எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 10 செப்டம்பர், 2025

‘அது’ சட்டவிரோதக் குடியேற்றம்! ‘இது’?

பிரதமர் மோடி, கடந்த மாதம் தன் சுதந்திரத் தின உரையில், "கடுமையான கவலை & சவால்" பற்றித் தேசத்தை எச்சரித்தார்[ஊடகச் செய்தி].

அந்த எச்சரிக்கை:

“சட்டவிரோதமாக வெளிநாட்டினர்[குறிப்பாக லோகிங்கியா & வங்கதேச முஸ்லிம்கள்] இந்த நாட்டில் குடியேற்றப்படுவது[இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல. அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்> இந்திய அரசு] இந்த நாட்டின் மக்கள் தொகையைக் குறைப்பதற்கான சதி.

இந்த ஊடுருவல்காரர்களால்[சட்டவிரோதக் குடியேறிகள்] நமது இளைஞர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது; இந்த ஊடுருவல்காரர்கள் நமது சகோதரிகள் &  மகள்களைக் குறிவைக்கிறார்கள்[?!]. இது பொறுத்துக்கொள்ள இயலாதது.”

மோடியின் இந்த எச்சரிக்கை முழுமையாக ஏற்கத்தக்கதே.

இதே மாதிரியானதொரு எச்சரிக்கையை மோடிக்கு விடுப்பது நம் கடமை.

அயல்நாட்டுக் குடியேறிகளால் இந்த நாட்டிலுள்ள இளைஞர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்றால், குறிப்பிட்டதொரு மாநிலத்தில்[எ-டு: தமிழ்நாடு] அயல் மாநிலத்தவர் கூட்டம் கூட்டமாக வைதொகையில்லாமல் குடியேறுவதால்[சட்டவிரோதம் அல்ல எனினும்] அந்தவொரு மாநிலத்து[தமிழ்நாடு] இளைஞர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது என்பதை மோடி ஏற்கத்தான் வேண்டும்.

ஏற்றுக்கொண்டு, குறிப்பிட்டதொரு மாநிலத்தில் பிற மாநிலத்தவர் ஓர் அளவு[கள ஆய்வின் மூலம் கணக்கிடலாம்]க்கு மேல் குடியேறுவதை[இது இன மோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதோடு, ஆட்சி அமைப்பதில் குழப்பங்களும் கலவரங்களும் உருவாகும்]த்  தடுக்கும் வகையில் சட்ட விதிகள் திருத்தப்படுதல் அவசியம். 

இதைச் செய்துமுடிப்பது இந்த நாட்டின் பிரதமரான மோடியின் கடமை ஆகும்.