மனித இனம் அழியும் என்பதில் அறிவியலாளருக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அது எப்போது நிகழும் என்பதுதான் கேள்வி. பலர் அந்த அழிவு மிக அருகில் இருப்பதாகவே கருதுகிறார்கள்https://www.bbc.com/tamil/science-53326369
அடுத்த நூற்றாண்டுக்கு முன்பே அந்த அழிவு நிகழலாம் என்று கூறுகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வைராலஜிஸ்ட் ஃப்ரான்க் ஃபென்னர். மக்கள்தொகைப் பெருக்கம், சூழலியல் அழிப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கும் என்பது அவர் வாதம்.
ஆக, மனித இன அழிவு 100% உறுதி என்பது உறுதியானது[மீண்டும் பிறக்க வாய்ப்பு இல்லாததால், இந்தப் பிறவியிலேயே இயன்றவரை இன்பங்களை அனுபவிப்பீர். ஹி... ஹி... ஹி!!!].
இது குறித்து அடியேனின் மரமண்டையில் எழுந்த பல சந்தேகங்களில் சில:
*ஒவ்வோர் உடம்பிலும் அழிவே இல்லாத ஓர் ஆன்மா இருப்பதாகச் சொல்கிறார்கள் ஆன்மிகவாதிகள். மனித இன அழிவுக்குப் பிறகு, மீண்டும் மீண்டும் பிறந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லாததால் எண்ணற்ற மனித ஆன்மாக்களின் நிலை என்னவாகும்?
அவை அண்டவெளியிலேயே நிரந்தரமாக, அலைந்து திரிந்துகொண்டிருக்குமா?
*செய்யும் பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் ஏற்ப நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் செல்வோர், ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு அறவே இல்லாமல்போவதால்[இப்போது இருந்துகொண்டிருப்போரின் கதி?> விடை தெரியாமல் மண்ட காய்கிறது!], அவற்றின்[சொர்க்கம்&நரகம்] தேவை என்னவாக இருக்கும்?
*நல்லன மட்டுமே செய்து வாழும் புண்ணியர்களான சத்துக்குரு ஜக்கி, பாபா ராம்தேவ், ஸ்ரீரவிசங்கர் போன்ற ஞானிகள்[அவர்களைப் போன்றவர்களும்] மீண்டும் இந்த உலகில் பிறக்கப்போவதில்லை; அருள்பாலிக்கும் வேலையும் அவர்களுக்கு இல்லாததால் முழுமுதல் கடவுளுடன் இரண்டறக் கலந்துவிடுவார்களா?
*அனைத்து உலகங்களையும் அனைத்து உயிர்களையும் படைத்ததோடு அமையாமல், மனிதர்களுக்கு மட்டும் ஆறறிவைக் கொடுத்து, நல்லதும் கெட்டதுமான செயல்களில் ஈடுபடுத்தி, அவற்றுக்கான பலன்களைத் துய்க்கச் செய்யும் கடவுள் அப்புறம் என்ன செய்வார்?
தான் படைத்த, அண்டவெளியில் சுழலும் கோள்களையும், நட்சத்திரங்களையும், பூமியல் வாழும் பிற உயிரினங்களின் போராட்டங்களையும் வேடிக்கை பார்த்துப் பொழுதைக் கழிப்பாரா?
அல்லது.....
தன்னை வழிபட்டு விழாக்கள் எடுத்துக் கூத்தடித்துக் கொண்டாடும் மனிதர்கள் இல்லாததால் பெரிதும் வருந்தி நொந்து வெந்து மனம் புழுங்கிக் கிடப்பாரா?
விரைவில், வெள்ளியங்கிரியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிற ஜக்கி வாசுதேவனார் என்னும் நம் குருவை[கடவுளின் குரு> ‘சத்குரு’]ச் சந்தித்து மேற்கண்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய இருக்கிறேன். இது குறித்த ஒரு பதிவு பின்னர் வெளியாகும்.

