எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

சாதனைகள் நிகழ்த்தும் விஞ்ஞானிகளும் ஒரு சாமானியனின் சந்தேகமும்!

செவ்வாய், வெள்ளி, புதன் போன்றவை[கிரகங்கள்] குறித்தும் பூமியின் துணைக் கோளான சந்திரன் பற்றியும் அறிவியலாளர்கள் ஆய்வுகளை  நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

சந்திரனில் கால் பதித்தும் நடந்தும் சாதனை நிகழ்த்திவிட்டார்கள். செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவது பற்றியும் விரிவான ஆய்வு நிகழ்த்தப்படுகிறதாம். [https://www.ariviyal.in/2011/11/blog-post_25.html] 

நம் நோக்கம் அவர்களின் ஆய்வுகள் குறித்து ஆராய்வதல்ல[அதற்கான குறைந்தபட்சத் தகுதிகூட நமக்கு இல்லை]; நீண்ட நாட்களாகக் கேட்க நினைத்த ஒரு கேள்வியை முன்வைப்பது மட்டுமே.

ஒரு காலக்கட்டத்தில், சந்திரனோ செவ்வாயோ புதனோ வியாழனோ, வேறு எதுவோ, அவற்றில் ஒன்றிலோ பலவற்றிலுமோ மனிதர்கள் தங்கி வாழ்வது சாத்தியம் ஆகும் என்றால்.....

ஆயுட்காலம் வெகுவாக நீட்டிக்கப்பட்டு, வாட்டும் வறுமையிலிருந்தும், உயிர் பறிக்கும் கொடிய நோய்களிலிருந்தும், போட்டி பொறாமை சூதுவாது வஞ்சகம் போன்ற கெட்டக் குணங்களிலிருந்தும் விடுபட்டு[பூமியில் சாத்தியப்படாதது] மனிதர்கள் அங்கெல்லாம் சுகபோகமாக வாழ்தல் நிகழுமா என்பது நம் கேள்வி.

மனிதர்களின் முயற்சியின்றித் தானாக அது நிகழாது” என்பது அறிவியலாளரின் பதிலாக இருக்குமாயின், எதற்கு வீணான இம்மாதிரி ஆராய்ச்சிகள்? கோடி கோடி கோடிக் கணக்கில் பண விரயம்?