எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

'யூடியூப்’இல் காணொலி... பலிக்காத என் பகற்கனவு!!!

‘யூடியூப்’இல் பெரிதும் சிறிதுமான[short, video] காணொலிகளை வெளியிட்டு, சிலரோ பலரோ லட்சக்கணக்கில்[கோடிக்கணக்கில்?] சம்பாதிப்பதாக அறிந்திருந்தேன்.

ஆயிரக்கணக்கிலாவது சம்பாதிக்க வேண்டும் என்பது என் பல நாள் கனவாக இருந்தது.

கனவை நனவாக்கும் முயற்சியில், ஊனுறக்கம் இல்லாமல் சில நாட்கள் ஈடுபட்டேன். முயற்சி முழுத் தோல்வியில் முடிந்தது.

அடியேன் தயாரித்த சிறு சிறு காணொலிகளில் கீழ்க்காண்பதும்[யூடியூப் இதையும் நிராகரித்தது] ஒன்று.

மனதைச் சற்றே தேற்றிக்கொள்ள அதை இங்கு வெளியிடுகிறேன்.


குறிப்பு: தோல்வி மேல் தோல்வி கண்டும் மனம் தளராத என் இனிய நண்பர்களில் ஒருவர், YouTube Create' உள்ளிடு கருவியைப்[App] பயன்படுத்தினால் கனவு நனவாகும் என்கிறார்.

அவர் கனவு நனவாவதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். ஹி... ஹி... ஹி!!!