எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 10 செப்டம்பர், 2025

‘அது’ சட்டவிரோதக் குடியேற்றம்! ‘இது’?

பிரதமர் மோடி, கடந்த மாதம் தன் சுதந்திரத் தின உரையில், "கடுமையான கவலை & சவால்" பற்றித் தேசத்தை எச்சரித்தார்[ஊடகச் செய்தி].

அந்த எச்சரிக்கை:

“சட்டவிரோதமாக வெளிநாட்டினர்[குறிப்பாக லோகிங்கியா & வங்கதேச முஸ்லிம்கள்] இந்த நாட்டில் குடியேற்றப்படுவது[இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல. அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்> இந்திய அரசு] இந்த நாட்டின் மக்கள் தொகையைக் குறைப்பதற்கான சதி.

இந்த ஊடுருவல்காரர்களால்[சட்டவிரோதக் குடியேறிகள்] நமது இளைஞர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது; இந்த ஊடுருவல்காரர்கள் நமது சகோதரிகள் &  மகள்களைக் குறிவைக்கிறார்கள்[?!]. இது பொறுத்துக்கொள்ள இயலாதது.”

மோடியின் இந்த எச்சரிக்கை முழுமையாக ஏற்கத்தக்கதே.

இதே மாதிரியானதொரு எச்சரிக்கையை மோடிக்கு விடுப்பது நம் கடமை.

அயல்நாட்டுக் குடியேறிகளால் இந்த நாட்டிலுள்ள இளைஞர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்றால், குறிப்பிட்டதொரு மாநிலத்தில்[எ-டு: தமிழ்நாடு] அயல் மாநிலத்தவர் கூட்டம் கூட்டமாக வைதொகையில்லாமல் குடியேறுவதால்[சட்டவிரோதம் அல்ல எனினும்] அந்தவொரு மாநிலத்து[தமிழ்நாடு] இளைஞர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது என்பதை மோடி ஏற்கத்தான் வேண்டும்.

ஏற்றுக்கொண்டு, குறிப்பிட்டதொரு மாநிலத்தில் பிற மாநிலத்தவர் ஓர் அளவு[கள ஆய்வின் மூலம் கணக்கிடலாம்]க்கு மேல் குடியேறுவதை[இது இன மோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதோடு, ஆட்சி அமைப்பதில் குழப்பங்களும் கலவரங்களும் உருவாகும்]த்  தடுக்கும் வகையில் சட்ட விதிகள் திருத்தப்படுதல் அவசியம். 

இதைச் செய்துமுடிப்பது இந்த நாட்டின் பிரதமரான மோடியின் கடமை ஆகும்.

உயரும் வாழ்க்கைத்தரமும் தாழும் மனிதக் குணங்களும்!

வெற்று மார்புடனும் பற்றாக்குறை ஆடையுடனும் நடந்துபோகிறவர்கள் நம் மூதாதையர்கள்; உழைக்கும் வர்க்கம்.

அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வயிற்றுப்பாட்டுக்காக மட்டுமே வேலை தேடிப் போகிறார்கள் என்பது தெரிகிறது.

நாளும் வறுமையுடன் உறவாடும் பலருக்கிடையே கூட்டு வண்டிகளில் பயணிப்போரும், குடை பிடித்துச் செல்வோரும் சற்றே வசதியுடன் வாழ்ந்தவர்களாக இருக்கக்கூடும்.

வண்டிகளுக்குப் பின்னே ஓடுபவர்கள் அடிமைகளாக இருக்கலாம்.

ரவிக்கை அணியாமல் சேலை மட்டுமே உடுத்துச் செல்லும் நம் தாய்க்குலம். அரைகுறை ஆடையில் அழகுப் பிரதேசங்களைக் காட்சிப்படுத்தும் அநாகரிகம் தலைதூக்காத காலம் அது.

இவர்கள் காலமெல்லாம் வறுமையுடன் உறவாடியவர்கள் என்றாலும், வஞ்சனை சூதுவாது பொறாமை கயமை போன்றக் கெட்டக் குணங்கள் பற்றிப் பெரிதும் அறியாதவர்கள் என்றே தோன்றுகிறது.

இந்தக் காணொலி தற்செயலாகக் கண்ணில்பட்டது.

கீழ்க்காண்பது ‘யூடியூப்’இல் தேடி எடுத்தது.

இரண்டையும் ஒப்பிட்டபோது, 1906க்கும் 2025க்கும் இடைப்பட்டக் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பிரமிக்கச் செய்தன. 

ஆனாலும், அன்றைய அப்பாவி மனிதர்களை, பொல்லாத பல கெட்டக் குணங்களின் புகலிடமாக மாறிவிட்ட இன்றைய மனிதர்களுடன் ஒப்பிட்டதில் மனம் வெகுவாகக்  கனத்தது.