ஞாயிறு, 31 அக்டோபர், 2021

தேவை... தேவை... தேவை ஊர்தோறும் தேர்த் திருவிழாக்கள்!!


ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடும் விழாவில், சப்பரம் கட்டி, சாமி சிலையை அதில் கட்டிவைத்து, அர்ச்சகரையும் உடன் அமரச் செய்து தெருத்தெருவாய்ச் சுற்றிவருவதில் 'சுகமோ  சுகம்' காணும் அன்பர்களே,

இப்படிச் செய்வதால் அற்பமானதொரு சுகம் கிடைப்பது உண்மையாக இருக்கலாம்; ஆனால், அணுவளவும் பயன் விளைவதில்லை என்பது ஆழ்ந்து சிந்தித்தால் புரியும்; நிச்சயம் புரியும்.

சப்பரம் சுமப்பது, தேர் இழுப்பது போன்ற சடங்குகளைச் செய்வது காலங்காலமாய்க் கடைப்பிடிக்கப்படும் வழக்கம். அந்த வழக்கத்தையும், அதனால் கிட்டும் அல்ப சுகத்தையும் விட்டுவிட மனம் இல்லை என்றாலும் அவற்றைத் தொடரலாம். எப்படி?

'ஊரில் அவன் நல்லவன்; சூதுவாது இல்லாதவன்; எவரிடமும்  'வம்புதும்பு'க்குப் போக மாட்டான்' என்றிப்படியான ஒரு நபர் உங்கள் ஊரில் இருந்தால், அந்தச் சப்பரத்தில் அவனை அமர வைத்து ஊர்வலம் செல்லுங்கள். இதை ஒரு விழாவாகவும் கொண்டாடுங்கள். கொண்டாடினால்.....

'அவனைப் போல் நாமும் நல்லவன் என்று பெயரெடுக்க வேண்டும்; நம்மவரால் போற்றப்பட வேண்டும்' என்று மேலும் சிலரேனும் நினைப்பார்கள்; அவ்வாறு வாழ்ந்து காட்ட முயல்வார்கள். 

கிடப்பிலிருக்கும் தேரைப் புதுப்பித்து அலங்காரங்கள் செய்து, அதில் வழக்கம் போல சாமி சிலையை நிறுவி, ஊரெல்லாம் கூடித் தெருத்தெருவாய் இழுத்துச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுவிட்டவர்கள் நீங்கள். இந்த வழக்கத்துக்கு இப்போது முற்றுப்புள்ளி வையுங்கள். வைத்த பின்னர்.....

எவரேனும் ஒருவர் துன்பத்திற்கு உள்ளானால், ஓடிப்போய் உதவுகிற ஒரு நல்லவராவது உங்கள் ஊரில் இருப்பார்தானே? அவரைத் தேரில் அமர்த்திப் பவனி வாருங்கள். அப்படிச் செய்தால், அந்த உபகாரி, பேருபகாரியாக மாறுவார். ஒருவர் மட்டுமே இருந்தார் என்னும் நிலைமை மாறி மேலும் சில உதவும் உள்ளம் கொண்டவர்கள் உருவாவார்கள்.

ஒரு காலக்கட்டத்தில், சிலர் பலர் ஆதலும் நிகழக்கூடும்.

இன்றைய இளைஞர்களில் கணிசமானவர்கள் முற்போக்குச் சிந்தனையுள்ளவர்கள். மக்களுக்குப் பயன்படும் வகையிலான அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்தோ, பொதுத் தொண்டுகள் புரிந்தோ பிறர் பாராட்டும் வகையில் வாழ்ந்து காட்டுதல் வேண்டும் என்ற குறிக்கோளும் உள்ளவர்கள் இவர்கள். 

ஏற்கனவே கல்யாணம் ஆன ஆண் பெண் சாமிகளுக்கு ஆண்டுதோறும் கல்யாணம் கட்டுதல்; ஆறுகளுக்கு ஊர்வலமாய் எடுத்துச் சென்று குளிப்பாட்டுதல் போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களைக் கைகழுவிவிட்டு, மேற்குறிப்பிடப்பட்டவர்கள் போன்ற புதுயுகம் படைக்க விழையும் இளைஞர்களுக்கு விழாக்கள் எடுத்துக் குதூகளியுங்கள். 

இதனால் விளையும் பயன் பெரிது! மிக மிக மிகப் பெரிது!!

==========================================================================


சனி, 30 அக்டோபர், 2021

'அந்தரங்க உறவு'..... சில புரிதல்கள்!

அன்று முதல் இன்றுவரை, 'அந்தரங்க உறவு' விசயத்தில் முழுமையாகத் தீர்க்கப்படாத சந்தேகங்கள் பல உள்ளன. 'அனுபவசாலி' என்னும் முத்திரை குத்திக்கொண்டு ஆளாளுக்கு ஆலோசனைகளை அள்ளித் தெளிப்பவர்கள்  இருக்கிறார்கள். 'சுய அரிப்பை'த் தணித்துக்கொள்ளும் வகையில் வரையறையில்லாமல் ஆபாச வார்த்தைகளைக் கையாளுவது அவர்களின் வழக்கம். 

இம்மாதிரியான 'போலி' அந்தரங்க ஆலோசகர்களுக்கிடையே, பண்பு நெறி பிறழாமல், மிகப் பக்குவமாய்ப் பாலுறவு குறித்த உண்மைகளைப் பகிர்ந்துகொள்பவர்களும் உண்டு.

அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் 'டாக்டர்  நாராயண ரெட்டி' அவர்கள்.

உடலுறவுக்கான தூண்டுதல்கள், தவிர்க்கக் கூடாத 'முன் விளையாட்டு', உடலுறவுக்கான நேரத்தை அதிகரித்தல், சுய சுகம், கருத்தடை முறைகள் பற்றியெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, கொஞ்சமும் முகச்சுளிப்புக்கு இடம் தராத வகையில் பின்வரும் காணொலியில் பதிலளித்திருக்கிறார்  அவர்.

இக்காணொலி,  பயனர்களுக்குப் பெரிதும் நன்மை பயப்பதாக அமையும் என்பது என் நம்பிக்கை.





வெள்ளி, 29 அக்டோபர், 2021

மக்களை வதைக்கும் மதவாதிகளும் வருந்தும் நீதியரசரும்!


மத நம்பிக்கைகளைப் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது; விழாக்காலங்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டிவைத்துக்கொண்டு அதிக ஒலி எழுப்பி, மதச் சார்பற்றவர்களின் மன நிம்மதிக்குப் பங்கம் விளைவிப்பது; 'சுவாமி ஊர்வலம்' என்னும் பெயரில் அத்தியாவசியப் போக்குவரத்துக்கு இடையூறு செய்வது; அரசின் சட்டதிட்ட விதிகளை மீறுவதையே வழக்கமாக்கிகொள்வது என்றிவ்வாறான மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்டித்துக் குரல் எழுப்புவதற்கு மாறாக, 'நமக்கென்ன' என்று கண்டும் காணாமல் இருப்பது நம் எல்லோருக்குமே குருதியில் இரண்டறக் கலந்துவிட்ட கோழைத்தனம் ஆகும்.. 

இந்த அவல நிலைக்கிடையே.....

நீதிநெறிகளைக் கட்டிக் காப்பதையே தம் கடமையாகக் கொண்டிருக்கும் நீதியரசர் ஒருவர், மத அமைப்புகளின் மேற்கண்டவாறான  விரும்பத்தகாத செயல்பாடுகளைக் கண்டித்துள்ளார் என்னும் செய்தி நம் செவிகளில் தித்திக்கும் தேனைப் பாய்ச்சுவதாகும்.

போற்றுதலுக்குரிய அந்த நீதியரசர்.....

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்கள்.

மத வழிபாட்டுத் தலங்களின் விதிமீறல் மீது உரிய நடவடிக்கை  எடுக்கும் வகையில் உரிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழகத் தலைமைச் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவு ஒன்றில், அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், அனுமதிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலான சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

'மத வழிபாட்டுத் தலங்களின் இடையூறுகளால் ஒரு மனிதன் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை' என்று தம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரோட்டில், உரிய அனுமதி பெறாமல் கட்டிய  தேவாலயத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை எதிர்த்து ஈரோடு தொப்பம்பாளையம் பெந்தக்கோஸ்த் மிஷன் சர்ச் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு, தம்மிடம் விசாரணைக்கு வந்தபோதுதான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்ததோடு வருந்தவும் செய்திருக்கிறார் நீதியரசர் அவர்கள்.

============================================================================

 https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=715929       -2021-10-28@ 17:03:12


வியாழன், 28 அக்டோபர், 2021

விபரீதப் பாலுறவுத் தூண்டல்கள்!!


இயல்புக்கு மாறான “பாரபீலியா” என்னும் பாலுணர்வுக் குணாதிசயத்தை, “சேடிஸம்” என்பார்கள். இதற்குச் சற்றே எதிர்மறையானதொரு குணத்தை, அல்லது, மிதமிஞ்சிய ஆர்வத்தை 'மஸோசிஸம்'(Masochism) என்பார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியக் காலகட்டத்தில், ஆஸ்திரியா நாட்டின் மன்னர் குடும்பத்தில் பிறந்த ஒருவரின் பெயர், 'கவுன்ட் லெப் போல்டுவான் சாஸர் மேஸோ' என்பதாகும். மேஸோ, பிறந்தபோதே தாயை இழந்து விட்டதால் “ஹன்ஸ்கா” என்ற ஆயாவிடம்தான் வளர்ந்தார். தினமும் அவரைக் கதை சொல்லித் தூங்கவைப்பாள் இந்த ஆயா. இந்தக் கதைகள் அத்தனையும் திகில் கதைகள்!

மேஸோவின் தந்தை, கறாரான ஒரு போலீஸ் அதிகாரி. இவரும் தன் பங்குக்குப் போலீஸ் உத்தியோகத்தில் பெற்றிருந்த, பல கொடூரமான கதைகளை மகனிடம் சொல்வார். வளரும் பருவத்தில் பீதியூட்டுகிற இவை போன்ற கதைகளைக் கேட்டுக் கேட்டுக் காலப்போக்கில் பாரபீலியா['மஸோசிஸம்'] குணாதிசயம் கொண்டவராக மாறிப்போனார் மேஸோ. 

பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தபோதும், சட்டத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவராக ஆன பிறகும் இவருக்குப் பாலுறவு இன்பத்தை வித்தியாசமான முறையில் அனுபவிப்பதில் அதிக நாட் டம் இருந்தது. 

அடித்தல், உதைத்தல், நகங்களால் கீறுதல், பற்களால் கடித்தல் என்றெல்லாம் தன் மனைவியைச் செய்யத் தூண்டினார். இப்படிச் செய்தால்தான் இவருக்குப் பாலுணர்வு தலைதூக்குமாம்.

இது பிடிக்காமல் இவர் மனைவி ஓடிப் போய்விட, மீண்டும் அடுத்தடுத்து மூன்று பெண்களைத் திருமணம் செய்துகொண்டார் மேஸோ. அவர்களையும் இதே மாதிரி தன்னைத் துன்புறுத்தத் தூண்டினார். அவர்களும் மேஸோவின் கிறுக்குத்தனமான பாலுறவுச் செய்யல்பாட்டைச் சகித்துக்கொள்ள இயலாமல் ஓட்டம் பிடித்தார்கள். இதன் பிறகு திருமணம் புரியும் எண்ணத்தைக் கைவிட்டு, ஆசை நாயகிகள் மூலம் தன் பெருவிருப்பத்தை நிறவேற்றினார் இவர்.

1886ஆம் ஆண்டு “வீனஸ் இன்ஃபர்” என்றொரு புத்தகத்தை எழுதினார் மேஸோ. 

இந்தப் புத்தகத்தின் நாயகன் ஷவரின்; நாயகி வாண்டா. இந்தப் புத்தகம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம்..... 

//தன்னைத் துன்புறுத்தச் சொல்லி வாண்டாவை நிர்ப்பந்திப்பான் ஷவரின். அவளும் அவன் விருப்பத்தை நிறைவேற்றினாள். பயந்து பின்வாங்காமல், அவனை அடி பின்னி எடுத்தாள்! 

இதுபோன்ற செயல்பாடுகளின்போது வாண்டாவைத் தோலாடை போன்ற ஒரு வகை உடையை அணிந்து கொள்ளச் சொல்லி, உரோமங்களால் ஆன துணியால் தன்னை அடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவான் ஷவரின். 

இதன் மூலம் பாலுணர்ச்சியைப் பெறுவது வழக்கமானது.//

இது 'மேஸோ'வின் கதையில் வரும் சம்பவம்தான் என்றாலும் அந்நாட்களில் தனது சொந்த அனுபவத்தைத்தான் உருமாற்றி, இப்படி அவர் எழுதியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. 

ஏனெனில், மேஸோவின் இம்சைகளுக்குப் பயந்து ஓடிய மனைவிகளின் குற்றச்சாட்டுகளும், இந்தப் புத்தகத்தில் வரும் சம்பவங்களும் ஒன்றாகவே இருந்ததுதான் காரணம்.  

இதுபோன்ற செக்ஸ் செயல்பாடுகளுக்கு மேஸோவின் பெயரையொட்டித்தான் 'மஸோசிஸம்' என்று பெயர் சூட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

                                            *  *  *

இதனோடு தொடர்புடையதொரு பதிவு:

https://kadavulinkadavul.blogspot.com/2021/02/blog-post_16.html

============================================================================

http://tamilnews.cc/news/news/80702   -8 பிப்., 2016 

புதன், 27 அக்டோபர், 2021

'இந்தி'யில் பேசாவிட்டால்.....

 //இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள பல நிறுவனங்களும் இந்தியை ஆதரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தங்களது வாடிக்கையாளர்களிடம் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ கடந்த வாரம் சர்ச்சையில் சிக்கியது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவில் ஒரு பொருள் விடுபட்டுள்ளது குறித்து ஜொமாட்டோ கஸ்டமர் கேரில் புகார் அளித்துள்ளார். அப்போது அவர் தமிழில் பேசியுள்ளார், விடுபட்ட உணவுப் பொருளுக்கான பணத்தைத் தனக்குத் திருப்பித்க் தந்துவிடுமாறு கூறினார். அதற்கு கஸ்டமர் கேரில் இருந்து பேசிய நபர் தனக்குத் தமிழ் தெரியாது என்று கூறினார்.

அத்துடன் நிற்காமல், ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்றும் அவர் கேட்டுள்ளார். 

இதே மாதிரியான ஒரு நிகழ்வு கர்னாடகாவிலும் இடம்பெற்றுள்ளது//[ஊடகச் செய்தி].

பெங்களூருவில் உள்ள 'கேஎஃப்சி' விற்பனை மையத்தில் இந்திப் பாடல் ஒலிக்கப்பட்டது.

அப்போது அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் கன்னடப் பாடலை ஒலிபரப்புமாறு கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் 'இந்தியாவின் தேசிய மொழி இந்தி' என்று அந்தப் பெண்ணிடம் பதிலளித்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. 

இச்செய்திகளின் மூலம், இந்தி வெறியர்கள்[அதிகாரம் படைத்தவர்களின் ஊக்குவிப்புடன்] இந்தி பேசாத மக்களிடம் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது தெரிகிறது.

ஆக, நாட்டை ஆளுவோர் இந்தியை வளர்ப்பதிலும் பரப்புவதிலும் அதீத ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பதால், இவர்களின் திணிப்பு முயற்சி தங்குதடையின்றித் தொடரும் என்பதில் எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

எனவே, உணவுப் பொருள் வழங்கும் நிறுவனமான ஜொமாட்டோ, கோவையில் மன்னிப்புக் கேட்டதுபோல், கேஎஃப்சி நிறுவனமோ, இவை போன்ற பிற இந்தி பரப்பும் நிறுவனங்களோ, இம்மாதிரியான பிரச்சினைகளை உண்டாக்கிவிட்டுப் பிறகு மன்னிப்புக் கேட்கும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

சொல்லப்போனால், "இந்தியில் பேசாவிட்டால் நீங்கள் கேட்கும் பொருளை வழங்கமாட்டோம்" என்று சொல்லுவதும் நடக்கக்கூடும்.

இந்த இந்தித் திணிப்பு, உணவுப் பொருள் வழங்கும் நிறுவனங்கள் அளவில் நின்றுவிடாது என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியம்.

இந்தியில் பேசாவிட்டால், இந்திய அளவில், 'இந்தி'யர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் அனைத்துமே, தாம் தயாரிக்கும் பொருள்களை இந்தி தெரியாதவர்களுக்கு வழங்கிட மறுக்கலாம்.

இந்தியை[மட்டும்]ப் பரப்ப அயராது பாடுபடும் இந்திய அரசு, இந்தி பேசத் தெரியாத மாநில மக்களுக்கு, இயற்கைப் பேரிடர்க் காலங்களில் உதவி செய்வதை நிறுத்திவிடவும்கூடும்.

இந்தி பேச மறுக்கும் மாநிலங்களுக்கிடையே, அவர்களுக்குள் பேசித் தீர்க்க இயலாத பெரும் பிரசினைகள் எழுந்தால், 'அடித்துக்கொள்ளட்டும்' என்று கண்டும் காணாமலும் இருந்துவிடுவதற்கான சாத்தியமும் உண்டு.

இந்தி பேச மறுக்கும் மாநில மக்களைத் தண்டிக்க இன்னும் பல வழிமுறைகள் உள்ளன. அனைத்தையும் இங்கு குறிப்பிட்டால், அது நீண்டதொரு பட்டியலாக அமையக்கூடும்[ஏடாகூடமாக எதையும் சொல்லி வைத்தால், 'பசி'பரமசிவம் வம்புதும்பில் மாட்டிக்கொள்ளுதலும்கூடும்! ஹி... ஹி... ஹி!!!].

============================================================================

செவ்வாய், 26 அக்டோபர், 2021

கருத்துக்குப் பொருத்தமாய்க் 'கலக்கல்' கதை சொல்லும் ஜக்கிவாசுதேவ்!!!


'சத்குரு' என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் 'ஜக்கி வாசுதேவ்' அவர்களைப் பற்றிப் பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். எல்லாமே அவரைச் 'சாடி' எழுதியவைதான்.

இந்தப் பதிவு, அவரின் கதை சொல்லும் திறனைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'விவாகரத்து' குறித்து அவர் வழங்கிய கருத்துரைப் பதிவு ஒன்றில் சுவையான கதைகளை அவர் சொல்லியிருக்கிறார். வாசித்து மகிழ்ந்தேன். 'காதல் இன்றி, ‘மனைவி’ ‘கணவன்’ என்று பெயரளவில் இணைந்து வாழ்வது சித்ரவதையானது' என்பதை வலியுறுத்தும் வகையில் உருவானவை அக்கதைகள்.

கதை 1:

#திருமணம் முடிந்த கையோடு அந்தக் கணவனும் மனைவியும், 'ஓருவர் மற்றொருவரின் அலமாரியைத் திறந்து பார்க்கக்கூடாது' என்று ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர்; அதை மதித்து நடந்துகொள்ளவும் செய்தனர். 

30 ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள்.....

கணவனின் அலமாரி திறந்து இருப்பதைக் கவனித்த மனைவி, கட்டுக்கடங்காத  ஆர்வம் காரணமாக, அதனுள்ளே பார்வையை ஓடவிட்டாள். 

உள்ளே 12 ஆயிரம் ரூபாய்ப் பணமும், மூன்று மெழுகுவர்த்திகளும் இருந்தன.

"மெழுகுவர்த்தி எதற்கு?" என்று கணவனை அழைத்துக் கேட்டாள் மனைவி.

"நான் உனக்குத் துரோகம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஒரு மெழுகுவர்த்தி வாங்கிவைப்பது வழக்கம்" என்றான் கணவன்.

'30 வருடங்களில் மூன்றே முறைதான் தவறி இருக்கிறானா?' என்று ஆறுதல் பெற்ற மனைவி, அவனை மன்னிக்கவும் தயாராக இருந்தாள்.

அங்கிருந்த பணத்தைச் சுட்டிக்காட்டி, "இந்தப் பணம்?" என்று கேட்டாள்.

"அதுவா? 100 மெழுகுவர்த்தி சேர்ந்துவிட்டால், அவற்றைப் பாதிவிலைக்குக் கடைக்காரனிடமே கொடுத்துவிடுவேன். அப்படிச் சேர்ந்த பணம் அது" என்றான் கணவன்.

அதிர்ச்சியிலிருந்து விடுபட மனைவிக்கு வெகு நேரம் ஆனது.

கதை 2:

ஒருவன் ரபியிடம் (சர்ச் ஃபாதர் போல்) வந்தான்; "என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், தெருவில் செல்கையில் மற்ற அழகான பெண்களைக் காண்கையில் அவர்களால் தூண்டப்படுகிறேன். தவிக்கும் மனதை என்ன செய்வது?" என்று கேட்டான்.

ரபி சொன்னார்: "அபார உணவு வகைகளைப் பார்க்கும்போது, அவற்றை உண்பதற்காக எவ்வளவும் ஆசைப்படு. தவறில்லை. ஆனால், உணவு உண்பதற்கு மட்டும் உன் வீட்டுக்குப் போய்விடு."

https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/moham-theernthatum-kaadal-mudinthuviduma      -Mar 7, 2014


திங்கள், 25 அக்டோபர், 2021

ஆண்களைவிடவும் பெண்களே புத்திசாலிகள்... சில நேரங்களில்!

ஒரு வாரம்போல வாணிப நிமித்தம் ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்புகிறான் கணவன். குளித்து முடித்து, உணவருந்திப் படுக்கையறை புகுந்த அவனுக்கு ‘அந்த’ நினைப்பு!

“இன்னும் என்ன பண்றே?” - மனைவியை அணுகிக் கிசுகிசுத்தான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்து, “எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்குது” என்று புன்முறுவல் பூத்தாள் அவள். இந்தப் புன்முறுவலுக்கு என்ன அர்த்தம்?

‘குழந்தை தூங்காம விளையாடிட்டிருக்கு. நாத்தனார் நாவல் படிச்சிட்டுக் கொட்டக் கொட்ட முழிச்சிட்டிருக்கா. கிழவனும் கிழவியும் தொணதொணத்துட்டிருக்காங்க. எல்லாரும் தூங்கட்டும். அவசரப்படாதீங்க’ன்னு அர்த்தம்! இது எத்தனை ஆண்களுக்குப் புரியும்?

சில நேரங்களில், இந்தப் பெண்களின் பேச்சுக்கு எதிர்மறையாகப் பொருள்கொள்ள வேண்டும்.

தீபாவளிக்கு இரண்டு வாரம் இருக்கிறது. கணவன் அலுவலகம் புறப்படும்போது மனைவி குரல் கொடுக்கிறாள்: “இந்தத் தீபாவளிக்கு எனக்குப் பட்டுப்புடவை வேண்டாம்.”

“இன்னிக்கிச் சம்பள நாளாச்சே. மறக்காம பட்டுப் புடவை வாங்கிட்டு வந்துடுங்க” என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். இதைப் புரிந்துகொண்டால் கணவன் பிழைத்தான். புரியாதவன் பாடு திண்டாட்டம்தான்.

இருவரும் ஒரு திருமணத்திற்குச் செல்கிறார்கள். ஆடம்பரமாக உடுத்து, அழகழகான பெண்கள் எல்லாம் வருவார்கள் இல்லையா? எவளோ ஒருத்தியைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா இல்லியா?’ என்று உங்களவள் கேட்டால், “உன்னை விடவா?” என்று கூசாமல் பொய் சொல்லத் தெரிய வேண்டும். “ஆமா” என்று உளறிக்கொட்டினால் ‘அது’ விசயத்தில் நீங்கள் பல நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும்!

உங்கள் மனைவியின் தோழி,  செல்பேசியில் உங்களையும் அழைத்துக்கொண்டு தன்  திருமணநாள் கொண்டாட்டத்திற்கு வரச் சொல்லுகிறாள். “என் நாத்தனார் ரெண்டு பேரும் ஊரிலிருந்து வந்திருக்காங்க. அவங்களையும் அழைச்சிட்டு வரவா?” என்கிறாள் உங்கள் மனைவி. தோழியிடமிருந்து உடனடி பதில் இல்லை. கொஞ்சம் அமைதிக்குப் பிறகு அழைத்துவரச் சொல்லுகிறாள் அவள்.

அந்த அமைதிக்கு என்ன பொருள்?

“வேண்டாம்” என்பதே. அது உங்கள் மனைவிக்கும் பிற பெண்களுக்கும் மட்டுமே புரியும். உங்களைப் போன்ற ஆண்களுக்குப் புரியாது.

கணவனும் மனைவியுமான இரண்டு ஜோடிகள் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். முதலில் ஒரு ஜோடியின் வீடு வந்துவிடுகிறது. அந்தப் பெண், “வாங்களேன், காபி சாப்பிட்டுப் போறது” என்கிறாள்.

“சரி” என்று தலையாட்ட இருந்த உங்களைத் தடுத்து, “பரவாயில்ல அக்கா. வீட்டில் அவசர வேலை இருக்கு” என்று உங்களை இழுத்துக்கொண்டு வீடு வந்து சேர்கிறாள் உங்கள் துணைவி.

‘வாங்களேன்’, ‘போறது’ போன்றவை வெறும் உபச்சார வார்த்தைகள் என்பது உங்கள் குடும்பத் தலைவிக்கும் புரியும்; உங்களுக்குப் புரியவே புரியாது.

வீட்டில், எதிர்பாராமல் வந்த விருந்தாளியைச் சாப்பிட அழைக்கிறாள் உங்கள் மனைவி. “நீங்களும் சாப்பிடுங்க” என்று சொல்லாமல், “சாப்பிட்டுடுங்களேன்” என்று சொன்னால், அதற்குப் போதுமான அளவு உணவு இருப்பில் இல்லை என்று அர்த்தம். 

குரலின் ஏற்ற இறக்கம்,  வார்த்தைகளுக்கு இடையே விடும் இடைவெளி, புருவங்களின் அசைவு, இழுத்து விடும் பெருமூச்சு என்றிவைகளுக்கேற்பப் பெண்களின் பேச்சுக்கான அர்த்தமும் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.

பெண்களின் பேச்சை முழுமையாகப் புரிந்துகொள்வது பெண்களுக்கு மட்டுமே சாத்தியம். ஆண்களுக்கு?

ஊஹூம்!
==========================================================================
மார்ச் 1997 ‘ஓம் சக்தி’ இதழில் முருகுசுந்தரம் அவர்கள் எழுதியதைக் கொஞ்சம் மாற்றங்களுடன் பதிவு செய்திருக்கிறேன்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

'அது' விசயத்தில் சராசரியும் அதுக்குக் கீழேயும்.....


கீழ்வருவது, ஒரு புதினத்தில் இடம்பெற்ற வாழ்வியல் உரையாடல். மிகவும் பயனுள்ளது; சுவையானது. படித்துப் பயன்பெறுங்கள்.

....."நான் சராசரியோ அதுக்கும் கீழேயோ, என் பெண்டாட்டி ஒருத்தனோடு ஓடிப்போன அப்புறம் கல்யாணத்தைச் சுத்தமா வெறுத்துட்டேன்அதுல இன்னிக்கி வரைக்கும் எந்தவித மாற்றமும் இல்ல” என்றான் அறிவரசு.

வயசு உனக்கு முப்பதுதான் ஆகுதுவாழ வேண்டி வருசங்கள் நிறைய இருக்குகடந்த காலக் கசப்பான அனுபவங்கள் கொஞ்சம் கொஞ்சமா காலப்போக்கில் மறந்துடும்அப்புறம்பெண்டாட்டி இல்லாம காலம் தள்ளுறதில் பல பிரச்சினைகள் இருக்கும்னு ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன்முடிவை மாத்திக்கஎன்றான் அறிவரசுவின் நண்பன் சாந்தன்.

"கல்யாணமே இல்லாம காலந்தள்ளுறவங்களும் இருக்காங்க” என்றான் அறிவரசு.

அவங்க எல்லாருமே விரக்தியால அந்த முடிவுக்கு வந்தவங்க அல்லஉடல்நலக் குறைவுயாரும் பெண் தர முன்வராததுன்னு வேறு வேறு காரணங்கள் இருக்கும்இப்படியெல்லாம் மனசைப்போட்டுக் குழப்பிக்க வேண்டாம்” என்றான் சாந்தன்.

அறிவரசு மௌனம் சுமந்திருந்தான்.

அவனின் மாமா குமாரசாமி பேசினார்:

தாலி கட்டினவ ஓடிப்போறதை நினைச்செல்லாம் கவலைப்படுறது பைத்தியக்காரத்தனம்கட்டின பெண்டாட்டியை இழந்தப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறதில் இஷ்டம் இல்லேன்னாஇன்னொருத்தியைச் சேர்த்துகிட்டு வாழுறவங்க நிறையவே இருக்காங்கஇப்படிப்பட்டவங்க எத்தனை பேரு இருக்காங்கன்னு அரசாங்கம் கணக்கெடுப்பு ஏதும் நடத்தலதனியா காலந்தள்ள முடியாதுன்னு ஒருத்தனொடு சேர்ந்து வாழுற பொண்ணுகளும் இருக்காங்க....."

கொஞ்சம் யோசனைக்குப் பிறகு தொடர்ந்தார் குமாரசாமி. "என் வயசுக்காரர் ஒருத்தரோட முதல் பெண்டாட்டிகல்யாணமாகி மூனு மாசத்திலேயே பக்கத்து வீட்டுக்காரனோடு ஓடிப்போனாஅவர் இன்னொரு கல்யாணம் கட்டினார்அவளும் ஆறு மாசத்தில் பால் ஊத்துறவனைக் கூட்டிட்டுக் கம்பி நீட்டிட்டாஅவர் உடைஞ்சி போகலஅப்புறமும் பெண் தேடினார்யாரும் பெண் கொடுக்க முன்வரலமூனாவதா ஒரு விதவையைச் சேர்த்துகிட்டார்..... 

இது நடந்து இருபது வருசம் போல ஆச்சுஇன்னிக்கிவரைக்கும் எந்தவிதமான மனத்தாங்கலும் இல்லாம ரெண்டுபேரும் சந்தோசமா இருக்காங்கமாப்ளஒன்னு புரிஞ்சிக்கோஒரு ஆம்பிளை அது விசயத்தில் பொம்பளையைத் திருப்திபடுத்தணும்னு மனப்பூர்வமா செயல்பட்டாப் போதும்ஒருத்திக்கு அவன் தர்ற சுகம் குறைவானதா இருந்தாலும்வேறொருத்திக்கு அதுவே போதுமானதா இருக்கும். 

=====================================================================================

குறிப்பு:

கடந்த ஆண்டில் வெளியான ஒரு நாவலிலிருந்து 'சுட்ட' பகுதி இது.

"நாவலாசிரியருக்கு 'நன்றி' சொல்லலையா?" -நீங்கள்.

"எனக்கு நானே எப்படிங்க நன்றி சொல்லிக்கிறது?!" -நான் 

ஹி... ஹி... ஹி!!! 

சனி, 23 அக்டோபர், 2021

மரணம் வரவேற்கத்தக்கதே!!!


தலைப்பைப் பார்த்து முகம் சுளிக்க வேண்டாம்.

இதில் பெரிய தத்துவமே அடங்கியுள்ளது.

வறட்டுத் தத்துவம் அல்ல; வாழ்க்கைத் தத்துவம்.

கவலைப்படுதலில் பல நிலைகள் உள்ளன. அவரவர் மனப்பக்குவத்தைப் பொருத்துச் சிறிய கவலைகள் பெரிதாகவும், பெரிய கவலைகள் அதனினும் பெரிதாகவும் உணரப்படக்கூடும்.

"கால் செருப்பு கண்டமாகி ஆறு மாசம் ஆச்சு; புதுசு வாங்க வசதி இல்ல."... "ஒரு செல்ஃபோன் வாங்க வக்கில்ல."... "சுற்றுலா போனதில்ல"... என்றிப்படிக் கவலைப்படுவோர் உள்ளனர்.  -செருப்பில்லாமலும், செல்ஃபோன் இல்லாமலும், சுற்றுலா போகாமலும் காலத்தைக் கடத்திட முடியும் என்பதால், இவை போன்றவை சிறிய ரகக் கவலைகள் ஆகும். 

படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காதது; செய்த தொழிலில் எதிர்பாராத இழப்பு; வயசாகியும் கல்யாணம் ஆகாதது; கட்டிகிட்ட கணவன் -மனைவிக்கிடையே பிரச்சினைகள் என்று இவையும், இவற்றை ஒத்தவையும் அற்பமானவை அல்ல என்பதோடு அலட்சியம் செய்ய இயலாத கவலைகள். 

அடுத்தடுத்துத் தாக்கும் தீராத நோய்களால் மரணத்தை எதிர்பார்த்து மனம் வெதும்பிச் சிதைந்து காத்திருப்பது; கயவர்களால் கடத்தப்பட்ட, பாசத்துக்குரிய பெண் பிள்ளையை ஆண்டுக்கணக்கில் தேடியும் கிடைக்கப்பெறாமல் அழுத கண்களுடன் செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருப்பது என்று இத்தகைய கவலைகள் தீரவே தீராதவை.

இவற்றைத் தீர்த்திட.....

மகான்களோ, அவதாரங்களோ, ஞானிகளோ வழிகாட்டியதில்லை.

இவர்களால் போற்றிப் புகழ்ந்து பேசப்பட்ட/படும் கடவுளோ/கடவுள்களோ உதவியதில்லை. 

தீர்க்கவல்லது மரணம் மட்டுமே. எனவே, மரணம் வரவேற்கத்தக்க ஒன்றுதான்!

==========================================================================

 


வெள்ளி, 22 அக்டோபர், 2021

தமிழர்கள் வாழும் தாராவி[மும்பை]யில் 'மதக்கலவரம்'!... ஒரு பின்னோக்கு[flashback].


எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக 'நக்கீரன்' வாசகர்களுடன் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியில் நடைபெற்ற மதக்கலவரம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

“அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் தாராவியிலும் மதக்கலவரம் வெடித்தது. அந்தச் சம்பவம் நடந்து ஒருமாத காலம் நிறைவடைந்திருந்த நிலையில், மிகப்பெரிய கலவரம் தாராவிக்குள் உண்டானது. 

.....அங்கு இந்து - முஸ்லீம் கலவரம் வெடித்தவுடன் இரு தரப்புமே மற்றவர்கள் வேட்டியையும், கால்சட்டையையும் உருவிப்பார்த்து, அவர்களது மதத்தை உறுதிசெய்துவிட்டு வெட்ட ஆரம்பித்தார்கள். பலபேர் இதில் காயம்பட்டார்கள். இட்லி விற்ற ஒரு சிறுவனை இதேபோல ஆடையுருவிப் பார்த்துக் கொலைசெய்து  90 அடி ரோட்டில் வீசிவிட்டுச் சென்றனர். மொத்தமாக இதில் இறந்தது 8 பேர்தான் என்றாலும் அங்கிருந்த மக்கள் மத்தியில் இது ஏற்படுத்தியிருந்த பீதி மிகவும் கொடூரமாக இருந்தது. அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. 

அங்கிருந்த குடிசைகளுக்குத் தீவைத்து, அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக குடிசையைக் கொளுத்தினார்கள். கொளுத்தியவனும் தமிழன்தான். இந்து, முஸ்லீம் என இரு தரப்புகளிலும் தமிழர்கள் இருந்தார்கள். 

அந்தக் கொடூரமான கலவரங்களுக்கு மத்தியில் கடையில் இருந்த அரிசி, பருப்புகளெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன. அந்தக் கடையும் தமிழனுடையதே; அங்குள்ள பொருட்களை அள்ளிக்கொண்டு சென்றவனும் தமிழனே. 144 தடை உத்தரவு போடப்பட்டு ராணுவம் அங்கு குவிக்கப்பட்டிருந்தது. அன்றைய இரவு நான், எனது தோழர்கள் அனைவரும் வேலை முடித்துவிட்டுத் திரும்பி வந்தோம். எங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே தனியாக இருப்பார்கள் எனக் கூறியவுடன் தாராவிக்குள் செல்ல எங்களை அனுமதித்தனர். நடந்து போகக்கூடாது எனக் கூறி முட்டிபோட்டுக்கொண்டே செல்லச் சொன்னார்கள். நானும் உடனிருந்த தோழர்களும் முக்கால் கி.மீ தூரம் முழங்காலிட்டுக்கொண்டே சென்றோம்.    

.....ஒருத்தனைக் கத்தியால் குத்திக் கொல்ல நினைத்தார்கள் என்றால் விஷம் தடவித்தான் குத்துவார்கள். தெருக்களில் ரத்தம் சிந்திக்கிடப்பது, கண்ணாடிகள் நொறுங்கிக்கிடப்பதெல்லாம் அங்கு சாதாரணம். சாதிக்கலவரங்கள், மதக்கலவரங்கள், களவாணிப்பயல்களுக்கு இடையேயான மோதல்கள் எனப் பலவற்றைப் பார்த்துப் பழகிவிட்டார்கள் அந்த மக்கள்.

.....அங்கு நடக்கிற பிரச்சினைகளைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசாரைக் கொண்டுவந்து குவிப்பார்கள். பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவரவே அவர்கள் வந்திருந்தாலும் கலவரத்தில் நம்மையும் சுட்டுவிடுவார்களோ என அச்சமாக இருக்கும். 

அங்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சி யூனியன் உட்பட எல்லா யூனியன்களும் உங்களுக்கு நாங்கள் போனஸ் வாங்கித் தருகிறோம் எனக் கூறி அங்கிருந்தவர்களைப் போராட வைத்தார்கள். கடைசியில் அங்கிருந்த டெக்ஸ்டைல்ஸ் அனைத்தும் குஜராத்திற்குச் சென்றுவிட்டது. ஒவ்வொரு கம்பெனியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலை பார்த்தார்கள். சில கம்பெனிகளில் 7 ஆயிரம் தமிழர்கள்வரை வேலை பார்த்தார்கள். 80களிலேயே ரூ. 25 ஆயிரத்திற்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கிய தமிழர்களும் அங்கு இருந்தனர். இந்தக் கம்பெனிகள் எல்லாம் மூடப்பட்டதால் வெறும் 15 ரூபாய் தினக்கூலிக்காக நம்முடைய ஆட்கள் வேலைக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.  

இவ்வளவு நெருக்கடியான வாழ்க்கைக்கு மத்தியிலும் கணபதி வழிபாடு சிறப்பாக நடைபெறும். மாடுங்காவில் வரதா பாய் தரப்பினர், கணேசர் கோவிலில் ஆதிதிராவிடர்கள், ட்ரான்சிட் கேம்பில் நாடார்கள், கல்யாணிவாடியில் முக்குலத்தோர் என வெகு விமரிசையாக் கணபதி விழா நடக்கும். 'இந்த உப்பளத்தின் ஒலிப்புலத்திலும் இயேசு முளைக்கிறார்; ஏற்பாடு ஜெபிக்கிறார். 'இந்த உப்பளத்தின் ஒலிப்புலத்திலும் அல்லா முளைக்கிறார்; அருளாளர் ஆகிறார்'. கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ், இஸ்லாமியர்களின் ரம்ஜான் என எல்லா மதப்பண்டிகைகளும் அங்கு களைகட்டும். ஆனால், இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு விழா கொண்டுவதற்கான வாய்ப்பே அங்கு அமையவில்லை.

இங்கே சாமிகள் எல்லாம் அந்தந்த மதங்களுக்கானது. அங்கு தானாக முளைத்த ஒன்று என்றால் அது ரௌடிசம். நாங்கள்தான் உங்களுக்குப் பாதுகாப்பு என்றுகூறி அவர்களது சுயநலத்திற்காகச் சாதிய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மக்களைத் தனிமைப்படுத்தும் வேலைகளும் அங்கு நடந்தன.

==========================================================================

கொஞ்சம் கவிதை வரிகளை மட்டும் தவிர்த்து, கட்டுரையில் இடம்பெற்றிருந்த கருத்துரைகளை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறேன்.

'நக்கீரன்' இதழுக்கு நம் நன்றி.

https://www.nakkheeran.in/360-news/thodargal/aaravayal-periyaiya-dharavi-story-series-3

Published on 27/05/2021 (15:15) | Edited on 18/06/2021 (10:01)


 

வியாழன், 21 அக்டோபர், 2021

அலாதியானதொரு கேள்வியும் அதி சுவாரசியமான பதிலும்!!!

'பெயர் வெளியிட விரும்பாதவர்' ஒருவர், https://ta.quora.com/ வில் கீழ்க்காணும் வகையிலான ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். கேள்வியே சுவாரசியமானதுதான். அதற்குப் 'பெயர் சொல்ல விரும்பாத இன்னொருவர்' அளித்த பதில் அதனினும் சுவாரசியம்.

பதிலில் எந்த அளவுக்கு 'நம்பகத்தன்மை' உள்ளது என்பதை ஆராய்ந்து சிரமப்பட வேண்டாம். சும்மா படித்துச் சுவைத்து இன்புற்று மகிழுங்கள்.

                                                    *  *  *

கேள்வி:

"என்றாவது ஒருநாள் நிச்சயம் பயன்படும்" என நீங்கள் நினைக்கும் சில தந்திரங்களைப் பகிர முடியுமா?

[நன்றி: quora.com]

பதில்:

'பெண்களுக்கு பின்னங்கழுத்தில் நாவால் வருடி அழுத்தி முத்தம் கொடுப்பது மிகவும் பிடிக்கும்.

உதட்டு முத்தத்தைவிட, கழுத்து முத்தத்தினை அதிகம் விரும்புவார்கள் பெண்கள்.

விரல் விளையாட்டு தெரியுமோ தெரியாதோ, நா விளையாட்டை நன்கு விளையாடுங்கள்.

69[!!!] அலாதியான இன்பம்.

அதனினும் இன்பம் அவள் பாதத்தின் விரல்களைச் சுவைப்பது.

மெய்யோ பொய்யோ அவள் உங்களிடம் அடிபணிவதற்கு, அவளைப் புகழோ புகழென்று புகழுங்கள்.

ஒரு பெண் உங்களை விரும்பிட, பண பலத்தைவிடவும் மன பலத்தைக் காட்டுங்கள்.

பெண்ணின் உடல் முழுவதும் உணர்ச்சி நரம்புகள் கொட்டிக்கிடக்குது. ஒவ்வொன்றாகத் தூண்டுங்கள்.

==========================================================================

https://ta.quora.com/   -அக். 15, 2021

 

புதன், 20 அக்டோபர், 2021

அரை மணி 'சூரிய ஒளி'க் குளியல் ஆண்மையை அதிகரிக்கும்![அண்மைச் செய்தி]

'சூரிய ஒளியில் உள்ள 'வைட்டமின் டி' சத்து ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரித்து ஆண்மைக் குறைபாட்டை நீக்கும்.'

ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று உடற்கூறு ஆய்வு நிறுவனங்களின் அண்மைக்கால ஆய்வுகள் இதை உறுதி செய்திருக்கின்றன. அவையாவன:  

1.டென்மார்க் பல்கலைக் கழக ஆய்வு மையம்.

2.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம்.

3.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையம்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் 'வைட்டமின் டி' குறைவதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

குழந்தைப் பேரின்மையால் தவித்தவர்களுக்கு 'வைட்டமின் டி' சத்தினை அளித்ததன் மூலம் அவர்களுக்கு மலடுத்தன்மை நீங்கியது தெரியவந்ததாகவும், 'வைட்டமின் டி' ஆனது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு கால்சியத்தின் அளவையும் விந்தணுவில் அதிகரித்ததாகவும், சூரிய ஒளிக்குளியல் போட்டதால் 35 சதவிகிதத் தம்பதியரின் குழந்தையின்மைச் சிக்கல் தீர்ந்துள்ளதாகவும் இவர்கள் சொல்கிறார்கள்.

இரண்டு மாதங்கள் 300க்கும் மேற்பட்ட இளைஞர்களை வெயிலில் காயவிட்டதில் அவர்களின் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாம்.

ஆண்மைச் சுரப்பைத் தூண்டுவதற்கு 'வைட்டமின் டி' அதிக அளவில் தேவைப்படுகிறது. 'வைட்டமின் டி' சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. 

எனவே, உண்ணும் உணவாகட்டும், மருந்து முதலான ஏனைய பொருள்களாகட்டும், தொலைபேசியில் தகவல் அனுப்பி வாங்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, காலார வெய்யிலில் நடந்துசென்று வாங்கிவருவது நல்லது. 

எனவே 'விந்தணு வலு' இழந்தவர்கள் இனி சூரிய ஒளியில் நடந்தோ, குளியல் போட்டோ 'வைட்டமின் டி' பெற்று, ஆண்மையைப் பெருக்கி, பாலுறவுச் சுகத்தைப் பன்மடங்கு அதிகரித்துப் பரவசம் காண்பார்களாக!

வயதான நான்கூட['பசி'பரமசிவம்] தினமும் அரை மணிக்கும் மேலாக சூரிய ஒளியில் ஆனந்தக் குளியல் போடுகிறேன். நோக்கம்?

பெருமளவில் கால்சியத்தைப் பெற்று, எலும்புகளில் வலிமை சேர்ப்பதற்காக[மட்டுமே]! ஹி... ஹி... ஹி!!!

==========================================================================

https://tamil.boldsky.com/health/wellness/2012/vitamin-d-linked-sperm-quality-aid0174.html   -January 23, 2012, 15:45 [IST] 

செவ்வாய், 19 அக்டோபர், 2021

"அங்கே வேண்டாம்; இங்கே வந்து அழு!"... அழைக்கிறது 'ஸ்பெயின்' அரசு!!!

லையில்லாத துயரத்துக்கு நாம் ஆளாகும்போது, வேறு யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காகக் கண்ணீரைக்கூட மறைக்க வேண்டிய இக்கட்டான ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். உலகின் எந்தவொரு நாட்டு மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல, 'ஐரோப்பிய நாடுகளின் ஒன்றான 'ஸ்பெயின் உட்பட.

வாய்விட்டு அழுதால் ஓரளவுக்கேனும் துயர் தணியும் என்பார்கள். அதற்கான சூழல் எல்லோருக்குமே வாய்ப்பதில்லை என்பதே மிகப் பெரிய துயரம்.

இந்தத் துயரம் 'ஸ்பெயின் நாட்டு மக்களைப் பெருமளவில் பாதித்திருப்பதாகத் தெரிகிறது.

ஸ்பெயினில், மன அழுத்தம் காரணமாக, தற்கொலைகள் அதிகரித்துவருகிறது. இதனைத் தடுக்க அரசும், தன்னார்வ அமைப்புகளும் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன. 

ஸ்பெயின் அரசு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும், 3 ஆயிரத்து 671 பேர் தற்கொலை காரணமாக உயிரிழந்துள்ளனர். 10 இளைஞர்களில் ஒருவர் மனநலப் பிரச்னையுடன் இருப்பதாகவும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5.8 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அவல நிலையை அகற்றி, மக்களின் மனநலனைப் பாதுகாக்க ஸ்பெயின் நாட்டில் 'அழுகை' அறை என்னும் ‘Crying Room’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் 'மேட்ரிட்' நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அழுகை அறைக்கு மக்கள் வருகை தந்து தாங்கள் யாரிடம் மனம் விட்டு அழ வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழுது துயர் தணியலாம்.

உளவியல் நிபுணர்களிடம் தங்கள் மனதில் உள்ளவற்றை கொட்டித் தீர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனம் விட்டுப் பேச ஆள் இல்லையே என்ற ஏக்கம் மக்களை உளவியல் ரீதியாகப் பாதிப்பதால் உளவியல் நிபுணர்கள் இணைந்து இந்த அழுகை அறையை அறிமுகம் செய்துள்ளனர்.

உலக மனநல தினமான அக்டோபர் 10ஆம் தேதியன்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், மனநலம் சார்ந்த விழிப்புணர்வுக்காகச் சுமார் 116 மில்லியன் டாலர் தொகையைத் தனியாக ஒதுக்கியுள்ளார்.

மேலும், “மன அழுத்தம் என்பது பேசவோ, விவாதிக்கவோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல. இது ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சனை. இதுகுறித்துப் பேசி இதை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றி, மன அழுத்தத்தைப் போக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அழுகை அறைக்குச் சென்று, மனதில் உள்ள கோபம், எரிச்சல், ஏமாற்றம், தனிமைத் துன்பம் உள்ளிட்ட அனைத்து இறுக்கமான உணர்ச்சிகளையும் பேசி அவற்றிற்கான தீர்வுகளைப் பெறலாம்.

24 மணி நேரமும் தற்கொலைத் தடுப்பு உதவிச் சேவை மையமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த அழுகை அறையில், 'பாத் டப்' போன்ற ஒன்றில் வண்ணநிறப் பந்துகள் நிரப்பப்பட்டுள்ளன. அழுகை அறைக்கு வருபவர் அதன்மீது அமர்ந்து அருகில் உள்ள தொலைபேசியை எடுத்துத் தனக்குப் பிடித்தவர்களிடம் மனம்விட்டு பேசலாம்.

'மனநலம் சார்ந்த பிரச்சனைகளை இவ்வாறு காட்சிப்படுத்துவது என்பது உண்மையில் அருமையான யோசனை. ஏராளமான நாடுகளில் அழுவது என்பது ஏதோ தவறான செயல் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனை முதலில் சரி செய்ய வேண்டும். மக்களின் மன நலனைப் பாதுகாக்க ஸ்பெயின் அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்தது போல மற்ற நாடுகளும் செய்தால் சிறப்பாக இருக்கும்' என்றெல்லாம் இணையப் பயனர்கள் கருத்துரை வழ்ங்கியிருக்கிறார்கள்.

==========================================================================

நன்றி:

https://tamilmint.com/spain-government-introduces-crying-room-to-get-rid-of-frustration-and-depression/     -18/10/2021035

தமிழ் இணைய ஊடகங்கள் உட்பட, ஏராள ஊடகங்கள் இச்செய்தியைப் பதிவு செய்துள்ளன.

திங்கள், 18 அக்டோபர், 2021

காமத்தில் கலக்கும் போதையும் காணாமல் போகும் ரத்தப்பாசமும்!!!


'போதையில் பெற்ற மகளை வன்புணர்வு செய்த தந்தை கைது.'

'குடித்துவிட்டுப் பெற்ற தாயைப் பலாத்காரம் செய்து அடித்துக் கொன்ற மகனின் வெறிச்செயல்.'

நம்மைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இவ்வாறான செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகின்றன. 

நீண்ட நெடுங்காலமாகவே நம் முன்னோர்களிடம் இந்தக் 'குடிப்பழக்கம்' இருந்திருக்கிறது. ஆனால், ஈன்றெடுத்த மகளிடமோ, பெற்றெடுத்த தாயிடமோ தகாத உறவு கொண்டதாக அறியப்படவில்லை.

இந்த ஈனச்செயலில் சில மனித மிருகங்கள் ஈடுபடுவது அண்மைக்கால நிகழ்வுகள்தான்.

இது குறித்த செய்திகளைக் கூர்ந்து நோக்கினால், 'மதுபோதை' தலைக்கேறிய நிலையிலேயே  இதில் இவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை அறியலாம்.

பல்வேறு குற்றச் செயல்களுக்கான முக்கியக் காரணங்களுள் 'காமம்' குறிப்பிடத்தக்க ஒன்று. எத்தனையெத்தனை உத்திகளையும் உபாயங்களையும் மனிதர்கள் கையாண்டும்கூட, அதை முழுக்க முழுக்கத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலாததோடு, அதனோடு தொடர்புடைய குற்றங்களையும் குறைத்திட இயலவில்லை என்பது பெரும் கவலையில் ஆழ்த்தக்கூடியது.

குற்றங்கள் குறையவில்லை என்பதோடு அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, பொல்லாத காம உணர்வோடு அளவில்லாத போதை சேர்வது காரணமாக உள்ளது.

கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பலரும் குடித்துவிட்டே அவற்றில் ஈடுபடுகிறார்கள் என்பது நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் உண்மை.

இம்மாதிரியான குற்றங்கள் முற்றிலுமாய்த் தடுக்கப்பட வேண்டியவை எனினும், அது இயலாதபோது சகித்திக்கொள்வது சாத்தியமே. ஆனால்... ஆனால்... ஆனால்...

தாயையும் மகளையும் உடன்பிறப்புகளையும் களங்கப்படுத்தும் குற்றங்கள்[சிறுமிகளை வன்புணர்வு செய்தல் உட்பட்] சகித்துக்கொள்ளவே இயலாதவை.

இது தொடர்பான குற்றங்கள் இன்றளவில் 'அவ்வப்போது' நிகழ்வனவாக உள்ளன. இவை இனி 'எப்போதும் நிகழா' என்னும் நிலையை உருவாக்கத் தவறினால், எதிர்காலத்தில் இவை 'அடிக்கடி' நிகழும் பேராபத்து காத்திருக்கிறது என்பதை மறத்தல் கூடாது. மறந்தால், தாய்ப்பாசம், பெற்ற பிள்ளைப்பாசம் எல்லாம் மறக்கப்பட்டு, காலப்போக்கில் மனிதர்களில் கணிசமானவர்கள் மிருகங்களாக மாறுவார்கள்.

இதைத் தடுத்திட.....

மத்திய மாநில அரசுகள் இணைந்து, குடிப்பழக்கத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதோடு, அவற்றை நடைமுறைப்படுத்துவது அவசரத் தேவை ஆகும்.

                                                     *  *  *

அண்மைக் காலங்களில் இடம்பெற்ற இவ்வகை நிகழ்வுகளுக்கான ஆதாரங்களின் சிறு பட்டியல்:

***https://www.cafekk.com/national/news/man-who-sexually-assaulted-his-mother-sister-and-sister-in-law-killed-by-his-father  Published on November 20,2019 

'தூத்துக்குடி மாவட்டத்தில் எந்நேரமும் குடிபோதையில் மிதக்கும் கூலித் தொழிலாளி ஒருவர்,  அன்றாடம் குடித்துவிட்டு வீட்டில் சண்டை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.   வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் பெற்ற மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.  https://tamil.asianetnews.com/crime/father-arrest-in-pocso-act-regarding-sexual-harassment-own-daughter-q3ood3  -First Published Jan 6, 2020, 5:09 PM IST

***'மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர' ...https://www.dailymotion.com › video  -22 மே, 2018

***பெத்த புள்ளய ஒரு 'அப்பன்' செய்ற காரியமா இது?https://tamil.behindwoods.com › india › rajasthan-udaip...

14 ஜூலை, 2020 — 'அதைத் தொடர்ந்து, குடிபோதையில் இருந்த ... பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.'

***'மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த விஏஓ'https://www.toptamilnews.com › crime › cid4962680

20 ஏப்., 2019 — 'இதையடுத்து சரவணன் குடிபோதையில் தனது ... ஏமாற்றி வன்புணர்வு செய்த நபர்கள்?'

***'பெத்த புள்ளய ஒரு அப்பன் செய்ற காரியமா இது?' ...https://www.tamilyugam.in › இந்தியா

15 ஜூலை, 2020 — இந்நிலையில், அந்தப் பெண்ணின் கணவன் குடிபோதையில் மாமனார் வீட்டுக்கு சென்று ...

***சொந்த மகளை வெறித்தனமா கற்பழித்த தந்தை ...https://viralseithigal.com › ...

'கூலித்தொழிலாளி தினமும் குடிபோதையில், தன்னுடைய ... பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.'

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

அதென்ன, 'வாக்கிங் நிமோனியா'[Walking-Pneumonia]?!


*மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லாத, மிதமான பாதிப்பாக இருப்பது, 'வாக்கிங் நிமோனியா' எனப்படும். 

*'இது, வழக்கமான பாக்டீரியா தொற்றால் நுரையீரலில் ஏற்படும் தீவிரமான நிமோனியா அல்ல' என்பது ஆறுதல் பெறத்தக்கது{Walking pneumonia is how some people describe a mild case of pneumonia. Your doctor might call it “atypical pneumonia” because it’s not like more serious cases[https://www.webmd.com/lung/walking-pneumonia]}

*இது சுற்றுப்புறத்தில் உள்ள வீரியம் குறைந்த பாக்டீரியா, வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது.

*இது புதுசு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ், புளூ தொற்றால் 'வாக்கிங் நிமோனியா' உருவானது என்பது அறியத்தக்கது. 

*அறிகுறி:

70 - 96 மணி நேரம்வரை இடைவிடாத காய்ச்சல், இருமல் இதன் அறிகுறிகள். இவை தவிர சுவாசிப்பதில் சிரமம், மூச்சிரைப்பு போன்றவையும் வரலாம். சிலருக்கு மார்புப் பகுதியில் வலி இருக்கும்; மூச்சை உள்ளிழுக்கையில் இந்த வலி அதிகமாகும். வாக்கிங் நிமோனியா பாதிப்பு ஏற்பட்ட 85 சதவீதம் பேருக்குக் காய்ச்சல், இருமல் ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.

மீதி 15 சதவீதம் பேருக்கு எக்ஸ்ரே சோதனையில் நிமோனியா பாதிப்பு தெரியும்; ஆனால் காய்ச்சல், இருமல் இருக்காது. பசியின்மை, குமட்டல், குளிர், நடுக்கம், ரத்த அழுத்தம் குறைவது போன்ற எந்தத் தொற்று வந்தாலும் ஏற்படும் அறிகுறிகள் இதிலும் இருக்கலாம். 

*'வைரஸ்'இன் கைங்கரியம்!

வாக்கிங் நிமோனியா பாதிப்பை ஏற்படுத்துவதில், வைரஸ் முக்கியக் காரணியாக உள்ளது.

*யாரையெல்லாம் பாதிக்கும்?

இந்த வைரஸ் கிருமிகள் 2 வயதிற்குக் குறைந்த குழந்தைகளையும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களையும் அதிகம் பாதிக்கிறது. 

*காரணம்:

நீண்ட காலமாக இருக்கும் சர்க்கரைக் கோளாறு, சீறுநீரகக் கோளாறுகள், ஆர்த்ரடிஸ் போன்றவற்றுக்குத் தொடர்ந்து தரப்படும் ஸ்டிராய்டு மாத்திரைகளால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து 'வாக்கிங் நிமோனியா' உண்டாகலாம்.

*சிகிச்சை:

வைரசால் ஏற்படும் இப்பிரச்னைக்கு, 'ஆன்டி வைரல்' மருந்துகள் உள்ளன. ஆன்டி பயாடிக் மருந்துகள் எந்த விதத்திலும் பலன் தராது. மருந்துகளுடன் நிறையத் திரவ ஆகாரமும், ஓய்வும் இருந்தால் போதும்.

*தகவல் உதவி:

டாக்டர் சுரேஷ் ராமசுப்பன், நுரையீரல், சுவாசக் கோளாறுகள் மருத்துவ ஆலோசகர், அப்பல்லோ மருத்துவமனைக் குழுமம்.

==========================================================================

நன்றி:

https://m.dailyhunt.in/news/india/tamil/dinamalar-epaper-dinamalar/vakking+nimoniya+enbathu+enna-newsid-n324602482   

-  Sunday, 17 Oct, 4.11 pm

சனி, 16 அக்டோபர், 2021

போற்றுதலுக்குரிய இங்கிலாந்து இளவரசரும் பரிதாபத்துக்குரிய 'பசி'பரமசிவமும்!!!


'அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களான ஜெஃப் பேசாஸ், எலான் மஸ்க், ரிச்சர்டு பிரான்சன் உள்ளிட்டோர் விண்வெளிக்குச் சுற்றுலாச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறார்கள். மேலும், விண்வெளிச் சுற்றுலாவை வர்த்தக ரீதியில் மேம்படுத்துவதற்கான கடும் போட்டியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்.....

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "விண்வெளிச் சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, பூமியை மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்ற முறையில் மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்" என்று கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன[https://reader.magzter.com/reader/q7sxklnjxjtd4718gntaa76985117074396/769851#page/1].

இளவரசரின், விஞ்ஞானிகளுக்கான இந்த 'அறிவுறுத்தல்' பெரும் வரவேற்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அறியப்படுகிறது.

இது போன்றதொரு அறிவுறுத்தலை, அல்ல, வேண்டுகோளை  முன்வைத்து அடியேன் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:

//மனிதர்களைச் சனி, சந்திரன், செவ்வாய் என்று பிற கோள்களில் குடியேற்றுவதற்கான முயற்சியில் அயராது ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளே, 

உங்களின் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று, அயல் கிரகங்களில் மனிதர்களைக் குடியேற்றுவது சாத்தியமானால்.....

மக்களோடு கலந்து, கடவுள், ஆன்மா, பேய், பூதம், பிசாசு, சொர்க்கம், நரகம் என்றெல்லாம் கற்பனைக் கதைகளைப் பரப்பிப் பிழைப்பு நடத்துகிற போலி ஆன்மிகவாதிகளும் அங்கே குடியேறுவார்கள்; சிந்திக்கத் தெரியாத மக்களைச் சீரழிக்கும் கைங்கரியத்தை அங்கேயும் தொடர்வார்கள்.

அழகழகாய்த் தாடி மீசை வளர்த்து, புரியாத தத்துவம் பேசி, அப்பாவி மக்களைப் பித்தர்கள் ஆக்கி, ஆடிக் கார்களிலும் கோடி கோடி கோடி விலை மதிப்புள்ள ஹெலிக்காப்டர்களிலும் இங்குப் பவனி வரும்  நித்தியானந்தாக்களும் 'சத்'யானந்தாக்களும் அங்கே சென்ற பின்னரும் தாம் செய்யும் பித்தலாட்டங்களைக் கைவிடமாட்டார்கள்.

பொய் வாக்குறுதிகளை வாரி வழங்கிப் பதவி பெற்றுக் கோடி கோடியாய்ச் கொள்ளையடிக்கத் தெரிந்த கில்லாடிகள் அங்குச் சென்றாலும் நல்லவர்களாய் மாறப்போவதில்லை.

'போதும்' என்னும் மனம் இல்லாமல், "இன்னும் வேணும்...இன்னும் வேணும்" என்று வயாக்கராக்களையும் லேகியங்களையும் தேடி அலையும் காமாந்தகர் கூட்டம் அயல் கிரகத்திலும் திருந்தப்போவதில்லை.

ஆகவே விஞ்ஞானிகளே,

இவர்களையெல்லாம் திருத்துவதற்கு எவை எவை தேவையோ அவையவைகளை எல்லாம் கண்டுபிடித்து ஒட்டுமொத்த மனித இனத்தையும் முதலில் திருத்த முயலுங்கள்.

'அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலமாக, மனித உடலைத் திருத்தலாம்; மனித மனங்களைத் திருத்திட வழியே இல்லை' என்பது உங்களின் பதிலாக இருக்குமேயானால்.....

பொறுத்திருங்கள்; மனிதர்கள் பட்டுத் திருந்தும்வரை காத்திருங்கள்.

திருந்தினால் மட்டுமே அயல் கிரகம் செல்லுவதற்கான ஆராய்ச்சிகளைத் தொடரலாம்.

இவர்கள் திருந்துவது சாத்தியமே இல்லையென்றால், அங்கெல்லாம் மனிதர்களைக் குடியேற்றுவதற்கான ஆய்வுகளை அறவே கைவிடுங்கள். 

தயக்கத்திற்கு இடம் தர வேண்டாம்.

இந்த மனிதர்களால் மண்ணுலகம் அசுத்தமடைந்தது போதும். மற்ற உலகங்களாவது மாசுபடாமலே இருக்கட்டும்.//[மண்ணுலக விஞ்ஞானிகளுக்கு ஒரு சராசரி மனிதனின் கோரிக்கை!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_12.html]

                                                   *  *  *

இங்கிலாந்து இளவரசர் உலகோரால் நன்கு அறியப்பட்டவர் என்பதால், விஞ்ஞானிகளுக்கு அவர் சொன்ன அறிவுரையை ஊடகங்கள் பலவும் செய்தியாக வெளியிட்டுள்ளன. அடியேன் 'சாமானியன்' என்பதால் என் அறிவுறுத்தலை எந்தவொரு ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

'பசி'பரமசிவமாகிய என்னுடைய இந்தப் பதிவை வாசித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

39[முப்பத்தொன்பது] மட்டுமே! ஹி... ஹி... ஹி!!!

================================================================


வெள்ளி, 15 அக்டோபர், 2021

'Antechinus' சுண்டெலியின் பாலுறவுச் சாதனையும் பரிதாப மரணமும்!!!


காமம் கொள்ளுதலும், ஆணும் பெண்ணுமாய்க் கூடிக் களித்தலும் மனித இனத்துக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பொதுவானது.

கூடல் சுகத்திற்குப் பின்னர், கூடுதலாகவோ குறைவாகவோ ஓர் இடைவெளிக்குப் பின்னரே  மீண்டும் இணைந்து இன்பம் துய்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன மிக மிகப் பெரும்பாலான உயிரினங்கள்.

சிறு சிறு இடவெளிகளில் ஊணுறக்கமின்றி மீண்டும் மீண்டும் மீண்டும் பாலுறவு சுகம் அனுபவித்து முடிவில் மரணத்தைத் தழுவும் ஓர் உயிரினம் உண்டென்றால் நம்ப முடிகிறதா?

நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆன்டெச்சினஸ்[Antechinus mouse] சுண்டெலி எனப்படும் ஓர் உயிரினம் அவுஸ்திரேலியாவின் நியூகினியா, டஸ்மேனியா ஆகிய இடங்களில் காணப்படுகிறதாம்.

ஆண் சுண்டெலி, பிறந்து 11 மாதங்களாகும்போது பாலியல் ரீதியாகப் பருவமடைகிறது. அப்பொழுது அதற்கான பாலியல் ஹோர்மோன்கள் சுரக்கின்றன. 

புணர்ச்சி வேட்கை அரும்பிப் பெருக்கெடுத்து உச்சநிலையை அடையும்போது  பெண் சுண்டெலியைத் தேடி இரவெல்லாம் அது  அலையும். 

துணை கிடைத்துவிட்டால், பாலியல் செயல்பாடு ஒரு நாளில் 12 மணி அளவுக்கு நீடிக்கும். இந்தச் செயல்பாடு ஒரு நாளுடன் முடிந்துவிடுவதில்லை. ஊணும் உறக்கமும் இன்றி, ஏன், நீர் அருந்துவதுகூட இல்லாமல் 4 நாட்கள்வரை தொடருமாம்.

நான்கு நாட்களுமே புணர்ச்சி புணர்ச்சி புணர்ச்சி மட்டுமே. விளைவு.....

படிப்படியாக உடல் வலிமை குன்றிய நிலையில் ஆண் எலி கட்டாந்தரையில் சரிந்து விழும்; மரணத்தைத் தழுவும்.

மரணத்தைத் தழுவுவோம் என்பதைக்கூட அறிந்துணர இடந்தராத வெறித்தனமான வேட்கை இந்த அற்ப ஆன்டெச்சினஸ்[Antechinus mouse] சுண்டெலி இனத்துக்கு மட்டும் வாய்த்தது ஏன் என்கிறீர்களா?

யாருக்குத் தெரியும்?

அவன்[கடவுள்] அன்றி வேறு யாரறிவார்?! ஹி... ஹி... ஹி!!!

==========================================================================நன்றி: https://hainalama.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/


வியாழன், 14 அக்டோபர், 2021

வேண்டாம் 'முற்றுப்புள்ளி! 'அது' வேண்டவே வேண்டாம்!!

ருந்துகொண்டிருக்கிற, அணுக்களால் ஆன அனைத்துப் பொருள்களும் அழிந்துகொண்டிருக்க, புதியன தோன்றிக்கொண்டே இருக்கின்றன. கோடானுகோடி உயிர்களின் நிலையும் இதுவே.

இது அறிவியல் கண்டறிந்த உண்மை.

இவற்றின் தோற்றத்திற்கான 'மூலம்' எது?

இன்றளவும் இக்கேள்விக்கான விடையை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிய இயலவில்லை.

'தோற்றம்' குறித்த உண்மை இதுவாக இருக்க, 'பொருள்களையும், உயிர்களையும் கடவுள் படைத்தார்; அவற்றை இயக்குபவரும் அவரே. அவர் மட்டுமே மாற்றங்களுக்கும் அழிவுக்கும் உள்ளாகாதவர்; என்றென்றும் இருந்துகொண்டே இருப்பவர்' என்று நம் முன்னோர்களில் சிலர் இந்தக் கேள்விக்கு விடை சொல்லிச்சென்றார்கள்; பலர் இதை நம்பினார்கள்; இன்றளவும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையிலுள்ள அனைத்துப் பொருள்களும் அழிவையும் மாற்றங்களையும் சந்தித்துக்கொண்டிருக்க, இவற்றிற்கு விதிவிலக்காகக் 'கடவுள்' என்று ஒருவர் மட்டும் அழிவில்லாமல் என்றென்றும் இருந்துகொண்டே இருக்கிறார் என்பது  எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல; இன்றளவும் நிரூபிக்கப்படாததும்கூட.

இவ்வாறு, இல்லாத ஒருவரை இருப்பதாக நம்பிக்கொண்டு, 'தோற்றம்' குறித்த முற்றுப் பெறாத தொடர் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகப் பெரிய 'தவறு' ஆகும்.

இந்த முற்றுப்புள்ளி, மனித இனத்தின் அறிவு வளர்ச்சியைத் தடுத்திடும் மிக மிக மிகப் பெரும் தடைக்கல் எனின், அதில் தவறேதும் இல்லை.

==========================================================================

புதன், 13 அக்டோபர், 2021

நெஞ்சைப் பதறவைக்கும் பெண்ணினப் படுகொலைகள்!!!


பலவந்தப்படுத்துதல், படுகொலை செய்தல் என்று பெண்களுக்கு அடுக்கடுக்காய் இழைக்கப்பட்ட அநீதிகள் ஏராளமாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன.

அவற்றில் பலவற்றிற்கு எழுத்தாளர்கள் கட்டுரை வடிவம் தந்திருக்கிறார்கள். அவ்வகையிலான கட்டுரைகளில் கணிசமானவற்றை 'ஆனந்த விகடன்' தொகுத்திருக்கிறது. அவற்றிலிருந்து மிகச் சிறியதொரு பகுதியை இங்கே பகிர்ந்திருக்கிறேன். கீழே உள்ள முகவரியைச் சொடுக்கி முழுத் தொகுப்பையும் நீங்கள் படிக்கலாம்.

விகடனுக்கு நன்றி.

                                                  *  *  *

*வேணாட்டு அரசன் ஒருவன், 'வலங்கை'ச் சாதிப் பிரிவு வெங்கலராசனின் மகளை விரும்பி, பெண் கேட்டபோது வெங்கலராசன் மறுத்தான். அதனால், போர் வந்தது.  வெங்கலராசன் தன் கோட்டையைப் பாதுகாக்க நினைத்து, மகளின் தலையைப் போர் தொடுத்த அரசன் முன் எறிந்தான். 

*பூலங்கொண்டாளின் தந்தை, தன் சாதி உட்பிரிவைச் சார்ந்த ஒருவன் பெண்கேட்டு வந்தபோது மறுத்தான்.  அதனால் ஏற்பட்ட பூசலால், பூலங்கொண்டாள் கிணற்றில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தாள்.

*தென்மாவட்டங்களில், குறிப்பாகத் திருவனந்தபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழ்கின்ற ‘செட்டு’ சமூகத்தினர் பூம்புகாரிலிருந்து தாங்கள் குடி பெயர்ந்ததற்குக் காரணமாக, சோழன் தங்களிடம் பெண்கேட்டு மறுத்த காரணத்தைக் கூறுகின்றனர். மணமறுப்பால் அப்போது கொல்லப்பட்ட பெண் இப்போது வழிபாடு பெறுகிறாள். கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலின் மையமே இதுதான்.

*குறுநில மன்னர்கள் மட்டுமல்ல, போர்த்துக்கீசிய படைத் தலைவர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சில சாதியினரிடம் வழிபாடுபெறும் பாலாம்பாள் என்ற தெய்வம் ஒரு சான்று. இவள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவள். வரி வசூலிக்கும் பொறுப்பிலிருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரி, குதிரையில் வந்து பாலாம்பாளின் ஏழு அண்ணன்மார்களிடம் பெண் கேட்டான். அவர்களுக்கு விருப்பமில்லை. அதிகாரியிடம் சொல்வதற்குப் பயம். அதனால், பாலாம்பாளை ஆழக் குழியில் தள்ளி, மூடிக் கொன்றுவிட்டார்கள். இப்போது அவள் தெய்வம். சிலர் பெண் கேட்டவனை அவமானப்படுத்த, பெட்டை நாயை அவனிடம் அனுப்பிவிட்டு, மகளைக் கொன்றனர். இப்படியாக நடந்த கொலைகளைத் தனிப்பட்டவர்களின் குடும்பத்தினர் மட்டும் செய்யவில்லை, அந்தச் சாதியினரின் ஒத்துழைப்புடனேயே அவை நடந்தன.

*நாயக்க அரசு தமிழகத்தில் ஆட்சி செய்தபோது, நிர்வாக வசதிக்காகப் பாளையப்பட்டு முறை உருவானது. இதன் தலைவர்களான ஜமீன்தார்கள், இவர்களின் அதிகாரிகள் சிலரின் வக்கிரத்தாலும் பெண் தெய்வங்கள் உருவாகியிருக்கின்றன.

*கிராமத்தின் அழகான சிறுமிகள் பருவமடைந்த செய்தி, அப்பகுதி ஜமீன்தாருக்கோ, அவரைச் சார்ந்த  பெரிய மனிதர்களுக்கோ போய்விடும். இந்தச் செய்திகளைச் சொல்வதற்கு என்று வயதான பெண்கள் இருந்தார்கள். இவர்கள் அந்தச் சிறுமிகளை வெட்டவெளிக் கழிப்பிடத்தில் இருக்கும்போது நோட்டமிடுவார்கள். அவர்களின் உடல்வாகு வக்கிரத்தைத் தாங்கும் என்பதையும் அறிந்துகொள்வார்கள். இதன் பிறகு, எதாவது ஒருநாள் அதிகாரப் பூர்வமாகவோ, சூழ்ச்சியாகவோ அவர்கள் கடத்தப்படுவார்கள். 

*திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், ஊர்த் தலைவனுக்கு முதலில் விருந்தாக வேண்டும் என்ற வழக்கமும் இருந்தது. இதற்கெல்லாம் மறுத்த சிறுமிகள் கொலை செய்யப்பட்டனர்; பலாத்காரத்தாலும் இறந்தனர்.

==========================================================================

நன்றி:  https://www.vikatan.com/government-and-politics/politics/138933-the-reached-of-women-on-different-works

செவ்வாய், 12 அக்டோபர், 2021

பிரெஞ்சுக்காரர்களின் நிர்வாண மோகம்!!!

பிரான்ஸ் நாடு பல நிர்வாணக் கடற்கரைகளையும், நிர்வாண விடுதிகளையும் கொண்டிருக்கிறது. அங்கே ஒரு நிர்வாணப் பொது நீச்சல் குளமும் உள்ளது. நிர்வாண விரும்பிகள், அந்த மாதிரி விடுதிகளில் தங்கிக் குதூகளிப்பதும், வாரத்திற்கு மூன்று முறை அவ்வகைக் குளங்களில் நிர்வாணமாக நீந்திப் பரவசப்படுவதும் நடைமுறையில் உள்ளதாம்.

இந்நிலையில், நிர்வாண விரும்பிகளுக்காக, பாரிஸ் நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் 'போயிஸ் டி வின்சென்ஸ்' என்ற இடத்தில், கால்பந்து மைதான அளவிற்கு ஒரு நிர்வாணப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. 

முகம் சுளிப்பவர்களுக்கு ஒரு நிர்வாண விரும்பி அறிவுறுத்துவது.....

"நிர்வாணத்தைப் பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது.

"இது உண்மையான ஆனந்தம். நிர்வாண விரும்பிகளுக்கு இது இன்னுமொரு சுதந்திரம்" என்று பாரிஸ் நிர்வாண விரும்பிகள் சங்கத்தை[நம் நாட்டில் இது மாதிரியான சங்கம் தொடங்குவது எப்போதோ?!]ச் சேர்ந்த 'ஜூலியன் க்ளாட்-பெனெக்ரி' ஏஃப்பி[?] செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

"இது இயற்கையை மதித்து அதற்கு மரியாத செலுத்தும் செயல்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.

"பொது இடங்களைப் பயன்படுத்துவதில், எங்கள் திறந்த மனதுடைய பார்வையின் ஒரு பகுதியே இது" என்று பூங்காக்களை நிர்வகிக்கும் துணை மேயர் 'பெனிலோப் கோமிட்ஸ்' என்பவர் கூறியுள்ளார்.

"இந்தப் பூங்காவில் வேண்டுமென்றே பாலுறுப்புகளை வெளிப்படுத்துவது, மற்றவர்களின் நிர்வாணத்தைப் பார்த்துக் களிப்படைவது போன்றவற்றைச் சகித்துக்கொள்ள முடியாது" என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளார்களாம்.

பிரான்ஸ் போகிற போக்கைப் பார்த்தால், அங்கே நிர்வாண உடற்பயிற்சிக்கூடம், நிர்வாணக் கல்வி நிலையங்கள்[இருபாலருக்கானவை உட்பட], நிர்வாண மருத்துவமனைகள் எல்லாம் திறக்கப்படக்கூடும் என்பது அடியேனின் அனுமானம்.

நிர்வாண விரும்பிகளுக்கானமேற்கண்ட ஏற்பாடுகளுக்கு விமர்சனங்களும் எழுந்தன. ஓர் அரசியல்வாதி, "எல்லாம் பைத்தியக்காரத்தனம்" என்று விமர்சித்தாராம்.

இவர் மாதிரியான பத்தாம்பசலி அரசியல்வாதிகள் பிரான்சில் ஆட்சிபீடம் ஏறினால், மேற்கண்ட நிர்வாண விடுதிகள், நிர்வாண நீச்சல் குளங்கள், நிர்வாணப் பூங்கா என்று அனைத்திற்கும் தடை விதிப்பார்கள். 

ஆகவே, நிர்வாண மனிதர்களையும், 'மனிதி'களையும் நேரில் கண்டு ரசித்து இன்புற விரும்புகிறவர்கள் இப்போதே ஃபிரான்சுக்குப் பயணம் மேற்கொள்வது நல்லது!

==========================================================================

 https://www.bbc.com/tamil/global-41114153       

திங்கள், 11 அக்டோபர், 2021

உரசல் சுகம்!![பொழுதுபோக்கு]


குமுதம் இதழில் 33 ஆண்டுகளுக்கு [12.03.1987] முன்பு வெளியான பழைய கதை இது. ஆடவரின் பலவீனத்தை அச்சு அசலாய்ப் படம் பிடிப்பதால் இன்னும் 200 ஆண்டுகள் கழித்துப் படித்தாலும் படிப்பவர் இதழ்களில் புன்னகை மலரும்! 

ருணுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது.

“இந்த மாதிரிக் காட்டான்களெல்லாம் ஏன்தான் பஸ்ஸில் ஏறுகிறார்களோ? சே!” என்று முணுமுணுத்தான்.

அவன் அமர்ந்திருந்தது இருக்கையின் ஓரத்தில். நின்று பயணம் செய்பவர்கள் அவன் மீது சாய்வதும் இடிப்பதுமாக இருந்தார்கள். அவன் மிகவும் சங்கடப்பட்டான். இப்படி ஒருவர் மீது ஒருவர் இடிப்பதும் உரசுவதும் அவனுக்குக் கட்டோடு பிடிக்காது.

வேறு வழியில்லாமல் பொறுத்துக்கொண்டு கையில் இருந்த வார இதழில் மூழ்கினான். ஆனாலும், நிற்பவர்கள் சும்மா இருக்கவில்லை; அவனை ஒரு சுமை தாங்கியாகவே நினைத்துச் செயல்பட்டார்கள்.        

அவன் மூக்கருகில் ஏதோ ஒன்று உரசி, ‘கிச்சு...கிச்சு’ மூட்டியது! சமாளிக்க முடியாமல் இரண்டு மூன்று தும்மல்கூடப் போட்டுவிட்டான். ஆத்திரத்துடன் பக்கவாட்டில் கவனித்தபோது, ஒரு கிராமத்து ஆசாமி அவன் தோளின் மீது ஒய்யாரமாகச் சாய்ந்து நின்றுகொண்டிருந்தார்.

அவர் தோளில் கிடந்த துண்டு, காற்றில் பறந்து அவன் முகத்தில் உரசி மூக்கில் நமைச்சலை உண்டுபண்ணியது. அந்த நபரின் அசிங்கமான கோலத்தையும் அழுக்குத் துண்டையும் பார்த்தவனுக்கு வயிற்றைக் குமட்டியது.

தோளில் கிடக்கும் தனது துண்டு அருணுக்குத் தொந்தரவு தருகிறது என்பதையோ, அவனின் கனல் தெறிக்கும் கோபப் பார்வையையோ அந்த ஆசாமி உணர்ந்ததாகத் தெரியவில்லை.

வேறு வழியில்லாமல், “யோவ், இந்தத் துண்டைக் கொஞ்சம் மடிச்சித் தோளில் போடய்யா” என்று குரலில் அழுத்தம் கொடுத்துச் சொன்னான் அருண்.

அந்த ஆள், முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லாமல், துண்டை மடித்துத் தோளில் போட்டுக்கொண்டார்; சண்டைகிண்டையெல்லாம் போடவில்லை.

அருண், மீண்டும் வார இதழில் பார்வையை மேயவிட்டான். ஆனாலும், வண்டி குலுங்கிச் சாய்ந்து நிமிரும்போதெல்லாம் அவன் மீது விழுவதும் விலகுவதுமாக இருந்தார் அவர்.

பேருந்தில் கூட்டம் குறைய ஆரம்பித்தது. ஒரு சிலர் மட்டுமே நின்றுகொண்டிருந்தார்கள்.

அருண் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனாலும், அது நீடிக்கவில்லை.

மீண்டும் அவன் முகத்தில் துணியின் உரசல். அவன் கோபம் எல்லை கடந்தது.

அந்த ஆசாமியின் துண்டைப் பிடுங்கி வெளியே எறிந்துவிடுவது என்ற தீர்மானத்துடன் பக்கவாட்டில் பார்வையை ஓட்டினான்.

அவனுள் பொங்கி வழிந்த கோபம் முச்சூடும் அடங்கிப்போனது.

இப்போது அவன் முகத்தில் கிச்சுக்கிச்சு மூட்டிக் ‘கிளுகிளுப்பு’த் தந்துகொண்டிருந்தது ஓர் அழகிய இளம் பெண்ணின் முந்தானை!

“ஆஹா...ஆஹா...என்ன சுகம்!” -அவன் உள் மனசு சிலாகித்தது. உடம்பு சிலிர்த்தது! அந்த லொடலொடா அரசுப் பேருந்தில் சொர்க்கத்துக்குப் பயணம் போவதாக உணர்ந்தான்.

தான் பேருந்தைவிட்டு இறங்கும்வரை அவள் தன்னருகிலேயே நின்றுகொண்டிருக்க வேண்டும் என்று தனக்குத் தெரிந்த கடவுளையெல்லாம் வேண்டிக்கொண்டான் அருண்!!!

==========================================================================

கதையை நான் எழுதியதாகச் சொல்லிக்கொள்ளவே ஆசைப்பட்டேன். என் மனசாட்சி முரண்டு பிடித்ததால், கதையை[கொஞ்சம் மாற்றங்களுடன்] எழுதியவர் பெயரைக் கீழே தந்திருக்கிறேன்.

எழுதியவர்:                  ப.முருகேசன்.