எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 22 மே, 2025

படு ஆவேசமாகவும் அசட்டுத்தனமாகவும் பேசுவது பிரதமருக்கு அழகல்ல!!!

நம் பிரதமர் மோடியின், ‘பஹல்காம் தாக்குதல்’ குறித்த உணர்ச்சி பொங்கும் அதிரடி ஆவேச உரை கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது[தினத்தந்தி].

உரையினூடே நம் விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளன.

மிக மிக இக்கட்டான சூழல்களில் ஒரு நாட்டின் பிரதமருக்குத் தேவைகளான பொறுமையும், உணர்ச்சிவசப்படாமல் உரையாற்றும் மனப் பக்குவமும் மோடியிடம் இல்லவே இல்லை என்பதை இவரின் ஆவேசப் பேச்சு அம்பலப்படுத்தியிருக்கிறது.

நம்மைப் போன்ற சராசரிக் குடிமக்களால் இவரின் பேச்சை விமர்சிக்க மட்டுமே முடிகிற சூழலில், ஏறத்தாழ ஒரு சர்வாதியாகவே செயல்படும் இவரைத் திருத்த எவருமே இல்லையா என்பது நம் ஆதங்கம்.

வாசியுங்கள்.

//பஹல்காமில், மதம் என்ன என்று கேட்கப்பட்டு, நம்முடைய சகோதரிகளின் முன்நெற்றியில் இருந்த சிந்தூர் அழிக்கப்பட்டது. 140 கோடி இந்தியர்களும் அதன் வலியை உணர்ந்தனர்[உண்மை... உண்மை... உண்மையே].

அந்தப் பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்துபார்க்க முடியாத தண்டனை[அதென்ன கற்பனை செய்ய முடியாத தண்டனை?!] அளிக்க முடிவு செய்யப்பட்டது. 

முப்படைகளுக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டது. நம்முடைய படை வீரர்கள் தீர்க்கமுடன் செயல்பட்டார்கள். இதனால், பாகிஸ்தான் மண்டியிட்டது[அது இனி எப்போதும் எழுந்துநின்று இன்னொரு பஹல்காம் தாக்குதலை நடத்தவே நடத்தாதா? பாகிஸ்தானின் முழு முப்படைப் பலமும் மோடிக்குத் தெரியுமா?].

சிந்தூரம் அழிப்பதற்காகப் புறப்பட்டவர்கள்[வேறு காரணங்களே இல்லையா?] மண்ணில் புதைக்கப்பட்டனர்.

இந்தியர்களின் ரத்தத்தை மண்ணில் சிந்த வைத்தவர்களின் கணக்குகள் தீர்க்கப்பட்டுவிட்டன[100%?!].

இந்தியா அமைதியாக இருக்கும் என நினைத்தவர்கள், இன்று வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர்[இது நிரந்தரம் என்று நம்மவர் முடிவு செய்தது எப்படி?].

தங்களிடமிருந்த ஆயுதங்களை நினைத்துப் பெருமைகொண்டவர்கள், அதன் இடிபாடுகளில் புதைக்கப்பட்டு உள்ளனர்[மிச்சம் மீதி இல்லாமலா?] என ஆவேசத்துடன் பேசியுள்ளார்//.

https://www.dailythanthi.com/news/india/those-who-set-out-to-destroy-sindoor-were-buried-in-the-ground-pm-modis-passionate-speech-1159142 -மே 22, 2025.

* * * * *

#புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளுடனான மோதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டார். "நடந்து வரும் நடவடிக்கையின் போது, ​​கடுமையான துப்பாக்கிச் சண்டை தொடர்கிறது. துப்பாக்கிச் சண்டையில் நமது துணிச்சலான வீரர்களில் ஒருவர் பலத்த காயமடைந்தார், சிறந்த மருத்துவ முயற்சிகள் இருந்தபோதிலும் உயிரிழந்தார்" என்று வைட் நைட் கார்ப்ஸ் X இல் பதிவிட்டுள்ளது# -Soldier killed during encounter with terrorists in J&K's Kishtwar

இயற்கையின் கோர முகம்! இறைவனின் கொடூர நெஞ்சம்!!

ந்த உலகில் வாழ்ந்து மறைந்த ஞானிகள், மகான்கள், அவதாரங்கள், சீரிய சிந்தனையாளர்கள், அரிய உயரிய அறிவியலாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் என்போர் மிகப் பலர்.

இவர்களில் தப்பிப் பிழைத்தவர் எவருமே இல்லை.

“வெகு வெகு அற்ப மானிடப் பதராகிய  நாமும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என்னும் நிலையில், இறப்பை எண்ணி அஞ்சுவது அறிவீனம்” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி இந்தவொரு அச்சத்திலிருந்து முற்றிலுமாய் விடுபட முயற்சிக்கிறோம்.

ஆனால்.....

ஆண்டுகள் கழிந்து கழிந்து, வயது முதிர்ந்து முதிர்ந்து சாவை நோக்கிய நம் பயணம் தொடரும் நிலையில் மனமும் ஒட்டுமொத்த உடம்பும் கிடந்து தவிக்கிறதே! துடிக்கிறதே!!

வாழப் பணித்துச் சாவையும் பரிசாகக் கொடுத்த இயற்கை இத்தனைக் கோரமானதா? கடவுள் இருந்தால் இத்தனைக் கொடூரக் குணத்தவனா அவன்?!