்த்துகிறார் என்று சொன்னவர்கள் யார்?

மாற்றங்களுக்கு உள்ளாகி அழிந்துபோனவர்கள் சொன்னார்கள்.

மாற்றங்களுக்கு உள்ளானாலும், இன்னும் அழியாமல் இருக்கும் ஆறறிவுள்ள மனிதர்கள் இதை எப்படி நம்புகிறார்கள்?

“ஒன்னுமே புரியல இந்த உலகத்திலே!”