//பார்லிமென்டில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பி.,க்களுக்கு, 'சன்சத் ரத்னா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது//[https://www.dinamalar.com].
அதென்ன ‘சன்சத்’? இந்திக்காரன்களுக்கு மட்டுமே புரிந்தால் போதும் என்கிறான்களா நம்மை ஆளும் ‘இந்தி’யன்கள்?
“எங்கும் எதிலும் இந்திதான். புரியலேன்னா மூடிகிட்டுச் சும்மா கிட” என்பார்களோ?
தமிழ் முதலான ஏனைய இந்திய மொழிப் பெயர்கள் சூட்டினால்[மாற்றி மாற்றி] இந்திய ஒருமைப்பாடு சிதைந்துவிடுமா?
‘இந்தி’ய அரசு வழங்கும் விருதுகள் & திட்டங்களுக்கான பெயர்களை ஓரளவுக்குத் திரட்டிப் பட்டியலிட்டிருக்கிறேன்[கீழே].
பட்டியலை வாசித்துவிட்டு இது இந்தியாவா, ‘இந்தி’யாவா என்று இந்தியர் எவரும் முணுமுணுக்க வேண்டாம். முணு முணுப்பதே தேசத் துரோகம் ஆகும்!
சிறைவாசம் உறுதி!!
அர்ஜூனா விருது
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது
பாரத ரத்னா
பத்மஸ்ரீ
பத்ம பூஷன்
பத்ம விபூஷன்
பரம் வீர் சக்கரா
ஜன் விகாஸ் காரியகாரம்
ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபியான்
பிரதம மந்திரி மாத்ரி வந்தனா யோஜனா
ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான்
நிதி ஆயோக்
* * * * *
வயிறு எரியுதா? அடி நெஞ்சு பதறுதா? கவுந்து படுத்துகிட்டுக் கதறுங்க!

